இந்த நவீன உலகத்தில் உறக்கம் என்பது பெரும் பிரச்சனையாக மாறிக்கொண்டிருக்கிறது. பலர்
உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
நான் தினமும் நல்லா 10,12 மணி நேரமும் தூங்குவேன் அதனால எனக்கு எந்த பிரச்சனையும் வராதுனு நீங்க நினைச்சாலும் ரொம்ப தப்பு ஏன்னா அதிக தூக்கமும் ஆபத்தை தான் விளைவிக்கும். அந்த காலத்துல அதிகமா தூங்குறவங்கள பார்த்து கும்பகர்ணன் மாதிரி தூங்குறான் பாருனு சொல்வாங்க ஆனா இன்றைக்கு கும்பகர்ணணுக்கு சவால் விடுற மாதிரி பல பேர் தூக்கத்துல கில்லாடிகளா இருக்காங்க, அப்படி அதிகமா தூங்குறதும் பிரச்சனை தான்.
தினமும் 9 மணி நேரத்திற்கு மேல் தூங்குபவர்களுக்கு சர்க்கரை நோய் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. தலை வலியும் கூடவே வந்துவிடும். தலை வலியோடு இலவசமா முதுகு வலியும் வந்துருமாம். அது மட்டுமில்லாம அதிகமா தூங்குறதுனால நம்ம உடல் சோம்பேறியா மாறிடும், நம்ம சொன்ன பேச்சை கேக்காது ஏன்னா ஆற்றலோட இயங்கவும் முடியாது. அதனால அது கொழுப்பாக நம்ம உடலில் தேங்கிரும் அப்புறம் அதுவே உடலுக்கே தீங்காகிவிடும். அதனால அதிகமா தூங்குறதையும் குறைச்சிருவோம்.
Hypersomnia ங்கிற நோய் இருக்கிறவங்க 10 மணி நேரம் தூங்கினாலும் அவங்களுக்கு அது போதுமானதா இருக்காதாம். அதோட அவங்க தூக்கமின்மையால குழப்பமடைந்த நிலையில் தான் இருப்பாங்களாம்.
கழிவறைக்கு போகவும் சாப்பிடவும் மட்டுமே கட்டில இருந்து எந்திரிப்பாங்களாம். இருந்தாலும் அவங்களுக்கு தூக்கம் பத்தாது.
இதேமாதிரி தான் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவங்களும் அதிக நேரம் தூங்குவாங்க. மனநலப் பிரச்சினைகளுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுற சில மருந்துகளால தூக்கம் கூடுதலா இருக்கும்.
விபத்துலையோ, அல்லது வேறு காரணங்களாலோ மூளையில் பலத்த காயம் ஏற்படும்போது அது சிலருக்கு அதிகத் தூக்கத்தை உண்டாக்கும்.
ஆனா மேற்சொன்ன காரணங்கள் இல்லாம சோம்பேறிதனத்தால நீண்ட நேரம் தூங்கினா நோய் தான் பரிசா கிடைக்கும். நாம் அதிக நேரம் தூங்கும் போது உடல் நீண்ட நேரம் சமநிலையில் இருக்கும் இயக்கம் இல்லாததால் உடல் பலகீனமடையும் இது தவிர்க்க முடியாது.
மேலும் அதிகமான தூக்கத்தால, நம்ம உடலில் ஹார்மோன் சுரப்பு, மாதவிடாய் சுழற்சி என பல விஷயங்கள்ல மாற்றம் ஏற்பட்டு பெண் மலட்டுத் தன்மை உண்டாவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
எவ்வளவு நேரம் தூங்கனும் :-
அதிக நேரம் தூங்கறதுனாலே இந்த ஆந்தைக்கு மட்டும் பிரச்னையே வர்றதில்லை, பாருங்க 1 நாளைக்கு 20 மணி நேரத்தை இந்த ஆந்தை தூக்கத்திலே கழிக்குது ஆனா யாரும் ஒண்ணும் சொல்றதில்லை , அதுகளுக்கும் ஒண்ணும் ஆகிறதில்லை, சரி ஆந்தை தூங்குறது இருக்கட்டும் நாம எவ்வளவு நேரம் தூங்கனும் னா சராசரியா ஒரு நாளைக்கு குறைந்தது 7 – 8 மணி நேரமாவது தூங்கணும், அவ்வளவு நேரம் லாம் தூங்க முடியாது நா ரொம்ப பிஸி, என் வேலையெல்லாம் என்னாகும் னு ஆழ்ந்து யோசிக்காம , சின்னதா நம்ம உடலோட தேவையை புரிஞ்சிக்கிட்டு சரியான நேரத்துக்கு, சரியான அளவுல தூங்குனோம் னா, எல்லாம் நல்லா நடக்கும்.
உடல் என்கிற வண்டி நல்லா ஓடணும் னா அதுக்கு தூக்கங்குற சாவி ரொம்ப முக்கியம் மறந்திறாதீங்க.