எவ்வித தானங்கள் செய்வதால் என்ன பலன்கள்?

Updated On

அன்னம் இட்டவீடு சின்னம் கெட்டுப்போகாது. பொன், பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை ஆனால் ஒருவன் வேண்டுமென்று கேட்ட வாயால் போதுமென்று சொல்லி மனநிறைவோடு எழுவது சாப்பிடும்போது மட்டுமே தானம் செய்த குறுகிய நேரத்திலேயே பலனை தெரியப்படுத்துவது அன்னதானம்.

சக மனிதனின் பசியை போக்குபவன் கடவுளின் தயவைப் பூரணமாகப் பெறும் தகுதியை பெறுகிறான். பசி என்னும் கொடுமை ஏழைகளின்மீது பாய்ந்து கொள்ளும் தருனத்தில் உணவிட்டு காப்பதே ஜீவகாருண்யமாகும். அன்னதானம் இடுபவரை வெய்யில் வறுத்தாது – வறுமை தீண்டாது  – இறையருள் எப்பொழுதும் துணை நின்று மனதில் மகிழ்ச்சி நிலையாக குடிகொண்டிருக்கும் என வள்ளலார் கூறியுள்ளார்.

தானங்களும் அதன் பலன்களும்:

அன்னதானம் – சகல பாக்கியங்களும் உண்டாகும்.
கோவிலுக்கு உதவி செய்தல் – நீண்ட ஆயுள் ஆரோக்கியம்.
தங்க தானம் – லக்ஷ்மி கடாக்ஷம் கிட்டும்.
மஞ்சள் தானம் – மங்களம் உண்டாகும்.
பூமி தானம் – இகபரசுகங்கள்
வஸ்திர தானம் (துணி)- சகல் ரோக நிவர்த்தி
கோ தானம் (பசுமாடு)- பித்ருசாப நிவர்த்தி
திலதானம் (எள்ளு) – பாப வொமோசனம்
குல தானம் (வெல்லம்) குல அபிவிருத்தி – துக்கநிவர்த்தி
நெய் தானம் – வீடுபேறு அடையலாம், தேவதா அனுக்ரஹம்
வெள்ளி தானம் – பித்ருகள் ஆசி கிடைக்கும்
தேன் தானம் – சுகம் தரும் இனிய குரல்
சொர்ண தானம் – கோடி புண்ணியம் உண்டாகும்.
தண்ணீர் தானம் – மனசாந்தி ஏற்படும்
கம்பளி தானம் (போர்வை) – துர்சொப்ன துர்சகுன பயநிவர்த்தி
பழவகைகள் தானம் – புத்ரபவுத்ர அபிவிருத்தி

பால் தானம் – சவுபாக்கியம்

சந்தனக்கட்டை தானம் – புகழ்


திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore