வெயில் காலத்திலும் ஏசியே போடாமல் உங்கள் அறையை கூலாக வைத்துக்கொள்ள இப்படி செஞ்சு பாருங்க !

Updated On

வெயில் காலம் துடங்கிவிட்டாலே ஏ.சியும் அத்தியாவசியப் பொருளாகிவிடும். அதுவும் இந்த இஎம்ஐ திட்டங்களால் ஏசி வாழ்க்கை என்பது மிடில் கிளாஸுகளுக்கும் எட்டும் கனியாக மாறிவிட்டது. என்னதான் ஏசி இருந்தாலும் நாள் முழுவதும் வீட்டில் ஏசி போட்டு வைக்க முடியாது. அதுவும் மிடில் கிளாஸ் குடும்பத்திற்கு சாத்தியமே இல்லை. இந்த சூழ்நிலையில் வீட்டை எப்படியெல்லாம் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம் என்பதைக் காணலாம்.

எக்ஸாஸ்ட் ஃபேன் பயன்படுத்துங்கள் : வீட்டில் இருக்கும் வெப்பம் நிறைந்த காற்றை வெளியேற்ற உதவும் எக்ஸாஸ்ட் ஃபேன் பயன்படுத்துவதால் வீடு கூலாக இருக்கும்.

ஐஸ் கட்டி மற்றும் டேபிள் ஃபேன் : கடுமையான வெயில் தாக்கம் இருந்தால் ஒரு பவுள் நிறைய ஐஸ் கட்டிகளை நிரப்பி அதை டேபிள் ஃபேன் முன் வைத்தால் ஏசி போல் சில்லென காற்று வீசும்.

கதவுகளைத் திறந்து வையுங்கள் : வெளிக்காற்று உள்ளே வருமாறு கதவுகள் மற்றும் ஜன்னல்களைத் திறந்த வையுங்கள். அதேசமயம் வீட்டில் இருக்கும் வெப்பமும் வெளியேறும். மாலை நேரத்திலும் கதவைத் திறந்து வைத்தால் குளிர்சியான காற்று வீட்டை கூலாக்கும்.

தேவையற்ற அடைப்பை நீக்குங்கள் : வீட்டில் தேவையற்ற மர சாமான்கள், கட்டு கட்டாக பழைய நியூஸ் பேப்பர்கள் என குவித்து வைத்திருந்தால் அவற்றை உடனே நீக்கி வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். காற்று உள்ளே செல்ல இடத்தை விசாலமாக்குங்கள்.

செடி வளர்க்கலாம் : வீட்டிற்குள் இடம் இருந்தால் ஆங்காங்கே செடிகள் வைத்தால் வீடு குளிர்சியை தக்க வைக்கும். அதேபோல் வீட்டில் ஆங்காங்கே பவுல்களில் தண்ணீர் நிரப்பி கூழாங்கற்களைப் போட்டு வைத்தாலும் வீட்டில் குளுமை நிறைந்திருக்கும்.

காட்டன் துணி பயன்படுத்துங்கள் : ஸ்கிரீன் துணி. சோஃபா கவர், கட்டில் மெத்தை, தலையணை என எதுவாயினும் அவற்றிற்கு காட்டன் துணிகளை பயன்படுத்துங்கள். அவை வீட்டின் குளிர்ச்சியை தக்க வைக்கும். சிந்தடிக் போன்றவை சூட்டை கிளப்பக் கூடியது. முடிந்தால் தலையணை உறைகளில் அரிசியை நிரப்பி அதை தலைக்கு வைத்துத் தூங்குவதாலும் குளுர்ச்சி கிடைக்கும்.

தேவையற்ற மின் சாதனங்களை அனைத்து வையுங்கள் : வீட்டில் பல்பு தேவையில்லாமல் எரிந்தாலோ, கணினி, ஃபிரிஜ் என மின் சாதனப் பொருட்கள் தேவையில்லாமல் ஓடிக் கொண்டிருந்தால் அதை அனைத்து விடுங்கள். அவை வெப்பத்தை வெளியேற்றக் கூடியவை.

மொட்டை மாடியில் நீர் தெளியுங்கள் அல்லது தென்னை ஓலை பரப்புங்கள் : உங்கள் சீலிங் குளிர்ச்சியாக இருந்தால்தான் வீட்டின் வெப்பம் இறங்காது. அதற்கு அவ்வபோது மொட்டைமாடியில் தண்ணீர் தெளித்தால் சீலிங் குளிர்ச்சியாக இருக்கும். பச்சையான தென்னை ஓலைகளை மாடியில் பரப்புவதன் மூலம் நேரடியாக வெயில் வெப்பம் தாக்குவதைத் தவிர்க்கலாம். சீலிங் குளிர்ச்சியாக இருக்கும்.

வீட்டை குளுர்ச்சியாக வைத்துக்கொள்வதோடு உங்கள் உடலையும் குளுர்ச்சியாக வைத்துக்கொள்வதும் அவசியம். அதற்கு நிறை தண்ணீர் குடிப்பது, தர்பூசணி, நுங்கு, கிர்ணி பழம் சாப்பிடுவது என நீர் நிறைந்த பழங்களை சாப்பிடுங்கள்.திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore