அமேசான் நிறுவனம் வாடிக்கையாளர் பராமரிப்பு, அலுவலக வேலை, தொழில்நுட்பம் போன்ற பல்வேறு பணிகள் உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டு 35 நகரங்களில் 8,000 க்கும் மேற்பட்ட நேரடி பணியாளர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. இதற்காக செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் வேலைவாய்ப்பு முகாம்களை அமேசான் நடத்தவுள்ளது.
காலியிட விவரங்கள்:
வாடிக்கையாளர் பராமரிப்பு, அலுவலக வேலை, தொழில்நுட்பம் போன்ற பல்வேறு பணிகள். மொத்தம் 8000 பணிகள் உள்ளது.
கல்வி தகுதி : BE/B.Tech
விண்ணப்பக் கட்டணம்: கட்டணம் இல்லை.
தேர்வு செயல்முறை : Online Interview
விண்ணப்பத்தின் தொடக்க தேதி : 16-09-2021.
அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பு : www.amazoncareerday.com
அமேசான் 2025 க்குள் நேரடியாகவும் மறைமுகமாகவும் 20 லட்சம் வேலை வாய்ப்புகளை இலக்காகக் கொண்டுள்ளது என்று அமேசான் மனிதவளத் தலைவர் – கார்ப்பரேட், ஏபிஏசி மற்றும் மேனா தீப்தி வர்மா பிடிஐயிடம் கூறினார்.