குழந்தைகளுக்கு ஒரு தலையணை போன்ற பொருளை டையப்பர் என்ற பெயரில் மாட்டி விடும் சம்பிரதாயம் இந்த காலகட்டத்தில் வாழும் தாய்மார்களிடத்தில் அதிகம் காணப்படுகிறது. டையப்பர் என்பதனை தான் நிம்மதியாக ஃபிரியாக இருக்க வேண்டும் என்று குழந்தைக்கு மாட்டி விடுகிறீர்களா அல்லது குழந்தையின் நலனுக்காக அதை மாட்டி விடுகிறீர்களா என்ற கேள்விக்கு தாய்மாரின் மனசாட்சியே உண்மையான பதிலை கூற முடியும்.
தந்தைமார்களும் சும்மா இல்லை; மனைவி என்ன கூறினாலும், அது சரியா, தவறா என்று யோசிக்காமல் குழந்தைக்கு இந்த டையப்பர் தலையணையை மாட்டி விடுகின்றனர்; சொல்லப்போனால், மனைவிமார்களுக்கு இதை வாங்கி வந்து அளிப்பதே கணவர்கள் தான்! இந்த பதிப்பில் கணவனும் மனைவியும் தம்பதியராக சேர்ந்து, பெற்றோராக தாங்கள் பெற்று எடுத்த குழந்தைக்கு இழைக்கும் அநீதி செயலான – டையப்பர் பயன்பாடு குறித்தும், அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றியும் படித்தறியலாம்.
டையப்பர்
நம்மிடையே இந்த டையப்பர் பயன்பாடு என்பது கடந்த 10 – 20 வருடங்களாக ஏற்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது; இந்த டையப்பர் வாங்குவது மிகவும் எளிதானது; மலிவானது, டையப்பரில் இருந்து எந்த ஒழுகலும் அதாவது லீக்கேஜும் ஏற்படாது, அதிக டையப்பர்களை ஆஃபர் நேரத்தில் மிகக்குறைந்த விலையில் வாங்கி விடலாம், துவைக்க வேண்டிய கவலையே இல்லை, பயன்படுத்திய பின் தூக்கி எறிந்து விடலாம், மேலும் எங்கும் எப்பொழுதும் எடுத்துச் சென்று பயன்படுத்தக்கூடிய அளவிற்கு எளிமை தன்மை வாய்ந்தது – இது போன்ற காரணங்களால், நம்மில் பெரும்பாலானோர் இந்த டையப்பரை வாங்கி, நம் குழந்தைச் செல்வங்களுக்கு பயன்படுத்தி வருகிறோம்.
பார்க்க பாலிஷாக தெரியும் இந்த டையப்பர், பக்காவாக குழந்தைகளின் உடலில் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் குறித்து அடுத்தடுத்த பத்திகளில் படித்து அறியுங்கள்!
ஒவ்வாமை
டையப்பரை குழந்தைகளுக்கு தொடர்ந்து பயன்படுத்தி வருவதால், குழந்தைகளின் உடலில் அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை ஏற்படும் அபாயம் உள்ளது; டையப்பர் பயன்பாடு, நீரினால் அலர்ஜி, துணியால் அலர்ஜி என ஒரு மனிதன் பயன்படுத்தும் அடிப்படை விஷயத்திலும், அடிப்படை மற்றும் உயிர் வாழ முக்கிய தேவையான விஷயத்திலும் ஆப்பு வைத்து விடுகிறது. ஆகையால், நன்கு சிந்தித்து பின் குழந்தைகளுக்கு டையப்பரை பயன்படுத்த ஆரம்பியுங்கள் பெற்றோர்களே!
தடிப்புகள்!
டையப்பரின் ஓரங்களில் உடலில் அழுத்தம் ஏற்படுத்தக்கூடிய எலாஸ்டிக் அமைக்கப்பட்டுள்ளது; இது நைலான் போன்ற பொருட்களால் தயாரிக்கப்பட்டிருக்கலாம். இது குழந்தையின் உடலை நாள் முழுதும் உரசிக் கொண்டு இருப்பதால், தொடர்ந்த அழுத்தம் ஏற்பட்டு குழந்தைகளின் தொடைகளில், தொடை இடுக்குகளில், பிறப்புறுப்பின் ஓரங்களில் சிவந்த தடிப்புகள், புண்கள் போன்றவை ஏற்படலாம்.
விஷம்!
ஒரு டையப்பரை தொடர்ந்து வேறு டையப்பரை மாற்றாமல், ஒன்றையே பயன்படுத்திக் கொண்டே இருந்தால், அது விஷமாக மாறி குழந்தையை கொன்றுவிடக் கூடிய கொடிய பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். எனவே ஒரு நாளைக்கு குறைந்தது 8-10 டையப்பர்களையாவது மாற்றிவர வேண்டும். அப்படி மாற்றினால், குழந்தைக்கு பாதிப்பு ஏற்படாமல் ஓரளவு தடுக்கலாம். தேவையெனில், இந்த எண்ணிக்கையை விட அதிகமாகவே பயன்படுத்தலாம்.
விலை உயர்வு
மேற்கூறிய எண்ணிக்கையை ஒவ்வொரு நாளும் பயன்படுத்தினால், எத்தனை டையப்பர்கள் வாங்க வேண்டும் என்று கணக்கிட்டு பாருங்கள்; என்னதான் ஆஃபர் போன்றவை வந்தாலும், நீங்கள் டையப்பருக்காக செய்யும் செலவு அதிகம் தான்; மேலும் குழந்தைக்கு 8-10 டையப்பர்களை கட்டாயம் பயன்படுத்துங்கள்; ஈரம் ஏற்படவில்லை என ஒன்றையே வைத்திருக்காதீர்கள்; இந்த எண்ணிக்கை குறையாமல் இருப்பது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
நோய்த்தொற்றுகள்
ஒரே டையப்பரை அதுவும் குழந்தை மலம் மற்றும் சிறுநீர் கழித்த டையப்பரை நாள் முழுதும் அப்படியே கவனியாது விட்டு விட்டால், அது குழந்தையின் உடலில் நோய்தொற்றுகளின் பாதிப்பை ஏற்படுத்திவிடும். மேலும் மலம் மற்றும் சிறுநீர் கலவையில் உருவாகும் பாக்டீரியாக்கள், குழந்தையின் பிறப்புறுப்பில் நோய்தொற்றுகளை ஏற்படுத்தி, அது சிறுநீரக உறுப்புகள் மற்றும் மலவாயின் உள்ளுறுப்புகளை தாக்குவதற்கு வாய்ப்பு உண்டு.
டாய்லெட் பயிற்சி
குழந்தைகளுக்கு எப்பொழுது பார்த்தாலும் டையப்பரையே பயன்படுத்திக் கொண்டு இருந்தீர்கள் என்றால், குழந்தைகளால் டாய்லெட்டில் பெரியவர்கள் போன்று மலம் கழிக்க இயலாது; வளர்ந்த பின்னும் கூட இந்த டையப்பரையே குழந்தைகள் நாடிச் செல்வர்களே ஒழிய, டாய்லெட் பயன்படுத்த முன்வர மாட்டார்கள்; ஆகையால், ஒரு குறிப்பிட்ட வயதிலேயே டையப்பரை நிறுத்தி, டாய்லெட் பயிற்சி அளிக்க தொடங்குங்கள்!
மாற்று வழி!
டையப்பர்களின் பயன்பாட்டிற்கு பின் அவற்றை அப்புற படுத்துவது, சுற்று சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடியது; மேலும் அதை பயன்படுத்துவதும் குழந்தையின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. எனவே இந்த இரண்டு பிரச்சனைகளையும் தவிர்த்து நன்மை பயக்க, நம் முன்னோர்கள் பயன்படுத்திய துணி முறையை பின்பற்றுதல் வேண்டும். இது சுகாதாரமானது – ஆம் பயன்படுத்திய பின் துவைத்து தான் மறுமுறை பயன்படுத்த வேண்டும்; துவைப்பது தான் இப்பொழுது எளிதாகி விட்டதே!
ஆகையால், குழந்தைகளுக்கு நன்மை பயக்கும் துணி டையப்பர்களை பயன்படுத்தி குழந்தையையும், சுற்றுச்சூழலையும் காக்க முன் வருவீராக!