சூரியன் எந்த லக்கினத்தில் இருந்தால் என்ன பலன்?

Updated On

சூரியன் ஜாதகத்தில் எந்த வீட்டில் அமர்ந்திருந்தால் என்ன பலன்கள் கிடைக்கும்?

ஒன்றில் சூரியன் இருந்தால்

சுறுசுறுப்பானவர்.
செந்நிற மேனி உடையவர்.
தேகம் எப்போதும் உஷ்ணமாக இருக்கும்.

இரண்டில் சூரியன் இருந்தால்

கல்வி சுமாராக இருக்கும்
நல்ல உழைப்பாளி.
ஜாதகருக்குப் பொருள் சேரும்.

மூன்றில் சூரியன் இருந்தால்

ஜாதகர் எதையும் எளிதாக எடுத்துக்கொள்பவர்.
அல்லது எதையும் அலட்டிக் கொள்ளாதவராக இருப்பார்
பகைவர்களை என்ன சேதி என்று கேட்கும் திறமை உடையவர்

நான்கில் சூரியன் இருந்தால்

ஜாதகரின் தாய்க்கு நன்மையல்ல
ஜாதகருக்கு உறவினர்களுடன் பகை உண்டாகும்.
அரசியல் செல்வாக்கு இருக்கும்

ஐந்தில் சூரியன் இருந்தால்

குடும்பம் அளவாக இருக்கும்;
வாழ்க்கை வளமாக இருக்கும்.
தந்தைவழிச் சொத்துக்கள் இருக்காது
ஜாதகர் தன் முயற்சியால் உயர்வடைவார்

ஆறில் சூரியன் இருந்தால்

பகைவர்கள் பக்கத்தில் வரமாட்டார்கள்
ஜாதகரின் குடும்பம் பெரியதாக இருக்கும்.

குரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்?

ஏழில் சூரியன் இருந்தால்

ஜாதகர் கடன், நோய்கள், பிணிகள், வழக்குகள், விவகாரங்கள் இல்லாதவர்.
பலரது பராட்டுக்க்களைப் பெறுபவர்
மனைவிக்கு அடங்கிப்போகக்கூடியவர்.
எதையும் சரிவரச் செய்யாதவர்.

எட்டில் சூரியன் இருந்தால்

ஜாதகர் நீண்ட ஆயுளை உடையவர்.
எவருக்கும் பணிந்து போகாதவர்
இரக்கமற்ற குணத்தை உடையவர்
சிலருக்குக் கண்களில் குறைபாடுகள் இருக்கும்

ஒன்பதில் சூரியன் இருந்தால்

தந்தைக்கு இடையூறுகள் ஏற்படும்
ஜாதகருக்குத் தீயவழிகளில் பொருள் சேரும்
உறவினர்களுடன் விரோதம் ஏற்படும்
சுய முற்சியால் செல்வம் சேரும்

பத்தில் சூரியன் இருந்தால்

அது ஜாதகருக்கு நன்மைகளைச் செய்யும்
ஜாதகருக்கு நிரந்தத் தொழில் அல்லது வேலை இருக்கும்
அரசு தொடர்பு அல்லது அரசியல் தொடர்பு இருக்கும்
உடல் நலம் சீராக இருக்கும்
தன் அறிவினால் சுயமுன்னேற்றம் அடையக்கூடியவர்

பதினொன்றில் சூரியன் இருந்தால்

ஜாதகர் நீண்ட ஆயுளை உடையவர்.
பலரைவைத்து வேலைவாங்கும் திறமை உடையவர்.
நண்பர்களால் பல உதவிகள் கிடைக்கும்

பன்னிரெண்டில் சூரியன் இருந்தால்

ஜாதகருக்குத் தன் தந்தையுடன் சுமூக உறவு இருக்காது.
அதிகமான செலவுகள் ஏற்படும்
ஜாதகர் ஊர் சுற்றி. அதிகமான பயணங்களை மேற்கொள்வார்.
சந்ததிக் குறைபாடுகள் இருக்கும்.
உழைத்து முன்னேற்றம் காண்பவர்.

 திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore