உடலுக்கு குளிர்ச்சி தரும் பொன்னாங்கண்ணி கீரை

Updated On

அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது பொன்னாங்கண்ணி.

பொன் சத்துக்களை அதிகமாக கொண்டுள்ளதால் இதற்கு பொன்னாங்கண்ணி என்ற பெயர் வந்தது

பொன்னாங்கண்ணி கீரையில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் போன்ற சத்துகள் அடங்கியுள்ளது. பொன்னாங்கண்ணி வயிற்று புண், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நச்சுக்களை வெளியேற்றுகிறது. மேலும் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது.

கீரை வகைகளில் சிறந்த பொன்னாங்கண்ணி கீரையை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

பொன்னாங்கண்ணி கீரையின் நன்மைகள்
  • பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகு மற்றும் உப்பும் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றம் கிடைக்கும்.
  • உடல் புத்துணர்ச்சியுடன் இருக்க பொன்னாங்கண்ணி கீரையை நன்றாக அலசி சிறிதாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து அவையல் செய்து சாப்பிட்டு வந்தால் அசுத்த இரத்தம் சுத்தமாகும்.
  • துவரம் பருப்பு, நெய் ஆகியவற்றை பொன்னாங்கண்ணி கீரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், எலும்புகள் வலிமையாகி, உடல் எடை அதிகரிக்கும்.
  • பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கடுமையான வாய் துர்நாற்றம் நீங்குவதுடன், இதயம் மற்றும் மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
  • பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து 27 நாட்கள் சாப்பிட்டு வந்தால், மூலநோய் மற்றும் மண்ணீரல் நோய்கள் குணமாகுவதுடன், கண் பார்வை கூர்மையாகும்.
  • பொன்னாங்கண்ணி கீரையுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும்.
  • பொன்னாங்கண்ணி கீரையை பொறியல் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால், சருமத்தின் அழகு அதிகரிக்கும்.


திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore