27 நட்சத்திரங்களும் அதற்கான கிரகம் மற்றும் தெய்வம்

Updated On

ஜோதிடத்தில் பனிரெண்டு ராசிகள், 27 நட்சத்திரங்கள் உள்ளன. நாம் பிறக்கும் போது எந்த நட்சத்திரம் ஆதிக்கத்தில் உள்ளதோ அதுவே ஜென்ம நட்சத்திரம் எனப்படுகிறது. நமது நட்சத்திரத்திற்கும் வாழ்விற்கு தொடர்பு உள்ளதாக ஜாதக புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் – சூரியன் (ஞாயிறு) – சிவன்

ரோகிணி, அஸ்தம், திருவோணம் – சந்திரன் (திங்கள்) – சக்தி

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் – செவ்வாய் – முருகன்

திருவாதிரை, சுவாதி, சதயம் – ராகு – காளி, துர்க்கை

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி – குரு (வியாழன்) – தட்சிணாமூர்த்தி

பூசம், அனுஷம், உத்திரட்டாதி – சனி – சாஸ்தா

ஆயில்யம், கேட்டை, ரேவதி – புதன் – விஷ்ணு

மகம், மூலம், அசுவினி – கேது – வினாயகர்

பரணி, பூரம், பூராடம் – சுக்கிரன் (வெள்ளி) – மகாலட்சுமி

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் மற்றும் மலர்கள் பற்றி ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளதாவது :

எண்  நட்சத்திரங்கள்  அதிஷ்ட தெய்வங்கள் மலர்கள்
1 அஸ்வினி ஸ்ரீ சரஸ்வதி தேவி சாமந்தி
2 பரணி ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்) முல்லை
3 கார்த்திகை ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்) செவ்வரளி
4 ரோகிணி ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு) பாரிஜாதம், பவளமல்லி
5 மிருகசீரிடம் ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்) ஜாதி மல்லி
6 திருவாதிரை ஸ்ரீ சிவபெருமான் வில்வப் பூ, வில்வம்
7 புனர்பூசம் ஸ்ரீ ராமர் (விஷ்ணு) மரிக்கொழுந்து
8 பூசம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்) பன்னீர் மலர்
9 ஆயில்யம் ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்) செவ்வரளி
10 மகம் ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்) மல்லிகை
11 பூரம் ஸ்ரீ ஆண்டாள் தேவி தாமரை
12 உத்திரம் ஸ்ரீ மகாலக்மி தேவி கதம்பம்
13 ஹஸ்தம் ஸ்ரீ காயத்திரி தேவி வெண்தாமரை
14 சித்திரை ஸ்ரீ சக்கரத்தாழ்வார் மந்தாரை
15 சுவாதி ஸ்ரீ நரசிம்மமூர்த்தி மஞ்சள் அரளி
16 விசாகம் ஸ்ரீ முருகப் பெருமான் இருவாட்சி
17 அனுசம் ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர் செம்முல்லை
18 கேட்டை ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) பன்னீர் ரோஜா
19 மூலம் ஸ்ரீ ஆஞ்சனேயர் வெண்சங்கு மலர்
20 பூராடம் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்) விருட்சி (இட்லிப்பூ
21 உத்திராடம் ஸ்ரீ வினாயகப் பெருமான் சம்பங்கி
22 திருவோணம் ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணு) ரோஜா
23 அவிட்டம் ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணு) செண்பகம்
24 சதயம் ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்) நீலோற்பவம்
25 பூரட்டாதி ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்) வெள்ளரளி
26 உத்திரட்டாதி ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்) நந்தியாவட்டம்
27 ரேவதி ஸ்ரீ அரங்கநாதன் செம்பருத்தி

 திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore