சூரிய கிரகணம் 2022 எப்போது? | Suriya Kiraganam 2022 Date and Time in Tamil

Updated On

சூரிய கிரகணம் எப்போது தோன்றும் | Suriya Kiraganam 2022: Date and Time in Tamil

சூரியன் – சந்திரன் – பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணம் என்பது ஏற்படும். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வருவதால், சூரியனை நம்மால் பார்க்க முடியாது. அதை சூரிய கிரகணம் என்கிறோம். இந்த ஆண்டு தீபாவளிக்கு மறுநாள் அதாவது அக்டோபர் 25ம் தேதி சூரிய கிரகணம் நிகழும்.

இந்த ஆண்டு மொத்தம் நன்கு கிரகணங்கள் (how many eclipse in 2022) நிகழும், அதில் இரண்டு கிரகணங்கள் ஏற்கனவே முடிந்து விட்டது. இன்னும் இரண்டு கிரகணங்கள் நிகழவுள்ளது. அக்டோபர் 25 அன்று சூரிய கிரகணமும், நவம்பர் 8 அன்று சந்திர கிரகணமும் நிகழ இருக்கிறது.

இந்தியாவில் அடுத்து 5 ஆண்டுகளுக்கு சூரிய கிரகணம் தெரியாது என்பதனால் இந்த ஆண்டு சூரிய கிரகணம் இந்தியாவில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சூரிய கிரகணம் 2022 நேரம் இன்று | Suriya Kiraganam 2022 Date and time

தீபாவளிக்கு மறுநாள் அமாவாசை அன்று, அக்டோபர் 25-ந்தேதி மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழும். இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் எந்தெந்த நகரங்களில் அதிக நேரம் தெரியும் மற்றும் குறைந்த நேரம் தெரியும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

குஜராத்தின் துவாரகா நகரில் அதிக அளவாக 1 மணிநேரம் 45 நிமிடங்களும், மும்பையில் 1 மணிநேரம் 19 நிமிடங்களும், ஜெய்ப்பூரில் 1 மணிநேரம் 18 நிமிடங்களும், டெல்லியில் 1 மணிநேரம் 12 நிமிடங்களும் நீடிக்கும். மிக குறைந்த அளவாக கொல்கத்தா நகரில் 11 நிமிடங்கள் வரை நீடிக்கும்.

தமிழகத்தின் சென்னையில் 5.14 மணிக்கு ஏற்பட தொடங்கும் சூரிய கிரகணம் 30 நிமிடங்கள் வரை நீடிக்கும்.

இந்தியாவின் மேற்கு நகரங்களான போர்பந்தர், காந்திநகர், மும்பை, சில்வாசா, சூரத் மற்றும் பனாஜி நகரங்களில் ஒரு மணிநேரத்திற்கும் கூடுதலாக சூரிய கிரகணம் ஏற்படும். சூரியனில் இருந்து வரும் புறஊதா கதிர்களில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

கிரகணத்தின் போது செய்யக் கூடாதவை: (Suriya Kiraganam 2022)

  1.  சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க கூடாது.
  2. கிரகணத்தின் போது கர்ப்பிணி பெண்கள் வெளியே செல்ல கூடாது.
  3. கிரகணத்தின் போது எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும், எனவே இந்த நேரத்தில் எந்த சுப காரியமும் செய்யக்கூடாது.
  4. கிரகணத்தின் போது பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
  5. கிரகணத்தின் போது ஊசியில் நூல் கோர்ப்பது, தையல் வேலை பார்ப்பது போன்றவை கூடாது.

கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை:

  1. தர்ப்பை அல்லது துளசி இலைகளை உணவு மற்றும் தண்ணீரில் போடவும். அதனால் கிரகணத்தின் எதிர்மறை தாக்கம் அதில் ஏற்படாமல் இருக்கும். கிரகணத்திற்குப் பிறகு அவற்றை உட்கொள்ளலாம்.
  2. கிரகண காலத்தில், ஸ்தோத்திரங்கள் சொல்வதனால், பலன்கள் பன்மடங்கு கிடைக்கும்.
  3. கிரகணத்தின் போது, கடவுள் வழிபாட்டில் அதிகபட்ச நேரத்தை செலவிடுங்கள்.
  4. வீட்டின் பூஜை அறை கதவை மூடி வைக்கவும். அப்போது கோவில்களின் கதவுகளும் மூடப்பட்டிருக்கும்.
  5. கிரகணம் முடிந்ததும் குளித்து விட்டு தான் பிற வேலைகளை தொடங்க வேண்டும்.


திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore