ஒற்றைத் தலைவலி என்பது பெரும்பாலானோருக்கு ஏற்படும் ஒரு கடுமையான பிரச்சினையாகும். இதைத் தீர்ப்பதற்கு நாம் வீட்டிலேயே சில வழிமுறைகளை கையாளலாம். நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இந்த தலைவலியை போக்க முடியும்.
பல்வேறு வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. ஒற்றை தலைவலி ஏற்படும் போது ஒரு டம்ளர் கேரட் சாறில் சிறிது வெள்ளரிக்காய் சாறு மற்றும் பீட்ரூட் சாறு கலந்து குடித்து வந்தால் ஒற்றை தலைவலி குறையும்.
2. சந்தனத் தூளை எடுத்து நீர் விட்டு குழைத்து நெற்றியில் தடவி நன்கு காய்ந்ததும் கழுவி வந்தால் ஒற்றை தலைவலி குறையும்.
3. 200 மில்லி பசலைக்கீரை சாறு மற்றும் 300 மில்லி கேரட் சாறு இந்த கலவையை தினமும் குடித்து வந்தால் ஒற்றை தலைவலி குறையும்.
4. கவிழ்தும்பை வேர், கறி மஞ்சள் இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து துணியில் தடவி, திரியாக்கி நெருப்பில் கொளுத்தி அந்த புகையை சுவாசித்து வந்தால் தலைபாரம் மற்றும் ஒற்றைத் தலைவலி ஆகிய இரண்டும் குறையும்.
5. ராகி மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து பேஸ்ட் போல் செய்து தலையில் தடவி வர தலைவலி குறையும்.