காளான் என்றாலே அது ஃபிரெஷ்ஷான உணவுதான். அதை அப்படியே பறித்து சமைத்தால்தான் அதன் மண் மனமும், சுவையும் , அதில் உள்ள ஊட்டச்சத்துகளும் மாறாமல் அப்படியேக் கிடைக்கும். இருப்பினும் அதை உடனடியாக சமைக்க முடியவில்லை எனில் அதை வாங்கி ஃபிரிட்ஜி வைத்து மறுநாள் சமைப்பதைத் தவிற வேறு வழியில்லை.
அதேசமயம் சூப்பர் மார்கெட்டுகளிலும் காளான் பேக் செய்யப்பட்டு குளிரூட்டப்பட்டுதான் சந்தைக்கு வருகிறது. இருப்பினும் அதை மேலும் நாம் வீட்டில் ஃபிட்ஜில் வைத்து உண்பது நல்லதா என்பதை அலசுகிறது இந்தக் கட்டுரை.
காளானை ஃபிரிட்ஜில் வைக்க முடிவு செய்துவிட்டால் அதிகபட்சமாக ஒரு வாரம் வரை மட்டுமே வைக்க வேண்டும். அதுவும் ஒரு வாரத்திற்குள் அந்த காளானின் நிறம் மாறுதல், சுருங்குதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே சமைத்துவிடுவது அவசியம்.
அப்படி ஒரு வாரம் வரை ஃபிரிட்ஜில் வைத்தால் அதன் ஊட்டச்சத்துகள் அழிந்துவிடுவதை தடுக்க முடியாது. உதாரணமாக காளான் வைட்டமின் B சத்துக்கு சிறந்த உணவு. அதேபோல் காப்பர், பொட்டாசியம், வைட்டமின் D ஆகியவையும் அதில் அடங்கியிருக்கும்.
இந்த ஊட்டச்சத்துகள் ஃபிரிட்ஜில் வைக்கும்போது முழுமையாகக் கிடைக்காது. அதேபோல் காளான் நீர் நிறைந்த உணவு. அந்த நீரில்தான் உடலுக்குத் தேவையான ரிபோபிளேவின் (riboflavin) , நியாச்சின் (niacin), ஃபொலேட் (folate) போன்ற சத்துகள் உள்ளன. அவை நாட்கள் செல்ல செல்ல நீர் வற்றி அழிந்துவிடும். அதோடு மண்ணிலிருந்து பிடுங்கும்போது கிடைக்கும் அதன் இயற்கை மணமும் இருக்காது.காளான் ஃபிரிட்ஜில் வைக்கிறீர்கள் எனில் அதை அப்படியே சிலர் வைப்பார்கள். சிலர் கழுவி வைப்பார்கள். இவை இரண்டுமே தவறு. அதன் தண்டுகளை நீக்கி, ஏதேனும் கரும்புள்ளிகள் தென்பட்டால் அவற்றை களையெடுத்து அதன்பின் டப்பாவில் அடைத்து வைக்க வேண்டும். கழுவி வைத்தால் அதன் ஊட்டச்சத்து குறைந்துவிடும். அதோடு அதில் கூடுதலாக நீர் கோர்த்து சமைக்கும்போது குழைந்துவிடும்.
எனவே காளானை சமைக்க ஆசைப்பட்டால் உடனே வாங்கி உடனே சமைக்க முயற்சி செய்யுங்கள். ஒருவேளை உடனடியாக சமைக்க முடியவில்லை என்றால் மட்டுமே அவசர காலத்திற்கு ஃபிரிட்ஜில் சேகரித்து வையுங்கள். காளான் வாங்க அருகில் இருக்கும் காய்கறிக் கடைகள், சந்தை இருந்தால் அங்கு ஃபிரெஷ்ஷாக கிடைக்கும். சூப்பர் மார்கெட்டுகளில் வாங்காதீர்கள். நேரம் கிடைத்தால் நீங்களே வீட்டில் காளான் வளர்த்தும் சமைக்கலாம்.