ஆடியில் சூரியன் கடக ராசியில் பயணம் செய்வார். தட்சிணாயன புண்ணிய காலமான ஆடி மாதத்தில் வரும் அமாவாசை நாள் முன்னோர் வழிபாட்டிற்கு ஏற்ற நாள். ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டும். இந்த மாதத்தில் என்னென்ன முக்கிய பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது என்று பார்க்கலாம்.
தட்சிணாயனம் மழைக்காலத்தின் துவக்கத்தைக் குறிக்கிறது. அதாவது, வளத்தினை, தொடர்ந்து பண்டிகைகள், தெய்வீக வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் ஆடி மாதம்தான் துவக்க மாதமாக அமைகிறது.
மழைகாலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும் உடல் நலம் பெறவும், நோய்கள் பரவாமல் இருக்கவும் நம் முன்னோர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தினார்கள்.
- ஆடி 1ஆம் தேதி திங்கள் ஆடி மாதப் பிறப்பு. ஆடிப்பண்டிகை கொண்டாட்டம், அமாவாசை
- ஆடி 2ஆம் தேதி செவ்வாய் கிழமை ஆஷாட நவராத்திரி.
- ஆடி 3ஆம் தேதி புதன் கிழமை சந்திர தரிசனம் , ஹிஜிரி வருடப் பிறப்பு
- ஆடி 5 ஆம் தேதி வெள்ளிகிழமை சதுர்த்தி விரதம்.
- ஆடி 6 ஆம் தேதி சனிக்கிழமை ஆடிப்பூரம்
- ஆடி 8ஆம் தேதி திங்கள் கிழமை சஷ்டி விரதம்
- ஆடி 13ஆம் தேதி சனிக்கிழமை மொகரம் , ஏகாதசி விரதம்
- ஆடி 14 ஞாயிறு கிழமை பிரதோஷம்
- ஆடி 16 செவ்வாய்கிழமை பௌர்ணமி விரதம் , பௌர்ணமி
- ஆடி 17 புதன் கிழமை திருவோண விரதம்
- ஆடி 18 வியாழக்கிழமை ஆடிப் பெருக்கு
- ஆடி 19 வெள்ளி கிழமை சங்கடஹர சதுர்த்தி விரதம்
- ஆடி 21 ஞாயிறுக்கிழமை நட்பு நாள்
- ஆடி 24 புதன்கிழமை ஆடி கிருத்திகை , கார்த்திகை விரதம்
- ஆடி 27 சனிக்கிழமை ஏகாதசி விரதம்
- ஆடி 28 ஞாயிறுக்கிழமை பிரதோஷம்
- ஆடி 29 திங்கள் கிழமை மாத சிவராத்திரி
- ஆடி 30 செவ்வாய்க்கிழமை சுதந்திர தினம் , ஆடி அமாவாசை
- ஆடி 31 புதன் கிழமை அமாவாசை.
- ஆடி 32 வியாழக்கிழமை சந்திர தரிசனம் , சிம்ம சங்கராந்தி , சபரிமலையில் நடை திறப்பு , விஷ்ணுபதி புண்யகாலம்