ஜோதிடத்தில் பனிரெண்டு ராசிகள், 27 நட்சத்திரங்கள் உள்ளன. நாம் பிறக்கும் போது எந்த நட்சத்திரம் ஆதிக்கத்தில் உள்ளதோ அதுவே ஜென்ம நட்சத்திரம் எனப்படுகிறது. நமது நட்சத்திரத்திற்கும் வாழ்விற்கு தொடர்பு உள்ளதாக ஜாதக புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் – சூரியன் (ஞாயிறு) – சிவன்
ரோகிணி, அஸ்தம், திருவோணம் – சந்திரன் (திங்கள்) – சக்தி
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் – செவ்வாய் – முருகன்
திருவாதிரை, சுவாதி, சதயம் – ராகு – காளி, துர்க்கை
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி – குரு (வியாழன்) – தட்சிணாமூர்த்தி
பூசம், அனுஷம், உத்திரட்டாதி – சனி – சாஸ்தா
ஆயில்யம், கேட்டை, ரேவதி – புதன் – விஷ்ணு
மகம், மூலம், அசுவினி – கேது – வினாயகர்
பரணி, பூரம், பூராடம் – சுக்கிரன் (வெள்ளி) – மகாலட்சுமி
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் மற்றும் மலர்கள் பற்றி ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளதாவது :
எண் | நட்சத்திரங்கள் | அதிஷ்ட தெய்வங்கள் | மலர்கள் |
1 | அஸ்வினி | ஸ்ரீ சரஸ்வதி தேவி | சாமந்தி |
2 | பரணி | ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்) | முல்லை |
3 | கார்த்திகை | ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்) | செவ்வரளி |
4 | ரோகிணி | ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு) | பாரிஜாதம், பவளமல்லி |
5 | மிருகசீரிடம் | ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்) | ஜாதி மல்லி |
6 | திருவாதிரை | ஸ்ரீ சிவபெருமான் | வில்வப் பூ, வில்வம் |
7 | புனர்பூசம் | ஸ்ரீ ராமர் (விஷ்ணு) | மரிக்கொழுந்து |
8 | பூசம் | ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்) | பன்னீர் மலர் |
9 | ஆயில்யம் | ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்) | செவ்வரளி |
10 | மகம் | ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்) | மல்லிகை |
11 | பூரம் | ஸ்ரீ ஆண்டாள் தேவி | தாமரை |
12 | உத்திரம் | ஸ்ரீ மகாலக்மி தேவி | கதம்பம் |
13 | ஹஸ்தம் | ஸ்ரீ காயத்திரி தேவி | வெண்தாமரை |
14 | சித்திரை | ஸ்ரீ சக்கரத்தாழ்வார் | மந்தாரை |
15 | சுவாதி | ஸ்ரீ நரசிம்மமூர்த்தி | மஞ்சள் அரளி |
16 | விசாகம் | ஸ்ரீ முருகப் பெருமான் | இருவாட்சி |
17 | அனுசம் | ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர் | செம்முல்லை |
18 | கேட்டை | ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) | பன்னீர் ரோஜா |
19 | மூலம் | ஸ்ரீ ஆஞ்சனேயர் | வெண்சங்கு மலர் |
20 | பூராடம் | ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்) | விருட்சி (இட்லிப்பூ |
21 | உத்திராடம் | ஸ்ரீ வினாயகப் பெருமான் | சம்பங்கி |
22 | திருவோணம் | ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணு) | ரோஜா |
23 | அவிட்டம் | ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணு) | செண்பகம் |
24 | சதயம் | ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்) | நீலோற்பவம் |
25 | பூரட்டாதி | ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்) | வெள்ளரளி |
26 | உத்திரட்டாதி | ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்) | நந்தியாவட்டம் |
27 | ரேவதி | ஸ்ரீ அரங்கநாதன் | செம்பருத்தி |