Rahu Ketu Peyarchi Rasi Palan makaram in Tamil – ராகு கேது பெயர்ச்சி ராசி பலன் மகரம்

On 2022-03-17 2:48:13

Today's Horoscope For Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius and Pisces. Check out the Daily Rasipalan in Tamil for your Rasi. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்.

inraiya rasipalan makaram

ராகு கேது பெயர்ச்சி ராசி பலன் மகரம் - Rahu Ketu Peyarchi Rasi Palan for makaram in Tamil

உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்

நண்பர்களிடமும் விரோதிகளிடமும் சகஜமாகப் பழகக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5, 11-ல் சஞ்சரித்த நிழல் கிரகங்கள் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் 12-04-2022 முதல் 30-10-2023 வரை (வாக்கியப்படி 21-03-2022 முதல் 08-10-2023 வரை). ராகு ஜென்ம ராசிக்கு 4-ஆம் வீட்டிலும், கேது 10-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய உள்ளது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதே நேரத்தில் சனி ஜென்ம ராசியில் 17-01-2023 முடியவும் அதன் பிறகு 2-லும் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு ஏழரைச்சனி நடைபெற இருப்பதும், குரு உங்கள் ராசிக்கு 3-ல் 13-04-2022 முதல் 22-04-2023 வரையும் அதன் பின்பு 22-04-2023 முதல் 4-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய காலமாகும்.

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது, சிறு பிரச்சினை என்றாலும் உடனே மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்வது நல்லது. தேவையற்ற மருத்துவ செலவுகளை எதிர் கொள்ள மருத்துவ காப்பிடு எடுப்பது உத்தமம்.

பொருளாதார ரீதியாக ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது அதிக முதலீடு கொண்ட செயல்களை தற்போதிய காலத்தில் செய்யாமல் தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு செயலிலும் கை இருப்பை கொண்டு செலவு செய்வதும் கடன் வாங்குவதை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது.

உங்கள் ராசிக்கு 22-04-2023 முடிய 3-ல் சஞ்சரிக்கும் குரு தனது சிறப்பு பார்வையாக 7, 9, 11-ஆம் வீடுகளை பார்ப்பதால் பொருளாதார நெருக்கடிகள் இருந்தாலும் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும், கணவன்- மனைவி இடையே அன்னோன்யம் அதிகரிக்கும். அழகிய குழந்தையை பெறும் வாய்ப்பு உண்டாகும். உற்றார் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள்.

தொழில் வியாபாரத்தில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே நீங்கள் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில் பிரச்சினைகள் இருக்கும். இருக்கும் வேலையாட்கள் சரியாக ஒத்துழைக்க மாட்டார்கள் என்பதால் நீங்கள் எதிலும் முன் நின்று செயல்பட்டால் மட்டுமே தொழிலில் அன்றாட செயல்களை சிறப்பாக செய்ய முடியும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் அவர்களை சார்ந்து செயல்பட்டால் அனுகூலங்களை அடைய முடியும். அதிக முதலீடு கொண்ட செயல்களை தள்ளி வைப்பது நல்லது அப்படி செய்ய வேண்டும் என்றால் அதனை உங்கள் பெயரில் செய்யாமல் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செய்வது நல்லது. தற்போது இருக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்டால் 17-01-2023 முதல் சனி 2-ம் வீட்டிற்கு சென்ற பிறகு தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு காரணமாக உடல் அசதி ஏற்படும். நீங்கள் எடுக்கும் பணிகளை சற்று தாமதமாக செய்து முடிந்தாலும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்கள் உழைப்பிற்கான ஊதியம் தற்போது கிடைக்கா விட்டாலும் பணியில் மதிப்பும் மரியாதையும் இருக்கும். சக ஊழியர்களை சற்று அனுசரித்து சென்றால் பணியில் நிம்மதியுடன் இருக்க முடியும். முடிந்த வரை கிடைக்கும் வாய்ப்புகளை தவற விடாமல் எந்த பணியிலும் முனைப்புடன் செயல்பட்டால் 2023 ஜனவரிக்கு பிறகு நல்ல வளர்ச்சியை அடைய முடியும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களால் மன நிம்மதி குறையும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள், இருப்பதை அனுபவிக்க இடையூறு உண்டாக கூடிய காலம் என்பதால் எதிலும் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. தூர பயணங்களை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கடினமாக உழைத்தால் தான் நற்பலனை அடைய முடியும்.

குடும்பம் பொருளாதாரநிலை

பணவரவுகள் சற்று சாதகமாக இருக்கும் என்றாலும் எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களை உற்றார் உறவினர்கள் தவறாக எடுத்து கொள்வார்கள். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பு வெற்றி பெற முடியும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு சுப செலவுகளை சந்திப்பீர்கள்.

உத்தியோகம்

எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு அதிகமாக இருக்கும் என்பதால் மனநிம்மதியற்ற நிலை ஏற்படும். உடல் நிலை காரணமாக எதிலும் திறம்பட செயல்பட முடியாத நிலை ஏற்படும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பதும், பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் வர வேண்டிய வாய்ப்புகளில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் மேன்மைகள் அடைவீர்கள் என்றாலும் அதிக அலைச்சல் இருக்கும். தொழில் சிறப்பாக இருந்தாலும் மறைமுக பிரச்சினைகளால் அனைத்து விஷயத்திலும் அதிக அக்கறை எடுக்க வேண்டி இருக்கும். உடனிருப்பவர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பையும் பெற முடியாமல் போகும். தூர பயணங்களை தவிர்க்கவும்.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு வாங்குவதற்கு பலமுறை அலைந்து தான் வாங்க முடியும். நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும். பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு ஆதராயம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு மன ஆறுதலை தரும்.

அரசியல்

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதால் உங்கள் பதவிக்கு பங்கம் ஏற்படாமல் பார்த்து கொள்ள முடியும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள வேண்டி வருவதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல் நிலையில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வாக்குறுதிகள் கொடுக்கும் போது சிந்தித்து செயல்படவும். பத்திரிக்கை நண்பர்களை பகைத்து கொள்ளாது இருப்பது உத்தமம்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். நவீன முறைகளை கையாண்டு விளைச்சலைப் பெருக்க முடியும் என்றாலும் வேலைக்கு தக்க சமயத்திற்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். இதனால் செய்யும் பணியில் சுனக்கம் ஏற்படும். எதிலும் நீங்களே முன் நின்று செயல்பட வேண்டிய நிலை இருப்பதால் ஒய்வு இல்லாமல் உழைக்க வேண்டி இருக்கும். பங்காளிகளை பகைத்து கொள்ளாமல் இருப்பது, தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.

கலைஞர்கள்

எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் கிடைத்த வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்து கொள்வது நல்லது. வரவேண்டிய பணத்தொகைகள் வரவேண்டிய நேரத்தில் வந்து சேரும். உடனிருப்பவர்களிடம் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் சுகவாழ்விற்கு இடையூறு தேவையற்ற அலைச்சல் ஏற்படும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். குடும்ப பிரச்சினைகளை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ளாது இருக்கவும். மண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் அமைந்து மகிழ்ச்சி ஏற்படும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றவாறு இருக்கும்.

மாணவ- மாணவியர்

மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாக கூடிய காலமிது என்பதால் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. கல்வி ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் தடைளுக்குப் பின் அனுகூலம் ஏற்படும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். திறனை வெளிபடுத்தும் போட்டிகளின் போது சற்று கவனமுடன் செயல்படுவது, தேவையற்ற நட்புக்களை தவிர்ப்பது நல்லது.

 

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 12-04-2022 முதல் 14-06-2022 வரை

ராகு சூரியன் நட்சத்திரத்தில் 4-ல், கேது குரு நட்சத்திரத்தில் 10-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் இருப்பதை அனுபவிக்க இடையூறுகளை ஏற்படும். ஏழரைச்சனி நடப்பதாலும், குரு 3-ல் சஞ்சரிப்பதாலும் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும் காலம் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது, சிக்கனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தபட்ட பாதிப்புகள் உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் மட்டுமே தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நற்பலன் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது மூலம் வீண் பிரச்சினைகள் ஏற்படுவதை குறைக்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்வது உத்தமம். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் மனநிம்மதி குறையும். எதிலும் நீங்கள் முனைப்புடன் செயல்பட்டால் தான் போட்ட முதலை எடுக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. வேலைபளு கூடுதலாக இருக்கும் என்பதால் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது உத்தமம்.

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 15-06-2022 முதல் 17-10-2022 வரை

ராகு சுக்கிரன் நடசத்திரத்தில் 4-ல், கேது குரு நட்சத்திரத்தில் 10-ல் சஞ்சரிப்பதும், ஏழரைச்சனி நடப்பதாலும், குரு 3-ல் சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய காலமாகும். குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். வீண் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு பிரச்சினைகள், வாக்கு வாதங்கள் போன்றவை தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதற்கான சூழ்நிலை உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டு சற்றே அலைச்சல்கள் ஏற்படும். பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே ஏற்றம் பெற முடியும். கிடைப்பதை பயன்படுத்தி கொள்ளவும். கூட்டாளிகளின் உதவியால் தொழிலில் உள்ள நெருக்கடிகளை சமாளிக்க முடியும். நீங்கள் எதிர்பார்க்கும் பொருளாதார உதவிகள் தாமதப்படுவதால் தொழிலில் சற்று நெருக்கடியுடன் அன்றாட செயல்களை செய்ய நேரிடும்.

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 18-10-2022 முதல் 20-02-2023 வரை

ராகு பரணி நட்சத்திரத்தில் 4-ல், கேது சுவாதி நட்சத்திரத்தில் 10-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிர் நீச்சல் போட வேண்டிய காலமாகும். ஏழரைச்சனி நடப்பதாலும், குரு 3-ல் சஞ்சரிப்பதாலும் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது கை இருப்பை கொண்டு செலவு செய்வது நல்லது. பண வரவுகள் சுமாராக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். கணவன்- மனைவி தேவையற்ற கருத்து வேறுபாடுகளை தவிர்த்து விட்டு கொடுத்து நடந்து கொண்டால் மட்டுமே குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்கள் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே ஏமாற்ற கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருந்தாலும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஓத்துழைப்புகளால் எதையும் சாதிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். அதிக முதலீடு கொண்ட செயல்களை தற்போது தவிர்ப்பது நல்லது. அரசு வழி அதிகாரிகளிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும்.

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 21-02-2023 முதல் 26-06-2023 வரை

ராகு அசுவனி நட்சத்திரத்தில் 4-ல், கேது சுவாதி நட்சத்திரத்தில் 10-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு பல்வேறு வகையில் வேலைபளு அதிகரித்து சுக வாழ்வு சொகுசு வாழ்வு பாதிக்கும். சனி 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சை குறைத்து கொண்டு நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவி இடையே அனுசரித்து நடந்து கொள்வது, உறவினர்களிடம் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. முன் கோபத்தால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படாது. கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே அனுகூலப்பலனைப் பெற முடியும். தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்க்கும் வாய்ப்புகள் போட்டி பொறாமைகளால் கை நழுவிப் போகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடுதலாக இருக்கும். சக ஊழியர்களை அனுசரித்து சென்றால் நீங்கள் எடுக்கும் பணியை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடித்து நற்பெயர் எடுக்க முடியும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தை விட்டு வெகு தூரம் சென்று பணிபுரியும் நிலை ஏற்படும். அசையா அசையா சொத்துக்களால் சுப செலவுகளை சந்திப்பீர்கள்.

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சித்திரை நட்சத்திரத்தில் 26-06-2023 முதல் 30-10-2023 வரை

ராகு கேது நட்சத்திரத்தில் 4-ல், கேது செவ்வாய் நட்சத்திரத்தில் 10-ல் சஞ்சரிப்பதால் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சனி 2-ல் சஞ்சரித்து ஏழரைச்சனி நடப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் யோசித்து செயல்படுவது நல்லது. குரு 4-ல் சஞ்சரித்து 8, 10-ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் இருந்த உடம்பு பாதிப்புகள் குறையும் அமைப்பு, தொழில் ரீதியாக படிப்படியான முன்னேற்றங்கள் ஏற்படும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். எதிர்பாராத உதவிகளால் உங்களுக்கு உள்ள கடன் பிரச்சினைகள் சற்று குறைந்து மன நிம்மதி ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்க கூடும் என்பதால் எதிலும் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பயணங்களால் சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளிக்க கூடிய வலிமையை பெறுவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க சற்று தாமத நிலை உண்டாகும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை தற்சமயம் பயன்படுத்தி கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது.

Click the links to get ராகு கேது பெயர்ச்சி ராசி பலன் for mesam  rishbam  mithunam  kadagam  simmam  kanni  thulam  viruchigam  thanus  makaram  kumbam  meenam   rasi palan

திருத்தமிழ்
© 2025 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore