முருங்கை இலை டீ குடித்தால் கிடைக்கும் பயன்கள்

Updated On

முருங்கை இலையில் இருந்து டீயும் தயாரிக்கப்படுகிறது. தினமும் ஒரு கப் முருங்கை இலை டீ குடித்தால் உடல் எடை, ரத்த அழுத்தம் குறையும், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.

முருங்கை கீரையில் உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் ஏராளம் இருக்கின்றன. முருங்கை இலையில் இருந்து டீயும் தயாரிக்கப்படுகிறது. இது ‘மோரிங்கா தேநீர்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் சாதாரண கீரையில் இருப்பதை விட மூன்று மடங்கு இரும்பு சத்து நிறைந்திருக்கிறது. அதுபோல் கால்சியம், பொட்டாசியம், வைட்டமின், பி6, சி மற்றும் மெக்னீசியம், பீட்டா கரோட்டீன் ஆகியவையும் இருக்கிறது. தினமும் ஒரு கப் மோரிங்கா டீ குடித்தால் உடல் எடை, ரத்த அழுத்தம் குறையும், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.

முருங்கை கீரையில் ஆன்டி ஆக்சிடண்டுகள் அதிகம் உள்ளன. அவை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மைகொண்டவை. முருங்கைக்கீரையில் இருக்கும் புரதம் தலை மற்றும் கூந்தலுக்கு நீர் சத்தினை தருகிறது.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவும் ஐசோதியோசயனேட்டுகள் இதில் அதிகமாக உள்ளன. இதனால் சர்க்கரை நோயாளிகள் இதனை பருகலாம்.

மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் போன்ற மனநிலை சார்ந்த பிரச்சினை களுக்கு ஆளாகுபவர்களுக்கு மோரிங்கா டீ நன்மை பயக்கும். அது மனதுக்கு தேவையான ஆற்றலை வழங்கி சோர்வை விரட்டும்.

முருங்கை இலை, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டது. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும் தன்மையும் அதற்கு இருக்கிறது. பாக்டீரியா, பூஞ்சை போன்றவற்றை திறம்பட எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை. இந்த டீயை பருகுவதன் மூலம் வாய்வழி நோய் தொற்றுகளில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். காலையிலோ அல்லது மாலையிலோ ஒருவேளையாவது மோரிங்கோ டீ பருகலாம்.



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore