காஞ்சிப் பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்

Updated On
false

காஞ்சிப் பெரியவர் ஆன்மிக சிந்தனைகள் | Kanchi Periyava Ideas

தாயும் தெய்வமும்

* தெய்வத்தை தாயாக கருதுவதே அம்பிகை வழிபாடு. அவளிடம் உயிர்கள் எல்லாம் நலமுடன் வாழ வேண்டும் என பிரார்த்தனை செய்யுங்கள்.
* நடந்ததை நடந்தபடி சொல்வது சத்தியமாகாது.
* பெண்கள் சமையலுக்காக வீட்டில் அரிசி எடுக்கும் போது, ஒரு கைப்பிடியை ஏழைகளுக்கு தர்மம் செய்ய எடுத்து வைக்க வேண்டும்.
* கோபம் என்பது மனிதனின் மனம் என்னும் விளக்கை அணைத்து இருளில் தள்ளி விடும்.

மதிப்புடன் வாழுங்கள்

* எடுத்துச் சொல்வதை விட மற்றவர் முன் எடுத்துக்காட்டாக வாழ்வதே மதிப்பு மிக்கதாகும்.
* கடவுளிடம் இருந்து பிரிந்து வந்திருக்கும் நாம் விடாமுயற்சியால் மீண்டும் அவருடன் ஒட்டிக் கொண்டு ஒன்றாகி விட வேண்டும்.
* மனித மனம் எதை தீவிரமாக சிந்தித்தாலும் அதுவாகவே மாறி விடும் தன்மை கொண்டது.
* வாழ்க்கையை லாப நஷ்டக் கணக்கு பார்க்கும் வியாபாரமாக கருதுவது கூடாது. பிறர் நலனுக்காக உதவி செய்ய வேண்டும்.

நல்லவர்களிடம் அன்பு காட்டு

*  பள்ளியில் சேர்க்கும் முன் பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுத் தருவது பெற்றோரின் கடமை.
* நல்லவர்களிடம் அன்பு காட்டுவது சிறப்பானது. பாவிகளின் மீது அன்பு செலுத்துவது அதை விட சிறப்பானது.
* அன்பினால் பிறருடைய குற்றத்தை திருத்தும் போது மட்டுமே நிலையான பலன் கிடைக்கும்.
* தேவைகள் அதிகரித்துக் கொண்டே சென்றால் அதற்கேற்ப வாழ்வில் பிரச்னைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

கடவுளின் கருணை

* அறிவு, அழகு, பணம் இவற்றால் ஒரு மனிதன் ஆணவம் கொள்ளக் கூடாது. எல்லாம் கடவுளின் கருணையன்றி வேறில்லை.
* கடவுள் உழைப்பதற்கு கைகளையும், சிந்தித்து வாழ நல்ல புத்தியையும்  கொடுத்திருக்கிறார்.
* எப்போதும் மனதை ஏதாவது ஒரு நற்பணியில் செலுத்திக் கொண்டிருந்தால் சித்த சுத்தி என்னும் உயர்ந்த மனநிலை உண்டாகும்.
* பெரியவர்களின் நல்ல அறிவுரைகளை ஏற்பதே சிறந்தது.

மாறாத அன்பே நட்பு

* ஒருவர் நம்மிடம் பழகினாலும், பழகாவிட்டாலும் அவர் மீது மாறாத அன்பு கொள்வதே ஆழமான நட்பாகும்.
* நிறைவேறாத ஆசைகளே மனதில் காமம், கோபம் ஆகிய தீய எண்ணங்களாக வெளிப்படுகின்றன.
* நல்ல விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தால் மனம் பளிங்கு போல துாய்மையாக இருக்கும்.
* திருநீறும், திருமண்ணும் உலகத்தின் நிலையற்ற தன்மையை உணர்த்தி நம்மை செம்மைப் படுத்துகின்றன.

கைப்பிடி அரிசி தானம்

* பொருளாதார நிலைக்கேற்ப தினமும் தர்மம் செய்யுங்கள். குறைந்தபட்சம் ஒரு ஏழைக்காவது கைப்பிடியளவு அரிசி கொடுங்கள்.
* இரவு துாங்கும் முன் அன்றன்று நடந்த நன்மை, தீமைகளை மனதில் அலசி ஆராய்ச்சி செய்யுங்கள்.
* காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடமாவது கடவுளை பக்தியுடன் வழிபடுங்கள்.
* அக்கம்பக்கத்தினரோடு நட்புடன் பழகுங்கள். பறவை, விலங்கு என எல்லா உயிர்களையும் நேசியுங்கள்.

பேச்சைக் குறையுங்கள்

* அனைவரும் அன்றாடம் அரைமணி நேரமாவது மவுனமாக இருக்கப் பழகுவது அவசியம்.
* கணவர் சம்பாதிக்கும் பணத்திற்குள் கட்டு செட்டாக பெண்கள் குடும்பம் நடத்துவது நல்லது.
* எண்ணம், பேச்சு, செயல் மூன்றாலும் பிறருக்கு நன்மை தரும் செயல்களில் மட்டும் ஈடுபட வேண்டும்.
* பேசுவதில் கணக்காக இருந்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவு வராது. நம் சக்தியும் வீணாகாமல் இருக்கும்.

தியாகம் செய்வது உயர்ந்த குணம்

* அன்பினால் பிறரை திருத்துவது தான் பெருமைக்குரியது. அதுவே நிலைத்த பலனளிக்கும்.
* நமக்குரிய பணிகளை நாமே செய்வதே உண்மையான கவுரவம். பிறர் மூலம் செய்து முடிப்பது கவுரவக்குறைவானதே.
* தர்மம் செய்வதால் வரும் புகழ் கூட, மனதில் அகந்தை எண்ணத்திற்கு வழிவகுத்து விடும்.
* தியாகம் செய்வது உயர்ந்த குணம். அதிலும் ‘தியாகம் செய்தேன்’ என்ற எண்ணத்தையும் தியாகம் செய்வது சிறந்தது.

பெற்றோரின் கடமை

* ஒழுக்கம் உயிர் போன்றது. குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை.
* பெரும்பாலும் மனிதர்கள் ஆசை என்னும் பெயரால் அவசியமற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
* கடவுளிடம் இருந்து நாம் பிரிந்து வந்திருக்கிறோம். பக்தி மூலம் மீண்டும் அவரிடம் ஒட்டிக்கொள்வோம்.
* கோபத்தால் பிறருக்கு மட்டுமில்லாமல் நமக்கும் தீமையே உண்டாகிறது.
* அலட்சியத்துடன் பணியாற்றுவது கூடாது. யாரையும் இழிவாகக் கருதுவதும் கூடாது.

உயிர்களை நேசியுங்கள்

* உயிர்கள் மீது அன்பு காட்டுங்கள். செடிக்கு நீர் விடுவதும், விலங்கிற்கு உணவு அளிப்பதும் சிறந்த தர்மம்.
* பக்தி உணர்வு இல்லாமல் மனிதன் கடமையில் மட்டும் கவனம் செலுத்துவது வறட்டுத்தனமானது.
* வாழ்வில் எளிமையைக் கடைபிடித்தால் பணத்தேவை குறையும். அப்போது பிறருக்கும் உதவி செய்து வாழ முடியும்.
* பேச்சில் பெருந்தன்மையை வெளிப்படுத்தும் பலர், செயலில் சுயநலம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

வாழ்வு மேம்பட வழி

* நேர்மை, உண்மை, பக்தி, ஒழுக்கம், மனத்துாய்மை ஆகிய நற்குணங்களால் வாழ்க்கைத் தரம் மேம்படும்.
* நல்ல உணவுகளால் உடல் பலம் பெறுவது போல நல்லவர்களின் நட்பால் மன நலம் காக்கப்படும்.
* தேவையற்ற பொருட்களை அவசியமானது என்று எண்ணுவது தற்கால வாழ்க்கை முறையாக உள்ளது.
* இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழ்ந்தால் நிம்மதிக்கும், மகிழ்ச்சிக்கும் குறைவிருக்காது.
* தானத்தில் சிறந்தது அன்னதானம். இதன் மூலம் மட்டுமே ஒரு மனிதனைத் திருப்திப்படுத்த முடியும்.

தியானம் பழகு

* உடம்பின் அழுக்கு நீராடினால் நீங்கி விடும். உள்ளத்திலுள்ள அழுக்கை தியானப் பயிற்சியால் போக்க முடியும்.
* கடவுள் நல்ல புத்தி கொடுத்திருக்கிறார். அதை பயன்படுத்தி நற்செயல்களில் ஈடுபடுங்கள்.
* எதிர்பார்ப்புடன் பக்தியில் ஈடுபட்டால் அது வியாபாரமாகி விடும்.
* பாவத்தை கணப்பொழுதில் போக்கும் சக்தி கடவுளின் திருநாமத்திற்கு மட்டுமே இருக்கிறது.
* ஞானம் என்னும் தண்ணீருக்குள் துக்கத்தை அமுக்கி விட்டால் அதன் பாரம் ஒருவனைத் தாக்காது.

இன்றே நல்ல நாள்

* நல்ல விஷயங்களை நாளை என்று காலம் தாழ்த்தக் கூடாது. அவற்றைச் செய்து முடிக்க இன்றே நல்ல நாள்.
* கடவுள் அளித்த இரு கைகளில், ஒரு கையால் அவரின் திருவடியை பிடியுங்கள். இன்னொன்றால் கடமையாற்றுங்கள்.
* பிறருக்கு உபதேசம் செய்யும் முன் நமக்கு தகுதி இருக்கிறதா என்று ஒரு கணம் யோசிப்பது நல்லது.
* சேவையில் ஈடுபடுவோருக்கு மனஉறுதியோடு சாந்தமும், புன்சிரிப்பும் மிகவும் அவசியமானவை.
* புல்லைக் கூட படைக்கும் ஆற்றல் நம்மிடமில்லை. அதனால் ‘நான்’ என்னும் ஆணவம் கூடாது.

மனமே கடவுளின் இருப்பிடம்

* மனமே கடவுளின் இருப்பிடம். அதை தூய்மையாக வைத்திருப்பது கடமை.
* பிறர் நம்மை துன்பப்படுத்தும் போது அதைப் பொறுப்பது மனிதத்தன்மை. மறந்து விடுவது தெய்வத்தன்மை.
* நல்ல சக்தியும், புத்தியும் கடவுள் நமக்கு அளித்திருக்கிறார். அதன் மூலம் நாம் நற்செயல்களில் மட்டுமே ஈடுபட வேண்டும்.
* வாழ்வில் ஒழுக்கமும், நேர்மையும் இருந்து விட்டால் செய்யும் செயல் அனைத்திலும் அழகும், கலையுணர்வும் வந்து விடும்.

தெய்வபக்தி மனிதனுக்கு அவசியம்

* வெறிநாய் போல நாலா திசையிலும் மனம் தறி கெட்டு ஓடிக் கொண்டிருக்க கூடாது. தியானம் மூலம் அதை ஒருமுகப்படுத்த வேண்டும்.
* மரத்திற்கு தண்ணீர் விடுவதும், மிருகங்களுக்கு உணவு அளிப்பதும் உயர்வான தர்மம் என நீதி சாஸ்திரம் கூறுகிறது.
* பிறர் துன்பப்படும் போது பணம், உடல் உழைப்பு, வாக்கு ஆகியவற்றால் முடிந்த உதவியைச் செய்வது நம் கடமை.
* வறட்டுத் தனமாக கடமையில் மட்டும் ஈடுபடுவது கூடாது. தெய்வ பக்தியும் மனிதனுக்கு மிக அவசியம்.

வாழ்வின் நோக்கம் என்ன?

* வாழ்க்கை லாப நஷ்டக் கணக்கு பார்க்கும் வியாபாரம் அல்ல. நம்மால் இயன்ற நன்மையைப் பிறருக்குச் செய்வதே வாழ்வின் நோக்கம்.
* பணம், பேச்சு எதுவாக இருந்தாலும் அளவு மீறக் கூடாது. நாளடைவில் செயலிலும் கணக்காக இருக்கும் பழக்கம் ஏற்படும்.
* ஆசை என்னும் பெயரில் அவசியமில்லாத அல்லது பிறருக்கு தீமை தரும் செயல்களில் ஈடுபடக்கூடாது.
* அறிந்து செய்தாலும், அறியாமல் செய்தாலும் கடவுளை வழிபட்டதற்கான நன்மை கிடைத்தே தீரும்.

யாரையும் எதிர்பார்க்காதே!

* உன் தேவைகளை நீயே பூர்த்தி செய்ய கற்றுக் கொள். யாரையும் எதிர்பார்த்துக் காத்திருக்காதே.
* மனிதன் முதலில் தன் குடும்பத்திற்கு தொண்டு செய்ய வேண்டும். அதன் பின் ஊராருக்குத் தொண்டு செய்யலாம்.
* எல்லாரிடமும் அன்பு, பேச்சில் இனிமை இவையே தொண்டாற்றுவதற்குரிய அடிப்படை லட்சணம்.
* சமூக சேவையும், கடவுள் பக்தியும் இணைந்து விட்டால் அகில உலகமும் நன்மை பெறும்.
* ராமனுக்கு உதவிய அணில் போல தொண்டு சிறிதாக இருந்தாலும் போற்றுவதற்கு உரியதே.

நலமாக வாழ்வோம்

* நாம் நலமோடு வாழ்வதோடு, மற்றவரும் நலமாக வாழ நினைப்பவனே உத்தம குணம் கொண்டவன்.
* ஆசையின்றி செய்யும் எந்த செயலும் பாவத்தை உண்டாக்காது. ஆசையுடன் செய்யும் எதுவும் புண்ணியத்தை தராது.
* மனம் என்பது கடவுளின் இருப்பிடம். அதை துாய்மையாக வைத்திருப்பது நம் கடமை.
* கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக கோவிலில் காணிக்கை செலுத்தும் வழக்கம் உண்டானது.
* பாவத்தை நொடியில் போக்கும் சக்தி கடவுளின் திருநாமத்திற்கு மட்டுமே இருக்கிறது.

நன்மை செய்யுங்கள்

* வாழ்க்கையில் வியாபாரம் போல லாப நஷ்ட கணக்கு பார்க்காமல் நம்மால் ஆன நன்மையைச் செய்ய வேண்டும்.
* பேச்சு, பணம், செயல் எல்லாவற்றிலும் கணக்காக இருக்க வேண்டும். ஆசைக்காக அளவுக்கு மீறி எதிலும் ஈடுபடுவது கூடாது.
* வாக்கு, மனம் இரண்டும் ஒன்றுபட்ட நிலையில் பேசுவதே சத்தியம். அதன் மூலம் நல்ல விளைவு ஏற்படுவதும் அவசியம்.
* தீய எண்ணம் அனைத்தும் நீங்கி விட்டால் மனம் கடவுளின் பக்கம் படிப்படியாகத் திரும்பி விடும்.

புத்தியைப் பயன்படுத்து!

* கடவுள் புத்தியைக் கொடுத்தும் அதைச் சரியாகப் பயன்படுத்தாமல் மனிதன் துன்பத்திற்கு ஆளாகிறான்.
* எல்லாம் ஒன்று என்ற விழிப்பு வந்து விட்டால் ஆசை, கோபம், பாவம், பிறவி ஆகிய துன்பங்கள் நீங்கி விடும்.
* ஒழுக்கம் உயிர் போன்றது. வாழ்வில் ஒழுக்கம் ஏற்பட்டு விட்டால், அதன் பின் எந்த துறையில் ஈடுபட்டாலும் அதில் அழகும், நேர்த்தியும் உண்டாகும்.
* ஆசை வயப்பட்ட மனிதன் கோபத்திற்கு ஆளாகிறான். கோபம் பாவம் செய்யத் தூண்டுகிறது. அதனால், உயிர்களுக்கு பிறவிச் சங்கிலி தொடர்கிறது.

நன்மை செய்யுங்கள்

* வாழ்க்கையில் வியாபாரம் போல லாப நஷ்ட கணக்கு பார்க்காமல் நம்மால் ஆன நன்மையைச் செய்ய வேண்டும்.
* பேச்சு, பணம், செயல் எல்லாவற்றிலும் கணக்காக இருக்க வேண்டும். ஆசைக்காக அளவுக்கு மீறி எதிலும் ஈடுபடுவது கூடாது.
* வாக்கு, மனம் இரண்டும் ஒன்றுபட்ட நிலையில் பேசுவதே சத்தியம். அதன் மூலம் நல்ல விளைவு ஏற்படுவதும் அவசியம்.
* தீய எண்ணம் அனைத்தும் நீங்கி விட்டால் மனம் கடவுளின் பக்கம் படிப்படியாகத் திரும்பி விடும்.

சாந்த குணம் வேண்டும்

* சேவையில் ஈடுபடுபவர்களுக்கு கோபம் துளியும் கூடாது. எப்போதும் மனதில் சாந்தம் நிறைந்திருக்க வேண்டும்.
* ஊராரிடம் நல்ல பெயர் பெறுவதற்காக சமூக சேவையில் ஈடுபாடு காட்டுவது மோசடித்தனமானது.
* நம்முடைய பணிகளை நாமே செய்வதை கவுரவக் குறைவாக பலர் தவறாக கருதுகிறார்கள்.
* அன்பு காட்டுதல், இனிமையுடன் பேசுதல் ஆகியவை சேவை செய்பவனின் குணமாக இருக்க வேண்டும்.
* முதலில் அவரவர் குடும்பத்தைப் பொறுப்புடன் கவனிக்க வேண்டும். அதன் பின்னரே ஊராருக்குத் தொண்டாற்ற வேண்டும்.

புத்தியைப் பயன்படுத்து!

* கடவுள் புத்தியைக் கொடுத்தும் அதைச் சரியாகப் பயன்படுத்தாமல் மனிதன் துன்பத்திற்கு ஆளாகிறான்.
* எல்லாம் ஒன்று என்ற விழிப்பு வந்து விட்டால் ஆசை, கோபம், பாவம், பிறவி ஆகிய துன்பங்கள் நீங்கி விடும்.
* ஒழுக்கம் உயிர் போன்றது. வாழ்வில் ஒழுக்கம் ஏற்பட்டு விட்டால், அதன் பின் எந்த துறையில் ஈடுபட்டாலும் அதில் அழகும், நேர்த்தியும் உண்டாகும்.
* ஆசை வயப்பட்ட மனிதன் கோபத்திற்கு ஆளாகிறான். கோபம் பாவம் செய்யத் தூண்டுகிறது. அதனால், உயிர்களுக்கு பிறவிச் சங்கிலி தொடர்கிறது.

நல்லதை பாராட்டுவோம்

* பிறரிடமுள்ள நல்ல அம்சங்களைப் பாராட்டி அவர்களை உற்சாகப் படுத்துவது அவசியம்.
* போட்டி மனப்பான்மை இருக்கும் வரையில் மனநிறைவு உண்டாகாது. பணத்தாசையால் தான், மனிதர்கள் ஒருவரை ஒருவர் போட்டியாளராக கருதுகின்றனர்.
* வெளியுலகத்தில் இருந்து மகிழ்ச்சி உண்டாவதாக மனிதன் தவறாக எண்ணுகிறான். உண்மையில் மனதிற்குள் தான் மகிழ்ச்சி இருக்கிறது.
* குடும்பத்தில் பெரியவர்கள் தியானம் செய்வதோடு குழந்தைகளையும் தியானம் செய்ய வற்புறுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டாக இரு

* நல்லதை எடுத்துச் சொல்வது எளிதான விஷயம். ஆனால் எடுத்துக்காட்டாக வாழ்வதே சிறப்பு மிக்கது.
* உள்ளத்தில் கள்ளம் இல்லாமல் குழந்தை போல இருக்க வேண்டும் என்று புராணங்கள் நமக்கு போதிக்கிறது.
* பெரும்பாலும் மனிதன் கோபத்தினால் தனக்கும் மற்றவருக்கும் தீங்கு செய்து கொள்கிறான்.
* எந்த விஷயத்திலும் அலட்சிய புத்தி கூடாது. அக்கறையுடன் செயல்படுவது அவசியம்.
* வரவு செலவு கணக்கு பார்க்கும் வியாபாரியாக இல்லாமல், பிறருக்கு நம்மால் ஆன உதவியைச் செய்ய வேண்டும்.

ஒழுக்கத்தை பின்பற்று

* வாழ்வில் ஒழுக்கத்தைப் பின்பற்றினால் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒழுங்கும், நேர்த்தியும் வெளிப்படும்.
* சுயநலத்துடன் சொந்த வேலைகளில் மட்டும் மனிதன் ஈடுபடுகிறான். ஆசை இல்லாமலும் செயலாற்ற வேண்டும்.
* மனதிலுள்ள ஆசையே கோபமாக உருவெடுக்கிறது. அதனால் தீய செயல்களில் ஈடுபட்டு பாவத்திற்கு ஆளாக நேரிடுகிறது.
* வேதம் என்னும் மரம் செழித்திருந்த நாடு தமிழ்நாடு. பாரதியாரும் ‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கண்ணியமாக நடப்போம்

* யாரையும் அலட்சியப்படுத்தும் மனப்பான்மை கூடாது. அனைவரிடமும் கண்ணியத்துடன் நடக்க வேண்டும்.
* மனதில் எழும் ஆசைகளை சீர்படுத்திக் கொள்ள வேண்டும். தேவைகளை அதிகப்படுத்திக் கொள்வது கூடாது.
* குடும்பக் கடமையைச் சரிவர நிறைவேற்றாமல், பெருமைக்காக சமூக சேவையில் ஈடுபடுதல் கூடாது.
* போட்டி மனப்பான்மை இருக்கும் வரையில் யாருக்கும் மனநிறைவும், மகிழ்ச்சியும் உண்டாகாது.
* கடவுளை நினைத்துச் செய்யும் எந்தச் செயலுக்கும் பயன் அதிகம். அறியாமல் செய்தாலும் அதற்கும் பலன் அளிக்கிறார்.

நல்லதை சிந்திப்போம்

* மனம் எதை தீவிரமாக சிந்திக்கிறதோ அதுவாகவே மாறி விடும் தன்மை கொண்டது. அதனால் நல்லதை மட்டுமே சிந்திக்க வேண்டும்.
* எடுத்துச் சொல்வது என்பது யாருக்கும் எளிய விஷயமே. சொன்னபடி வாழ்வில் நடந்து காட்டுவதே பெருந்தன்மை.
* கடவுளிடம் இருந்து பிரிந்ததால் மண்ணில் பிறவி எடுத்திருக்கிறோம். மீண்டும் நல்லதைச் சிந்தித்து அவரோடு சேர முயற்சிக்க வேண்டும்.
* கபடம் சிறிதும் இல்லாத குழந்தை மனம் உள்ளவனாக வாழுங்கள்.

வழிபாட்டின் நோக்கம்

* கடவுளுக்கு நன்றி சொல்லவே கோவில் வழிபாட்டு முறைகளை பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்தனர்.
* வெளிவேஷமாக நெற்றியில் திருநீறு பூசுவது கூடாது. திருநீற்றால் மனமும் உடலும் பரிசுத்தம் பெறுகிறது.
* கடவுளின் திருநாமத்தை ஜெபிப்பதே நாக்கின் பயன். இஷ்ட தெய்வத்தின் பெயரை ஜெபிப்பதால் பாவம் நீங்கி புண்ணியம் சேரும்.
* வெளியுலகத்தில் மகிழ்ச்சி இருப்பதாக மனிதன் தவறாக எண்ணுகிறான். மகிழ்ச்சி என்பது அவரவர் மனதைப் பொறுத்தே உண்டாகிறது.

நிம்மதிக்கான வழி

* கோபம் என்னும் எதிரிக்கு மனதில் இடம் கொடுக்காவிட்டால், எப்போதும் நிம்மதியாக வாழலாம்.
* பந்தைச் சுவரில் எறிந்தால் அது நம்மை நோக்கித் திரும்புவது போல கோபமும் நமக்கு எதிராகத் திரும்பி விடும்.
* ஆசையும், கோபமும் மனிதனை பாவத்தில் தள்ளும் சக்தி படைத்தவையாக இருக்கின்றன.
* கோபத்தால் மனதிற்கு மட்டுமில்லாமல் உடலுக்கும் தீமை செய்தவர்களாக ஆகி விடுவோம்.
* சிந்தித்துப் பார்த்தால் யார் மீதும் கோபம் கொள்ளும் தகுதி நமக்கு இல்லை என்பதை உணர முடியும்.

முயற்சியால் முன்னேறு!

* பூமியை விட்டுச் செல்லும் முன் ‘என்னிடம் பாவமே இல்லை’ என்னும் உயர்நிலையை அடைய முயற்சி செய்.
* மனிதனாகப் பிறந்தவன் யாராக இருந்தாலும் என்றாவது ஒருநாள் இங்கிருந்து புறப்பட்டே ஆக வேண்டும்.
* அறியாமையால் மனிதன் மனதாலும், செயலாலும் பாவம் செய்யும் தீய சூழலுக்கு ஆளாகிறான்.
* வாக்கு, மனம், உடல் இந்த மூன்றாலும் நற்செயலில் ஈடுபட்டால் தான் பாவத்தில் இருந்து விடுபட முடியும்.
* உலகிலுள்ள எல்லாம் ஒன்றே என்ற தெளிவு வந்து விட்டால் தீய குணங்கள் யாவும் மறையும்.

தியானம் செய்

* மனவலிமை பெற விரும்பினால், தினமும் சிறிது நேரமாவது கடவுளைத் தியானம் செய்ய மறக்கக் கூடாது.
* துன்பத்தில் மட்டுமில்லாமல் கடவுளை இன்பத்திலும் மறப்பது கூடாது.
* பிறரிடம் சொல்வதை விட துன்பத்தை கடவுளிடம் சொல்வதால் நிம்மதி கிடைக்கும்.
*செய்த பாவம் தீரவே கடவுள் நம்மை இந்த பிறவியில் மனிதர்களாகப் பிறக்கச் செய்திருக்கிறார்.
* மகிழ்ச்சி என்பது அவரவர் மனதைப் பொறுத்தது. ஆனால், மனிதன் அதை வெளியுலகில் தேடிக் கொண்டிருக்கிறான்.

நல்லதை மட்டும் பார்

* பிறரின் குறையைப் பெரிதுபடுத்தாமல், நல்லதை மட்டுமே காண வேண்டும்.
* கஷ்டத்தைப் பிறரிடம் சொல்வதைக் காட்டிலும், கடவுளிடம் சொல்லி முறையிடுவது நல்லது.
* மனதில் போட்டி, பொறாமை இருக்கும் வரை மனிதனுக்கு மனநிறைவு உண்டாகாது.
* தியானம் செய்வதே அன்றாட வாழ்வின் முதல் பணி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
* மனதில் உள்ளதை உள்ளபடி வெளிப்படுத்தவே கடவுள் மனிதனுக்குப் பேசும் சக்தியை கொடுத்திருக்கிறார்.



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore