இண்டர்நெட் பில்லியனர்கள் : உலகின் 10 பெரும் பணக்காரர்கள் இவர்கள் தான்.!

Updated On

உலகின் பில்லியனர்கள் பட்டியலை பார்த்தால், பெரும்பாலானோர் தொழில்நுட்ப நிறுவனங்கள் மூலம் சம்பாதித்தவர்கள் என தெரிந்துகொள்ளலாம். இணைய நிறுவனங்கள் மூலம் சம்பாதித்த பெரும் பணக்காரர்களின் பட்டியலை இங்கு காணலாம்.

உலகின் பெரிய இணைய நிறுவனங்களின் பட்டியலை எடுத்துக்கொண்டால், இணைய வர்த்தம் மற்றும் சமூக வலைதள நிறுவனங்கள் பெருமளவில் வளர்ந்துள்ளன. அமேசானின் நிறுவனர் ஜெப் பெசோஸ் உலகின் மிகப்பெரிய இணைய பணக்காரராக உள்ளார். கடந்த சில வருடங்களாக தொடர்ந்து உயர்ந்து வரும் அவரின் மொத்த சொத்து மதிப்பு, இன்னும் சில மில்லியன் டாலர்கள் உயர்ந்தால், அவர் உலகின் மிகப்பெரிய பணக்காரராக மாறி விடுவார்.

இணைய நிறுவனங்கள் மூலம் சம்பாதித்த பெரும் பணக்காரர்களின் பட்டியல் இதோ.

1) ஜெப் பெசோஸ் – Jeff Bezos (82 பில்லியன் டாலர்)

உலகின் பெரிய இணைய வர்த்தக சில்லறை விற்பனையாளர் மற்றும் வருமான அடிப்படையில் உலகின் மிகப்பெரிய இணைய நிறுவனமான அமேசான், 1994ல் ஜெப் பெசோஸ்-ஆல் நிறுவப்பட்டது. தனது சொத்தில் பெரும் பகுதியை அமேசான் மூலம் பெற்ற இவர், உலகின் மூன்றாவது பெரிய பணக்காரராக உள்ளார். அமேசான் பங்கு மதிப்பு பெருமளவில் உயர்ந்து வருவதால், அவரின் சொத்து மதிப்பும் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து உயர்கிறது. அமேசான் இணைய வர்த்தகம் மட்டுமின்றி அமேசான் வெப் சர்வீஸ் என்னும் கிளவுட் சேவையும் வழங்குகிறது. ப்ளூ ஆரிஜின் மற்றும் பெசோஸ் எக்ஸ்பெடிசன்ஸ் என மேலும் இரு நிறுவனங்களை நிறுவியுள்ளார் ஜெப்.

2) மார்க் சக்கர்பெர்க்(59.4பில்லியன் டாலர்)

உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமான பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் உலகம் முழுவதும் பரிச்சையமானவர். இவர் தனது கல்லூரி நண்பருடன் சேரந்து ஹார்வர்டு பல்கலைகழகத்தில் பேஸ்புக்கை கண்டறிந்தார். இவர் தான் உலகின் இளைய மற்றும் பணக்கார இணைய தொழில்முனைவோர். தற்போது இவர் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப், மெசன்ஞர் என பல சமூக வலைதளம் மற்றம் செயலிகளை தனதாக்கியுள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பின் அடிப்படையில்,உலகின்5வது பெரிய பணக்காரர்.

3) லேரி பேஜ் (49.3 பில்லியன் டாலர்)

கூகுளின் இணை நிறுவனர் மற்றும் ஆல்பாபெட் நிறுவனத்தின் சி.ஈ.ஓ லாரி பேஜ் அவர்கள் , இணைய தலைமுறை தொழில்முனைவோருக்கு ஒரு எடுத்துக்காட்டு. இணையதளத்தை அடிப்படையாக கொண்டது கூகுளின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள். இதன் பெரும்பாலான வருமானம் இணைய விளம்பரங்கள் வாயிலாக கிடைக்கிறது. இந்நிறுவனத்தை இருவர் துவங்கியதால், பங்குகள் இருவரிடத்திலும் உள்ளது. லாரி பேஜ் மற்றும் செர்ஜி யின் சொத்துக்களை ஒன்று சேர்த்தால், அது பில்கேட்ஸ்-ன் சொத்து மதிப்பை விட அதிகம்.

4) செர்ஜி பெரன்(43.1 பில்லியன் டாலர்)

கூகுளின் இணை நிறுவனர் மற்றும் ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைவர் செர்ஜி பெரன். இவரும் லாரி பேஜ் சேர்ந்து ஸ்டேன்ட்போர்டு பல்கலைகழகத்தில் கூகுளை கண்டறிந்தனர். இது தற்போது உலகின் மிகப் பிரபலமான தேடுபொறி ஆகும். இவர் இணைய தலைமுறை தொழில்முனைவோருக்கு ஒரு முன்னுதாரணம்.

5) ஜேக் மா(30.9 மில்லியன் டாலர்)

உலகம் முழுக்க உள்ள இணைய வர்த்தக நிறுவனமான Alibaba.com ன் நிறுவனர் மற்றும் சி.ஈ.ஓ வான இவர், அலிபாபா குழுமத்தின் கீழ், பல இணைய தயாரிப்புகள் மற்றும் சேவைகள் சார்ந்த தொழில்கள், இ-பேமெண்ட் சிஸ்டம், கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகளையும் வழங்குகிறார். 1999 ல் துவங்கப்பட்ட இது, 2015-16ல் அமேசான் இபே போன்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி, உலகின் பெரிய சில்லறை வர்த்தகராக மாறியுள்ளது.

6) மா ஹவ்டேன்ங்(24.6 பில்லியன் டாலர்)

ஜேக் மாவிற்கு பிறகு சீனாவின் பெரிய பணக்கார இணைய தொழில்முனைவோராக உள்ளார் இவர். உலகின் மிகப்பெரிய இணைய நிறுவனங்களில் ஒன்றான டென்சென்ட்-ன் நிறுவனர் மற்றும் சி.ஈ.ஓ. இணையம் சார்ந்த தயாரிப்பு மற்றும் சேவைகள் வழங்கும் நிறுவனமான இதை 1998ல் துவங்கினார். இது சமூக வலைதளம், இ-பேமெண்ட், மீடியா, எண்டர்டெயின்மெண்ட் போன்ற சேவைகளை தருகிறது.

7) ராபின் லீ(14.3 பில்லியன் டாலர்)

சீன இணைய நிறுவனமான பய்டு-வின் நிறுவனர் இவர். சீனாவின் கூகுள் என அழைக்கப்படும் இந்த தேடுபொறி, கூகுள் துவங்கிய 1 வருடத்தில் துவங்கப்பட்டது. சீனாவின் தேடுபொறி சந்தையில் 75-80%ஐ இது கைப்பற்றியுள்ளது. கூகுள் வெறும் 12% மட்டுமே. பய்டு தான் சீனாவின் மிகப்பிரபலமான இணையதளம் ஆகும்.

8) டஸ்டன் மோஸ்கோவிட்ஸ்(10.4 பில்லியன்)

பேஸ்புக்கின் இணை நிறுவனரான இவர், 2008ல் பேஸ்புக்கை விட்டு வெளியேறி அஸானா என்னும் டீம்&ப்ராஜெக்ட் மேனேஜ்மெண்ட் சாப்ட்வேரை கண்டறிந்தார். பேஸ்புக்கின் 3% பங்குகளை வைத்திருப்பதால், இவரின் மொத்த சொத்து மதிப்பு உயர்ந்துகொண்டே உள்ளது. உலகின் மிக இளவயது பில்லியனரான இவர், மக்கர் சக்கர்பெர்க் ஐ விட 8 நாட்கள் இளையவர்.

9) ஜேன் கோயும்(9.7 பில்லியன் டாலர்)

உலகின் மிகப் பிரபல மெசேஜிங் செயலியான வாட்ஸ்ஆப்-ன் நிறுவனர் இவர். பிப்ரவரி 2014ல் பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்ஆப்-ஐ 19பில்லியன் டாலர் கொடுத்து வாங்கிய பின்னர் இவர் பில்லியனர் ஆனார். வாட்ஸ்ஆப்-ஐ கண்டறியும் முன்பு இவர் யாஹூ நிறுவனத்தில் 9 ஆண்டுகள் பணியாற்றினார்.

10) ஷாங் ஷிடாங்(8.4 பில்லியன் டாலர்)

சீன இணைய நிறுவனமான டென்சென்ட்-ன் இணை நிறுவனரான இவர், அதன் சி.ஈ.ஓ வாக 16 ஆண்டுகள் பணியாற்றி 2014ல் ஓய்வு பெற்றார். இவரும் மா ஹவ்டென்ங்ம் சின்சேன் பல்கலைக்கழகத்தில் ஒரே வகுப்பில் படித்தனர். பின்னர் 3 நண்பர்களுடன் இணைந்து டென்செண்ட்-ஐ நிறுவினர்.



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore