Diwali Sweets Recipes in Tamil | தீபாவளி ஸ்வீட் வகைகள்

Updated On

தீபாவளி ஸ்வீட் செய்வது எப்படி? | Diwali Sweets Recipes

diwali snacks recipes in tamil

எளிமையான தீபாவளி பலகாரங்கள் | Easy South Indian Diwali Sweets Recipes

தீபாவளி அன்று பட்டாசு எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே போன்று தீபாவளி பலகாரமும்(diwali palagaram) பிரிக்க முடியாத ஒன்றாகும். இந்த வருட தீபாவளிக்கு என்ன ஸ்வீட் செய்வது என்று யோசித்து கொண்டிருக்கும் பெண்களுக்கு இந்த பதிவு உபயோகமாக இருக்கும்.

தீபாவளி அன்று மிகவும் எளிதாக செய்யக்கூடிய பலகாரங்களை(quick and easy diwali sweets recipes) இந்த பதிவில் கொடுத்துள்ளோம். இதை நீங்களும் செய்து உங்கள் உறவுகளுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்களுடன், இந்த ஸ்வீட்டையும் கொடுத்து மகிழுங்கள்.

தேங்காய் பர்பி செய்முறை | Coconut Burfi in Tamil

diwali sweets tamil nadu recipes

தேங்காய் மிட்டாய் செய்ய மூன்று பொருட்கள் மட்டுமே போதும். வீட்டில் செய்யக்கூடிய ஸ்வீட் வகைகளில்(Sweet Recipes in Tamil at Home) இது மிகவும் எளிது மற்றும் மிகவும் குறைவான நேரத்தில் செய்து முடித்து விடலாம்.

தேவையான பொருட்கள்

  1. துருவிய தேங்காய் – 1 கப்
  2. சர்க்கரை – ¾ கப்
  3. தண்ணீர் – ¼ கப்
  4. ஏலக்காய் தூள் – சிறிது
  5. நெய் – 2 டீஸ்பூன்

செய்முறைகள் (Recipe for Barfi Sweets for Diwali)

  • புதிதாக உடைத்த தேங்காயை துருவி எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு அகலமான தட்டு எடுத்து, அதில் தேங்காய் எண்ணெய் அல்லது நெய் தடவி தனியாக வைக்கவும்.
    பின்னர் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும்  தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வைக்கவும்.
  • சர்க்கரை கரையும் வரை தொடர்ந்து கிளறவும். இது ஒரு கம்பி பதம் வரும் வரை தொடர்ந்து கொதிக்க விடவும்.
  • இப்போது ஏலக்காய் தூள் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறிக்கொண்டே இருக்கவும். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு சிறிய குமிழ்கள் உருவாகும்.
  • இப்போது நெய் சேர்த்து தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்கவும். சற்று நேரம் கிளறியதும், இது கெட்டியாக ஆரம்பிக்கும்.
  • பாத்திரத்தின் ஓரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும். அப்போது அடுப்பை அணைத்து, இந்த கலவையை நெய் தடவிய தட்டில் மாற்றி, சமமாக அழுத்தி விடவும்.
  • இதை 2 நிமிடம் ஆறவிடவும். பின்னர் உங்களுக்கு பிடித்தமான வடிவத்தில் கத்திக் கொண்டு வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

சுவையான தேங்காய் மிட்டாய் தயார்.

பாதுஷா செய்வது எப்படி | Badusha Sweet Recipe in Tamil

indian sweet recipes in tamil

Diwali Easy Sweet Recipes

தேவையான பொருட்கள்

  1. மைதா மாவு – 2 கப்
  2. பேக்கிங் பவுடர் – 1/2 ஸ்பூன்
  3. பேக்கிங் சோடா – 1/4 ஸ்பூன்
  4. உப்பு – ஒரு பின்ச்
  5. நெய் – 1/2 கப்
  6. சர்க்கரை – 2 கப்
  7. எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
  8. ஏலக்காய் தூள் – சிறிதளவு
  9. ஃபுட் கலர் – 1 பின்ச்

பாதுஷா செய்முறை (south indian sweet recipes in tamil)

  • ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் நெய்யை லேசாக சூடு செய்து மாவில் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • இவை அனைத்தையும் நன்றாக கலந்ததும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவு பதத்திற்கு நன்றாக பிசையவும்.
  • ஐந்து நிமிடம் நன்றாக பிசைந்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதை அரை மணி நேரம் ஊற விடவும்.
  • அடுத்ததாக ஒரு கடாயில் இரண்டு கப் சர்க்கரை மற்றும் ஒரு கப் தண்ணீர் மற்றும் ஃபுட் கலர் சேர்த்து கலக்கவும். அடுப்பை விரைவான தீயில் வைத்து நன்றாக கொதிக்க விடவும். இதில் சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
  • இந்த பாகு ஒரு கம்பி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து ஓரமாக எடுத்து வைக்கவும்.
  • அடுத்ததாக நாம் பிசைந்து வைத்த மாவில் சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வட்ட வடிவில் தட்டி, நடுவில் ஒரு ஓட்டை போட்டு (மெதுவடை வடிவில்) எடுத்து வைக்கவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, மிதமான சூடானதும் அதில் பாதுஷா உருண்டைகளை ஒவ்வொன்றாக சேர்த்து சிவக்கும் வரை பொறித்து எடுக்கவும்.
  • இதை சற்று நேரம் ஆற விட்டு, பின்பு சர்க்கரை பாகில் சேர்க்கவும். பாகில் 5 நிமிடம் ஊற விட வேண்டும்.
  • 5 நிமிடத்திற்கு பிறகு வெளியே எடுத்து வைத்து பரிமாறலாம்.
  • மிகவும் எளிதான மற்றும் ஜூஸியான தீபாவளி ஸ்வீட் (easy diwali snacks recipes in tamil) இதுவாக தான் இருக்கும்.

பூந்தி லட்டு எப்படி செய்வது | Boondhi Laddu Recipe in Tamil

diwali tamil sweets recipes

கடலை மாவு லட்டு செய்வது எப்படி | Diwali Sweets Recipes

லட்டு ரெசிபி மிகவும் சுவையான தீபாவளி பலகாரமாகும். இதை நாம் வீட்டில் செய்வது(homemade diwali sweets) எளிது. லட்டு பிடிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். இதை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து அசத்துங்கள்.

லட்டு செய்ய தேவையான பொருட்கள்

  1. கடலை மாவு – 3 கப்
  2. பேக்கிங் சோடா – 2 பின்ச்
  3. சர்க்கரை – 3 கப்
  4. ஏலக்காய் தூள் – சிறிதளவு
  5. தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் கடலை மாவு பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தை விடவும் தண்ணீராக கரைக்கவும். இதை தனியாக எடுத்து வைக்கவும்.
  • ஒரு கடாயில் 3 கப் சர்க்கரை மற்றும் சர்க்கரை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து, சர்க்கரை நன்றாக கரையும் வரை கலக்கவும்.
  • அடுப்பை விரைவான தீயில் வைத்து நன்றாக கொதிக்க விடவும். இப்போது சிறிது ஏலக்காய் தூள் சேர்க்கவும்,  பாகு ஒரு கம்பி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் நன்றாக சூடு படுத்தி, அதில் கரைத்து வைத்த கடலை மாவை பூந்தி கரண்டியில் ஊற்றி பொரித்து எடுக்கவும்.
  • பொறித்த பூந்தியை சர்க்கரைப்பாகில் சேர்க்கவும். ஒவ்வொரு முறை பூந்தி பொரித்ததும் எண்ணெயை வடித்து அப்படியே சர்க்கரைப்பாகில் சேர்க்கவும்.
  • பூந்தி லேசாக வெந்ததும் வெளியே எடுக்க வேண்டும், பூந்தியை அதிக நேரம் வேக விடக்கூடாது.
  • பாகில் சேர்த்த பூந்தியை நன்றாக ஆற விடவும். நன்றாக ஆறியதும் அதில் கால்பங்கு கலவையை மட்டும் மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்து எடுக்கவும்.
  • அரைத்த கலவையை மீதமுள்ள பூந்தியுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • பின்னர் மற்றொரு கடாயில் நெய் சேர்த்து முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ளவும். இதை பூந்தி கலவையுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • பின்னர் கையில் நெய் தடவிக் கொண்டு பூந்தி கலவையில் சிறிய மாவு எடுத்து உங்களுக்கு தேவையான அளவில் உருண்டை செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது மிகவும் அருமையான பூந்தி லட்டு தயார்.

எள்ளு சீடை செய்வது எப்படி | Ellu Urundai Recipe in Tamil

diwali sweets tamil recipes

Healthy Sweet Recipes in Tamil

தேவையான பொருட்கள்

  1. பச்சரிசி –  200 கிராம்
  2. கருப்பட்டி – 150 கிராம்
  3. ஏலக்காய் – 2
  4. எள் – 100 கிராம்
  5. உப்பு – ஒரு பின்ச்
  6. எண்ணெய் – 1/2 லிட்டர்

செய்முறை

  • முதலில் பச்சரிசியை 2 மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும்.
  • அரிசி நன்றாக ஊறியதும், தண்ணீரை வடித்து ஒரு வெள்ளைத் துணியில் உலர விடவும்.
  • அரிசி லேசாக உலர்ந்ததும், அதை கொஞ்சம் கொஞ்சமாக மிக்ஸி ஜரில் சேர்த்து நன்றாக அரைத்து, சல்லடை வைத்து சலித்து எடுக்கவும்.
  • அடுத்து எள்ளை ஒரு கடாயில் போட்டு லேசாக வறுத்து எடுக்கவும்.
  • அடுத்ததாக, ஒரு கடாயில் கருப்பட்டி சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  • கருப்பட்டி கொதித்ததும் அதை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, எள், உப்பு, ஏலக்காய் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் கருப்பட்டி பாகு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த மாவு கலவையை அரை மணி நேரம் ஊறவிடவும்.
  • அரை மணி நேரம் கழித்து சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்து வைக்கவும்.
  • அடுத்து ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கவும், எண்ணெய் நன்றாக சூடானதும் அடுப்பை மிதமான தீயில் குறைத்து வைத்து விட்டு, உருண்டைகளை ஒவ்வொன்றாக சேர்க்கவும்.
  • உருண்டை லேசாக வெந்த பிறகு கலந்து விடவும். எண்ணெய் குமிழ் அடங்கியதும் வெளியே எடுக்கவும்.

இப்போது சுவையான எள்ளு உருண்டை தயார்.



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore