ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடசத்குரு மஹா பெரியவா 108 போற்றிகள்

Updated On

ஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள் | 108 maha periyava potri

1.ஓம் ஸ்ரீ காஞ்சி சத்குரு சந்த்ர சேகரேந்த்ர ஸரஸ்வதியே போற்றி
2. ஓம் ஸ்ரீ காஞ்சி காமதேனுவே போற்றி
3. ஓம் ஸ்ரீ காஞ்சி கற்பகவிருட்சமே போற்றி
4. ஓம் ஸ்ரீ காஞ்சி சத்குருவே போற்றி
5. ஓம் ஸ்ரீ காஞ்சி சாந்தரூபமே போற்றி
6. ஓம் ஸ்ரீ காஞ்சி ஞான பீடமே போற்றி
7. ஓம் ஸ்ரீ காஞ்சி கருணைக் கடலே போற்றி
8. ஓம் ஸ்ரீ காஞ்சி ஜீவ ஜோதியே போற்றி
9. ஓம் ஸ்ரீ காஞ்சி பிருந்தாவன ஜோதியே போற்றி
10. ஓம் துளசி வடிவமே போற்றி
11. ஓம் தேவ தூதரே போற்றி
12. ஓம் காஞ்சி நகரஸ்தரே போற்றி
13. ஓம் பக்தப் பிரயரே போற்றி
14. ஓம் திவ்ய ரூபமே போற்றி
15. ஓம் தர்ம தேவரே போற்றி

16. ஓம் அலங்காரப் பிரியரே போற்றி
17. ஓம் அன்பின் உருவமே போற்றி
18. ஓம் காவியத் தலைவரே போற்றி
19. ஓம் அருட் பெரும் தெய்வமே போற்றி
20. ஓம் தேவ கோஷ பிரியரே போற்றி
21. ஓம் அத்வைத முனிவரே போற்றி
22. ஓம் கலைவாணிச் செல்வரே போற்றி
23. ஓம் காஞ்சி நகர பிரபுவே போற்றி
24. ஓம் காஞ்சி முனிவரே போற்றி
25. ஓம் மகா தேவந்திரரின் சிஷ்யரே போற்றி
26. ஓம் அத்வைத பீடமே போற்றி
27. ஓம் தீனதயாளரே போற்றி
28. ஓம் கருணா மூர்த்தியே போற்றி
29. ஓம் ஜெகத் குருவே போற்றி
30. ஓம் கலியுகக் கடவுளே போற்றி

31. ஓம் நல்லோரைக் காப்பவரே போற்றி
32. ஓம் தீயவை அழிப்பவரே போற்றி
33. ஓம் ஸ்ரீ அனுமந்தப் பிரியரே போற்றி
34. ஓம் தவப்புதல்வரே போற்றி
35. ஓம் ஜெகத் குருவே போற்றி
36. ஓம் ஹரிபக்தரே போற்றி
37. ஓம் தோஷங்களைத் தீர்ப்பவரே போற்றி
38. ஓம் பிரத்யட்ச தெய்வமே போற்றி
39. ஓம் அருட்பெரும் தெய்வமே போற்றி
40. ஓம் அறிவின் சுடரே போற்றி
41. ஓம் பண்டித மேதையே போற்றி
42. ஓம் தீய சக்தியை அழிப்பவரே போற்றி
43. ஓம் வெங்கட பிரத்யட்ச தெய்வமே போற்றி
44. ஓம் வேதங்களை அறிந்தவரே போற்றி
45. ஓம் ஸ்ரீ பிராமணப் பிரியரே போற்றி

காஞ்சிப் பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்

46. ஓம் அஞ்ஞானத்தை அழிப்பவரே போற்றி
47. ஒம் மெஞ்ஞானத்தை அளிப்பவரே போற்றி
48. ஓம் வியாதிகளைத் தீர்ப்பவரே போற்றி
49. ஓம் அமானுஷ சக்தியே போற்றி
50. ஓம் மோட்சத்தை அருள்பவரே போற்றி
51. ஓம் ஆனந்த நிலைய்மே போற்றி
52. ஓம் கஷாயத்தை அணிந்தவரே போற்றி
53. ஓம் தூய்மை நிதியே போற்றி
54. ஓம் வரங்களை அளிப்பவரே போற்றி
55. ஓம் கண்ணனின் தாசரே போற்றி
56. ஓம் சத்ய ஜோதியே போற்றி
57. ஓம் ஸ்ரீ ஜகத்குருவே போற்றி
58. ஓம் பாவங்களை அழிப்பவரே போற்றி
59. ஓம் மனிதகுல மாணிக்கமே போற்றி
60. ஓம் தெய்வாம்சப் பிறவியே போற்றி

61. ஓம் திருப்பாற்கடல் சந்திரரே போற்றி
62. ஓம் மகிமை தெய்வமே போற்றி
63. ஓம் ஞான தீபமே போற்றி
64. ஓம் அகந்தையை அழிப்பவரே போற்றி
65. ஓம் மெஞ்ஞானத்தை வென்றவரே போற்றி
66. ஓம் அத்வைத இயற்றியவரே போற்றி
67. ஓம் சர்வவியாபி தெய்வமே போற்றி
68. ஓம் முக்காலத்தை உணர்ந்தவரே போற்றி
69. ஓம் ஸ்ரீ காஞ்சிபுரத்தின் மாமுனிவரே போற்றி
70. ஓம் கஷ்டங்களைத் தீர்ப்பவரே போற்றி
71. ஓம் சுகங்களை அளிப்பவரே போற்றி
72. ஓம் கங்காதரா பகவானரே போற்றி
73. ஓம் சர்வக்ஞா! சர்வவியாபி போற்றி
74. ஓம் பரமாத்மாவே போற்றி
75. ஓம் குருதேவரே போற்றி

மஹா பெரியவாவின் பொன்மொழிகள்!!..

76. ஓம் நன்மைகளைத் தருபவரே போற்றி
77. ஓம் தயாநிதியே போற்றி
78. ஓம் அருட்தவசீலரே போற்றி
79. ஓம் ஞான மூர்த்தியே போற்றி
80. ஓம் சத்ய பராக்ரமரே போற்றி
81. ஓம் ஸ்ரீ புண்ணிய புருஷரே போற்றி
82. ஓம் அமுத கலசமே போற்றி
83. ஓம் அழகின் உருவமே போற்றி
84. ஓம் சந்தானத்தை அளிப்பவரே போற்றி
85. ஓம் சாஸ்திரங்கள் அறிந்தவரே போற்றி
86. ஓம் துளஸி மாலை அணிந்தவரே போற்றி
87. ஓம் ஜெபமாலை கொண்டவரே போற்றி
88. ஓம் மங்களம் தருபவரே போற்றி
89. ஓம் மன்மதனை ஜெயித்தவரே போற்றி
90. ஓம் காவல் தெய்வமே போற்றி
91. ஓம் நல் ஆயுளைத் தருபவரே போற்றி
92. ஓம் நல் ஐச்வர்யங்களை அளிப்பவரே போற்றி
93. ஓம் நல் அபயம் அளிப்பவரே போற்றி
94. ஓம் ஸ்ரீ உலகைக் காப்பவரே போற்றி
95. ஓம் அபயம் அளி நின் காந்தக் கண்களே போற்றி
96. ஒம் காமாக்க்ஷி சங்கரரே போற்றி
97. ஓம் ஓம்கார ரூபமே போற்றி
98. ஓம் பிரம்ம ஞானியே போற்றி
99. ஒம் கங்கை நதியின் தூயவரே போற்றி
100. ஓம் இணையில்லா இறைவரே போற்றி

101. ஓம் பகவத்பாத அருட்சேவகரே போற்றி
102. ஓம் அனாத ரட்சகரே போற்றி
103. ஓம் சங்கீதப் பிரியரே போற்றி
104. ஓம் சுந்தர வதனரே போற்றி
105. ஓம் உம்மாச்சி தாத்தாவே போற்றி
106. ஓம் நரஹரி பிரியரே போற்றி
107. ஓம் சிவகுருனாதரே போற்றி
108. ஓம் காஞ்சி காமாக்ஷி சேவகரே போற்றி போற்றி.

எமை காத்திட வந்த கண் கண்ட ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா போற்றி!திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore