முருங்கைக்காய் பார்த்தாலே அதில் சாம்பார் வைத்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தான் தோன்றும். குறிப்பாக நமது தமிழ்நாட்டில் முருங்கைக்காய் சாம்பார் மிகவும் பிரபலம். அந்த முருங்கைக்காய் சாம்பார் எப்படி செய்வது என்று பாப்போம்.
தேவையானவை
- முருங்கைக்காய் – 10 நறுக்கிய துண்டுகள்
- சின்ன வெங்காயம் – 10
- தக்காளி – 2
- பூண்டு – 3
- புளி – நெல்லிக்காய் அளவு
- சீரகம் – அரை மேசைக்கரண்டி
- வெந்தயம் – அரை மேசைக்கரண்டி
- சாம்பார்த் தூள் – 2 மேசைக்கரண்டி
- மல்லித் தூள் – ஒரு மேசைக்கரண்டி
- பெருங்காயம் – இரு கிள்ளு
- மல்லித் தழை – சிறிது
- உப்பு – தேவையான அளவு
வேக வைக்க வேண்டிய பொருட்கள் :
- துவரம்பருப்பு – ஒரு கப்
- பூண்டு – 2
- மஞ்சள் தூள் – சிறிது
- நல்லெண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
தாளிக்க தேவையான பொருட்கள் :
- கடுகு – சிறிது
- கடலை உளுத்தம் பருப்பு – தலா ஒரு மேசைக்கரண்டி
- கறிவேப்பிலை – 5 இதழ்
- வரமிளகாய் – 3
செய்முறை
- வேக வைக்க கொடுத்தவற்றை வேக வைத்துக் கொள்ளவும். புளியை கரைத்துக் வடித்து எடுத்து கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்த பொருட்களை போட்டு தாளிக்கவும்.
- பின் நறுக்கிய வெங்காயத்தையும், பூண்டையும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
- தக்காளி, உப்பு சேர்த்து மாசியும் அளவிற்கு வதக்கவும்.
- பின் முருங்கைக்காயை போட்டு நன்கு வதக்கவும்.
- 2 நிமிடம் கழித்து 2 கப் புளிக்கரைசல் தண்ணீர் ஊற்றி ஒரு மேசைக்கரண்டி சாம்பார் தூள் மற்றும் மல்லி தூளை சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் பெருங்காயத் தூளை சேர்த்து, மூடிவைத்து வேகவைக்கவும்.
- முருங்கைக்காய் 90 சதவிகிதம் வெந்ததும் வேக வைத்த பருப்பை சேர்த்து நன்கு கிளறி ஒரு மேசைக்கரண்டி சாம்பார் தூளை சேர்க்கவும்.
- சாம்பார் ஆனதும் உப்பு சரிபார்த்து, மல்லித் தழை தூவவும். சுவையான, கமகமக்கும் முருங்கைக்காய் சாம்பார் ரெடி.
இந்த சாம்பார் சாதத்திற்கு மட்டுமல்லாது இட்லி, தோசை மற்றும் பொங்கல் போன்ற சிற்றுண்டிகளுக்கும் சுவையாக இருக்கும்.