உங்கள் சுண்டு விரல் இப்படி இருக்கா? அப்போ இதுதான் உங்க குணமாம்

Updated On

உங்களின் சுண்டு விரலில் அளவைக் கொண்டு உங்களின் குணாதிசியம் மற்றும் எதிர் காலத்தை கண்டுபிடிப்பது எப்படி என்று இந்த தொகுப்பில் காணலாம்.

கோட்டிற்கு மேலே

உங்களின் சுண்டு விரல் மோதிர விரலின் மேல் கோட்டிற்கு மேல் இருந்தால் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள். எல்லாரிடமும் மகிழ்ச்சியாக சிரித்து பேசுவார்கள். அவர்களுக்கு அதிர்ஷடம் அவ்வளவு எளிதில் வசப் படாது. எனவே இவர்கள் தங்களுடைய உழைப்பதைதான் அதிர்ஷ்டத்தை விட அதிகம் நம்ப வேண்டும்.

கோட்டிற்கு சமமாக

இவர்கள் ஒருவரைப் பற்றி நன்றாக அறிந்த பின்னரே அவர்களுடன் பேசத் தொடங்குவார்கள். எவரையும் பார்த்து பேசி எடைப் போட்டுதான் அவர்களுடன் தொடர்பில் இருக்கலாமா வேண்டாமா என முடிவை எடுப்பார்கள்.

கோட்டிற்கு கீழே

மோதிர விரலின் மேல் கோட்டிற்கு கீழே இருந்தால் அவர்கள் அதிகம் கனவு காண்பார்கள். தனது கனவை நிஜமாக்க பலவாறு மெனக்கெடுவார்கள்.

இரு விரல்களும் சமமாக இருந்தால்

 

சிலருக்கு மோதிர விரல் மற்றும் சுண்டு விரல் சமமாக இருக்கும். இவ்வாறு இருப்பது அரிதாக இருக்கும், இப்படி சுண்டு விரல் அமையப் பெற்றவர்கள் பலமுகத் திறமை கொண்டவர்கள். தனித் தன்மை கொண்டவர்கள். அதிக மனோ பலம் வாய்ந்தவர்கள்.

சுண்டு விரலின் நுனி அமைப்பு

 

முக்கோண நுனி

உங்கள் சுண்டு விரலின் நுனி முக்கோண அமைப்பில் இருந்தல நீங்கள் எழுத்துத் துறையில் சிறந்து விளங்குவீர்கள்.மற்றவர்களிய வசீகரிக்கும் தோற்றத்தையும் பேச்சு வளத்தையும் பெற்றிருப்பீர்கள்.

சதுர நுனி

உங்களின் சுண்டு விரலின் நுனி சதுரமாக இருந்தால் எதையும் வெளிப்படையாக பேசி விடுவீர்கள். தவறோ , சரியோ முகத்திற்கு நேராக பேசுவதால் உங்களிடம் மற்றவர்கள் சற்று எச்சரிக்கையாகவே இருப்பார்கள்.

வளைந்த நுனி

உங்களின் சுண்டு விரல் வளைவாக காணப்பட்டால், அவர்கள் எந்த வம்பு தும்பிற்கும் போகாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர்கள். கொஞ்சம் பய உணர்வு கொண்டிருப்பதால், எல்லா விஷயங்களிலும் ஒன்றிற்கு பல தடவை யோசித்துதான் செயல்படுவார்கள்.



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore