போகி பொங்கல் வாழ்த்துக்கள் 2024 | Bhogi Festival in Tamil 2024
மேலும் அறிய: பொங்கல் பண்டிகை வரலாறு
போகி பண்டிகை என்றால் என்ன? Reason for Bhogi Festival
தமிழகத்தில் நான்கு நாட்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மார்கழி மாத கடைசி நாள் போகி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அன்று வீட்டை சுத்தப்படுத்தி, புது வர்ணம் பூசி, வீட்டின் மேற்பரப்பில் காப்பு கட்டும் வழக்கம் உள்ளது. “பழையன கழித்தலும், புதியன புகுதலும்” போகிப் பண்டிகையின் நோக்கமாக கருதப்படுகிறது. போகி என்பதன் பொருள் பழையவற்றை போக்குதல் என்பதாகும். வீட்டை சுத்தப்படுத்தும் போது வீட்டில் தேவையற்ற மற்றும் பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவர். பொருட்களை மட்டுமல்லாது, பழைய பழக்கங்கள், கோபம் , உறவுகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் போன்ற வேண்டத்தகாத எண்ணங்களையும் அக்னி குண்டத்தில் எறிந்து பொசுக்கி வீட்டை மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும், தவறான எண்ணங்களையும் நீக்க வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும். பல்வேறு தெய்வீகக் குணங்களை தூண்டுவதன் மூலம் ஆன்மாவை உணர்தல், ஆன்மாவை தூய்மையாக்குதல் போன்ற செயல்பாடுகளை இப்பண்டிகை பிரதிபலிக்கிறது.
மேலும் அறிய: காப்பு கட்டுதல் என்றால் என்ன ?
பழந்துயரங்களை அழித்துப் போக்கும் இப்பண்டிகையைப் “போக்கி’ என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி “போகி’ என்றாகிவிட்டது. இந்த நாளை போகி பண்டிகையாக கொண்டாடுகிறோம்.
காற்றை மாசுபடுத்தும் பொருட்களை எரிக்காமல் சுற்றுசூழலை பாதுகாப்போம். மாசில்லா போகி பண்டிகை கொண்டாடுவோம். அனைவருக்கும் திருத்தமிழ் நாட்காட்டியின் போகி திருநாள் வாழ்த்துக்கள்.
Happy Bhogi Pongal 2024 | போகி பொங்கல் வாழ்த்துக்கள் 2024
Bhogi Pongal Kavithai | போகி பண்டிகை கவிதை
Happy Bhogi Pongal – 2024 | போகி பொங்கல் நல்வாழ்த்துக்கள் 2024
Bhogi 2024 Wishes in Tamil | போகி வாழ்த்துக்கள் 2024
போகி பொங்கல் நல்வாழ்த்துக்கள் | Pogi Pongal Wishes in Tamil
மேலும் அறிய: Happy Pongal Wishes 2024 in Tamil
Bhogi Pandigai in Tamil 2024 | போகி பொங்கல் வாழ்த்துக்கள் 2024
இனிய போகி வாழ்த்துக்கள் | Bhogi Pongal in Tamil
மேலும் அறிய: மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் 2024