சோன் பப்டி இப்படி செய்து பாருங்கள்….
இந்த தீபாவளி பண்டிகைக் காலத்தில் தயாரிக்கப்படும் மிகவும் பிரபலமான இனிப்பு வகைகளில் இதுவும் ஒன்று என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அதை நாம் கடைகளில் வாங்கி தான் சுவைத்திருப்போம். வீட்டிலேயே சோன்பப்படி செய்வது மிகவும் எளிது என்பது பலருக்கு தெரியாது. இந்த இனிப்பை உங்கள் வீட்டிலும் செய்து அசத்துங்கள். சோன்பப்டி வீட்டில் எளிதாக செய்வதற்கான செய்முறைகளை கீழே மிகவும் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது, இதனை பயன்படுத்தி மிகவும் எளிதாக செய்து சுவைத்து பாருங்கள்.
நாங்கள் மேலும் பல புதிய தீபாவளி இனிப்புகளை செய்ய ரெசிபிகளை தொகுத்துள்ளோம். இந்த லிங்கை கிளிக் செய்து, அந்த புதிய தீபாவளி இனிப்பு பலகாரங்களை செய்து உங்கள் அன்பானவர்களை அசத்துங்கள்.
மேலும் அறிய: எந்த காய்கறிகள் மற்றும் பழங்களை தோல் நீக்க கூடாது?
தேவையான பொருட்கள்
- 1 கப் சர்க்கரை
- 1 கப் கடலை மாவு
- ½ கப் மைதா மாவு
- ½ கப் நெய்
- 1 மேஜைக்கரண்டி பிஸ்தா
- 1 மேஜைக்கரண்டி பாதாம்
- 1 மேஜைக்கரண்டி முந்திரி
- 2 சிட்டிகை உப்பு
- ½ எலுமிச்சம் பழம்
- தேவையான அளவு வெண்ணெய்
சோன்பப்டி தயாரிக்கும் முறை
செய்முறை
-
- முதலில் பாதாம், பிஸ்தா, மற்றும் முந்திரியை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- எலுமிச்சம்பழத்தை பிழிந்து சாறு எடுத்து வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் அரை கப் அளவு நெய் ஊற்றி அதை உருக விடவும்.
- நெய் உருகியதும் அதில் கடலை மாவை போட்டு அதை ஒரு கரண்டியின் மூலம் நன்கு கலந்து விடவும்.
- பின்பு அதில் மைதா மாவை போட்டு அதையும் நன்கு கலந்து விடவும்.
- பின்னர் அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு அதை சுமார் 6 லிருந்து 8 நிமிடம் வரை வதக்கவும்.
- 8 நிமிடத்திற்கு பிறகு மாவு நன்கு உருகி சிறு சிறு பபிள்ஸ் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி சிறிது நேரம் ஆற விடவும்.
- அது ஆறுவதற்குள் ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் அரை கப் அளவு தண்ணீர் ஊற்றி பின்பு சர்க்கரையை அதில் போட்டு ஒரு கரண்டி மூலம் அதை நன்கு கரைத்து விட்டு அடுப்பை முற்றிலுமாக குறைத்து அதை சுமார் 5 லிருந்து 7 நிமிடம் வரை கொதிக்க விடவும்.
மேலும் அறிய: முட்டை இல்லாத வாழைப்பழ கோதுமை கேக் செய்துபாருங்கள்!!
- 5 நிமிடத்திற்குப் பிறகு அதில் நன்கு நுரை வந்ததும் அதில் 2 சிட்டிகை அளவு உப்பை சேர்த்து அதனுடன் எலுமிச்சை சாறையும் அதில் ஊற்றி அதை நன்கு கலந்து விடவும்.
- பின்பு அதில் சிறிது பெரிய அளவு பபிள்ஸ் வந்ததும் ஒரு கிண்ணத்தில் சிறிதளவு தண்ணீர் எடுத்து அதில் கொதித்து கொண்டிருக்கும் இந்த சிரப்பில் இருந்து ஒரு கரண்டியின் மூலம் சிறிதளவு எடுத்து இந்த கிண்ணத்தில் இருக்கும் தண்ணீரில் ஊற்றவும்.
- 3 வினாடிகளுக்கு பிறகு நாம் கிண்ணத்தில் ஊற்றிய அந்த சிரப்பை எடுத்து உருட்டினால் அது நாம் உருட்டும் வடிவிற்கு வரவேண்டும்.
- அந்த பதம் வந்ததும் ஒரு கடாயை எடுத்து அதில் நெய்யை நன்கு தடவி வைத்து கொள்ளவும்.
- பின்பு அடுப்பை அணைத்து விட்டு இந்த சிரப்பை எடுத்து நெய் தடவிய pan னில் ஊற்றி விடவும்.
- அடுத்து அதை ஒரு போர்க் ஸ்பூனின் மூலம் அதை நன்கு கிளறி விட்டு கொண்டே இருக்கவும்.
- பிறகு அது சிறிது கெட்டியானதும் அதை 2 போர்க் ஸ்பூனின் மூலம் அது நன்கு கெட்டியாகும் வரை தூக்கி தூக்கி கிளறி விடவும்.
- அது நன்கு கெட்டியானதும் நம் கைகளில் நன்கு நெய் தடவிக்கொண்டு அது நன்கு வெள்ளை நிறம் வரும் வரை அதை நன்றாக இழுத்து இழுத்து விட வேண்டும். (அது சூடாக இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும்.)
- எவ்வளவுக்கு எவ்வளவு நன்றாக இழுத்து விடுகிறோமோ அந்த அளவுக்கு நம் சோன்பப்படி மிருதுவாகவும் மற்றும் நன்கு நூல் நூலாக இருக்கும்.
- அது நன்கு வெள்ளை நிறம் வந்ததும் அதை நாம் செய்து வைத்திருக்கும் கடலை மாவு கலவையில் போட்டு அதை நன்கு இழுத்து இழுத்தே அதை நன்கு மாவுடன் கலந்து விடவும்.
- பின்பு ஒரு ட்ரையில் வெண்ணெய்யை தடவி இந்த கலவையை நன்கு பரப்பி விட்டு அதன் மேலே நாம் நறுக்கி வைத்திருக்கும் பாதாம், பிஸ்தா, மற்றும் முந்திரியை போடவும்.
- சரியாக 2 நிமிடத்திற்கு பிறகு அதை ஒரு கத்தியின் மூலம் உங்களுக்கு பிடித்தமான வடிவில் கோடுகளை போட்டு அதை சிறிது நேரம் ஆற விட்டு பின்பு எடுத்து பரிமாறவும்.
இப்பொழுது மிருதுவான மற்றும் மிகவும் சுவையான சோன்பப்படி தயார். இதை உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள்.
மேலும் அறிய: சத்தான கருப்பு உளுந்து அடை