கணபதி என்றிட கலங்கும் வல்வினை.
கணபதி என்றிட காலனும் கைதொழும்.
கணபதி என்றிட கருமம் ஆதலால்.
கணபதி என்றிட கவலை தீருமே..!
கணபதியை வணங்கினால் அனைத்து துன்பங்களையும் விலக்கி, வாழ்வுக்கு ஒளியேற்றுவார் என்பது அனைவரின் நம்பிக்கை. பல்வேறு பெயர்களில் அருள் வழங்கிக் கொண்டிருக்கும் பிள்ளையாரில், எந்த ராசியினர் எந்த பெயரில் உள்ள பிள்ளையாரை வணங்கினால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
விநாயகர் வினைகள் தீர்ப்பவர். சங்கடங்களை நீக்கி தடைகளை தகர்த்து எறிபவர் சங்கரன் மைந்தன்.முழுமுதற்கடவுளாக வணங்கப்படுபவர் பிள்ளையார். விநாயகரை சிவ ஆலயங்களில் வணங்குவது போல விஷ்ணு ஆலயங்களில் தும்பிக்கை ஆழ்வாராக வணங்குகின்றனர். சக்தியின் மைந்தன் கணபதியை சின்ன பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பத்தோடு வணங்குகின்றனர். ஆனைமுகத்தோனை வணங்குபவர்கள் எத்தகைய துன்பங்களில் இருந்தும் விடுபடுவார்கள் என்பது நம்பிக்கை.
விநாயகருக்கு பல வடிவங்கள் உண்டு. பல பெயர்கள் உண்டு. 108 கணபதிகள் உள்ளனர். கவலைகளை போக்கும் கணேசனுக்கு பல பெயர்கள் உண்டு. ஆதி விநாயகர் தொடங்கி வித்யா கணபதி, வீர கணபதி, செல்வ கணபதி பல கணபதிகள் உள்ளனர். விநாயகரை வணங்கினால் தோஷங்கள் பறந்தோடும். மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்கள் எந்த கணபதியை வணங்கலாம் என்று பார்க்கலாம்.
மேஷம் – வீர விநாயகர்
மேஷ ராசிக்காரர்கள் வீரமானவர்கள். செவ்வாயை ராசி நாதனாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்கள் மனோதைரியம் கொண்டவர்கள் வீர கணபதியை வணங்க வெற்றிகள் தேடி வரும். நீங்கள் வீர விநாயகரை ஒன்பது வாரங்கள் வணங்க காரியங்கள் உங்களின் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும்.
ரிஷபம் – ஸ்ரீ வித்யா கணபதி
சுக்கிரனை ஆதிக்க நாயகனாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களுக்கு ராஜ ராஜேஸ்வரி யோகம் கிடைக்க வேண்டும் எனில் கல்வி செல்வம் கிடைக்க ஸ்ரீ வித்யா கணபதியை வணங்கலாம். சங்கடங்கள் தீர சதுர்த்தி நாளில் மஞ்சள் ஆடை அணிந்து ஸ்ரீவித்யா கணபதியை வணங்கலாம் நன்மைகள் நடைபெறும்.
மிதுனம் – லட்சுமி கணபதி
புதனை ராசி நாதனாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களுக்கு திறமையும் அதிர்ஷ்டமும் வந்து சேரும். உங்களுக்கு வரும் மறைமுக எதிர்ப்புகள் போட்டிகளை சமாளிக்க நீங்க லட்சுமி கணபதியை வணங்குங்கள். சகல செல்வமும், லட்சுமி கடாட்சமும் வீடு தேடி வரும்.
கடகம் – நவரச விநாயகர்
சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட நீங்கள் பல கலைகளுக்கு சொந்தக்காரர் சாந்தமாகவும், சில நேரங்களில் கோபமாகவும் இருக்கும் நீங்கள் வணங்க வேண்டிய கணபதி நவரச விநாயகரை வணங்குங்கள்.
சிம்மம் – விஜய கணபதி
சூரியனை ராசி நாதனாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்கள் தலைமைப்பண்புடையவர். உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் இருக்கும். ஒன்பது ஞாயிறுக்கிழமை சூரிய ஓரையில் விநாயகர் ஆலயம் சென்று சிதறு தேங்காய் போட்டு வழிபடலாம். அற்புதமான திறமையும் அசாத்தியமான மன வலிமையும் கொண்ட நீங்கள் வணங்க வேண்டிய கணபதி ஸ்ரீவிஜய கணபதி. உங்களுக்கு வெற்றி அதிகம் கிடைக்கும்.
கன்னி – மோகன கணபதி
கன்னி ராசிக்காரர்கள் புதனை ஆட்சி நாதனாகக் கொண்டவர்கள். வளர்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் கணபதியை வணங்க நன்மைகள் கிடைக்கும். காரியங்களில் வெற்றியும் புத்திசாலித்தனமும் கொண்ட நீங்கள் மோகன கணபதியை வணங்கலாம். உங்கள் வாழ்க்கை துணையுடன் இணைந்து வெற்றி பெறுவீர்கள்.
துலாம் – பஞ்சமுக விநாயகர்
சுக்கிரனை ஆட்சி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்கள் வாழ்க்கையில் வெற்றிகள் மேன்மேலும் கிடைக்க திங்கட்கிழமைகளில் கணபதியை வணங்க சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும். உங்களின் லட்சியத்தில் வெற்றி பெற பஞ்சமுக விநாயகரை வீட்டில் வைத்து வணங்கலாம்.
விருச்சிகம் – சக்தி கணபதி
செவ்வாயை ஆட்சி நாதனாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்கள் உற்சாகமானவர்கள். நினைத்ததை சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் நீங்கள் சக்தி கணபதியை வணங்களாம். எண்ணற்ற சக்திகள் செல்வங்கள் தேடிவரும்.
தனுசு – சங்கடஹர கணபதி
குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட நீங்கள் நேர்மையானவர்கள். நேர்வழியில் சென்று எதையும் சாதிப்பீர்கள். ஏழரை சனியில் பாதிப்பில் இருந்து விடுபட தினசரியும் விநாயகரை வழிபடலாம். உங்களின் வெற்றி நிரந்தரமாக நீங்கள் சங்கடஹர கணபதியை வணங்க வேண்டும்.
மகரம் – யோக கணபதி
சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட நீங்கள் சனியினால் ஏற்படும் சங்கடங்கள் ஒருபுறம் இருந்தாலும் ராகு கேதுவினால் ஏற்படும் தொந்தரவுகள் நீங்க நீங்க பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வணங்கலாம். உங்கள் ஆசையும் எண்ணமும் நிறைவேற யோக கணபதியை வணங்க வேண்டும். யோக கணபதியை வணங்க வெற்றிகள் வீடு தேடி வரும்.
கும்பம் – சித்தி கணபதி
சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்கள் சித்தி கணபதியை வழிபட சந்தோஷங்கள் அதிகரிக்கும். தினசரியும் புதிய புதிய விசயங்களை கற்றுக்கொள்வீர்கள். தனித்திறமையால் முன்னேறும் நீங்கள் அருகம்புல்லால் விநாயகரை அர்ச்சனை செய்து வர நன்மைகள் நடைபெறும்.
மீனம் – பால கணபதி
குருபகவானை ராசி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய கணபதி பால கணபதி. மனம் போல் நல்ல வாழ்வு அமைய நல்லவைகளையே நினையுங்கள். அரசமரத்தடி விநாயகரை சதுர்த்தி நாளில் வணங்க சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் சங்கடங்கள் தீரும்.