ஆளி விதை
பழுப்பு நிறத்தில் இருக்கும் ஆளி விதைகள் சிறிய அளவில் காணப்படும். இது பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ள ஆரோக்கியமான ஒரு உணவாகும்.
இந்த ஆளி விதையை அப்படியே சாப்பிடலாம், பொடியாக்கி உணவுகளின் மீது தூவி சாப்பிடலாம் அல்லது முளைக்கட்ட வைத்தும் சாப்பிடலாம்.
அதுவும் தினமும் ஒரு கையளவு ஆளி விதையை சாப்பிட்டாலே போதும் ஏராளமான நன்மைகளை பெறலாம்.
ஆளி விதையின் நன்மைகள்
ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்து, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுப்பதோடு, நம் உடலில் கலோரிகளின் அளவு அதிகரிக்காமலும் தடுக்கிறது.
புற்றுநோய் தாக்கத்தை எதிர்த்துப் போராடி, மார்பகம், புரோஸ்டேட் மற்றும் குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைத்து, நம் உடலின் ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.
ஆளி விதையில் உள்ள நார்ச்சத்து கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
சருமம், நரம்புகள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன், நம் உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
நம் உடலினுள் உள்ள அழற்சியை எதிர்த்துப் போராடி, இதய நோய்கள், ஆஸ்துமா, சர்க்கரை நோய் ஆகிய பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, அழற்சி நோய்களான ருமடாய்டு ஆர்த்ரிடிஸ், சொரியாசிஸ் போன்றவை வராமல் தடுக்க உதவுகிறது.
மாதவிடாய் நின்ற பெண்கள், தொடர்ச்சியாக ஆளி விதையை உட்கொண்டு வந்தால், சுழற்சி மாற்றங்களை தடுப்பதுடன், கருப்பை செயலிழப்பு ஏற்படுவதைக் குறைக்கிறது.
ஆளி விதையை தினமும் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால் கண் கோளாறுகள், சிறுநீரகங்களில் ஏற்படும் அழற்சி போன்ற பிரச்சனைகளை குணமாக்குகிறது.
ஆளி விதையில் தயாரிக்கப்படும் எண்ணெய் முகப்பரு, சொரியாசிஸ் மற்றும் எக்ஸிமா போன்ற சரும பிரச்சனைகளை சரிசெய்து, நகம் மற்றும் தலைமுடி வெடிப்பிற்கு நல்ல தீர்வினை தருகிறது.