கைக்குத்தல் அரிசி சமைக்கும் முறை | How to cook Brown Rice in Tamil

Updated On

How to cook Brown Rice in Tamil | பழுப்பு அரிசி சமைக்கும் முறை

சிவப்பு அரிசி சமைக்கும் முறை

பல்லாயிரம் ஆண்டுகளாக அரிசி மனித உணவில் முக்கியமான உணவாக இருந்து வருகிறது. நாம் தற்போது சாப்பிடும் அனைத்து அரிசி வகைகளும் இயந்திர முறையில் பக்குவபடுத்தப்பட்ட அரிசி தான். இதில் சத்துக்கள் அனைத்தும் நீக்கப்பட்டு வெறும் சக்கை மட்டுமே உள்ளது. கைக்குத்தல் அரிசியில் (brown rice in tamil) மேல் தோலனா உமி மட்டுமே நீக்கப்படுகிறது. இதனால் கைக்குத்தல் அரிசியில் நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் அப்படியே இருக்கும். பிரவுன் அரிசியில் அதிக நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளது.
இந்த பதிவில் பிரவ்ன் அரிசி அல்லது கைக்குத்தல் அரிசியின் பயன்கள் மற்றும் எப்படி சமைப்பது என்று தெரிந்து கொள்வோம்.

Brown Rice Benefits in Tamil | கைக்குத்தல் அரிசி பயன்கள்

 • உடல் எடையை குறைக்கும்.
 • சர்க்கரைநோய் அளவை கட்டுப்படுத்த உதவும்.
 • கொழுப்பு அளவை குறைக்கும்.
 • எலும்புகள் பலமாகும்.
 • நரம்பு மண்டலத்தை வலுவாக்கும்.
 • பித்த பை கற்கள் வராமல் தடுக்கும்.
 • ஆஸ்துமா நோயை குறைக்கிறது.
 • மலச்சிக்கலை தடுக்கிறது.
 • இதயநோய் பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது

கைக்குத்தல் அரிசி சமைக்கும் முறை | Brown Rice Cooking Method

 1. பழுப்பு அரிசி 1 கப் எடுத்து, தண்ணீரில் சேர்த்து நன்கு பிசைந்து பிசைந்து கழுவி எடுத்துக்கொள்ளவும்.
 2. கொதி நிலை வரும் வரை தண்ணீரை கொதிக்க வைத்து, கழுவிய அரிசியில் மூழ்கும் வரை சேர்த்து, குறைந்தது 1 மணிநேரம் ஊற வைக்கவும்.
 3. பின்னர் ஒரு பாத்திரத்தில் அல்லது பானையில் 6 கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து, பிரவுன் அரிசியை வடிகட்டி சேர்க்கவும். மூடி வைத்து 45 நிமிடங்கள் மிதமான சூட்டில் வேகா விடவும்.
 4. 40-35 நிமிடங்களுக்குப் பிறகு, அரிசியை நசுக்கி பார்த்தால் மென்மையாக இருந்தால், அதுதான் சரியான நிலை.
 5. பின்னர் அடுப்பை அணைத்து மூடி வைத்து, 15 நிமிடங்களுக்கு அப்படியே விடவும். பின்னர் எடுத்து பரிமாறினால் சரியாக இருக்கும்.

காய்கறி சாம்பார் அல்லது அசைவ குழம்புடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

கைக்குத்தல் அரிசி குக்கரில் சமைக்கும் முறை | How to Cook Kaikuthal Arisi in Pressure Cooker

 1. அரிசியை கொதிக்க வைத்த தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
 2. பின்னர் ஒரு பிரஷர் குக்கரில் 1 கப் அரிசிக்கு 5 கப் தண்ணீர் சேர்த்து,  1 விசில் வந்ததும் தீயை குறைத்து 30 நிமிடம் வேகவைக்கவும்.
 3. பின்னர் அடுப்பை அனைத்து 10-15 நிமிடம் அப்படியே விடவும். 10 நிமிடத்திற்கு பிறகு எடுத்து பரிமாறவும்.

பாரம்பரிய அரிசி வகைகள் | Types of brown rice in Tamil

 • கருப்பு கவுனி அரிசி
 • மாப்பிள்ளை சம்பா
 • கருங்குருவை அரிசி
 • பூங்கார் கைகுத்தல் அரிசி
 • காட்டுயாணம் அரிசி
 • மூங்கில் அரிசி
 • கருடன் சம்பா அரிசி
 • குடவாழை அரிசி
 • கல்லுண்டை சம்பா


திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore