Top 50+ Gandhi Quotes in Tamil | மகாத்மா காந்தியின் பொன்மொழிகள்

Updated On

மகாத்மா காந்தியின் கவிதைகள் | Mahatma Gandhi Quotes in Tamil

காந்தி இந்திய சுதந்திர போராட்டத்தின் கதாநாயகர், அவர் தேச பிதா எனவும் அழைக்கப்படுகிறார். மோகன்தாசு கரம்சந்த் காந்தி என்ற இயற்பெயர் கொண்ட காந்தி, அரசியல் தொலைநோக்கு பார்வையாளராக மட்டுமல்லாமல் அவர் ஒரு ஆழ்ந்த சிந்தனையாளர் மற்றும் தத்துவஞானியாக திகழ்ந்தார்.

மகாத்மா காந்தி கல்வி தத்துவங்கள் காலத்தை தாண்டி, உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. அவரின் அஹிம்ச வாதம், நீதி மற்றும் எளியோர்களுக்கு உதவும் பண்பு போன்றவற்றை உடைய எளிமையான மேற்கோள்களை இங்கே காணலாம்.

Gandhi Adigal in Ponmoligal | காந்தியடிகளின் பொன்மொழிகள் 20

  • இந்த உலகத்தில் உண்மையான அமைதி நிலவ வேண்டும் என்று நினைத்தால்
    அதனை குழந்தைகளிடம் இருந்து தொடங்க வேண்டும்.
  • அன்பின் சக்தி அதிகாரத்தை  வெல்லும் நாளில், உலகம் அமைதியை அறியும்.
  • உன் மனதில் இருக்கும் எண்ணங்கள் தான், உன் வாழ்க்கையை மாற்றும் வண்ணங்கள் என்பதை மறந்துவிடாதே.
  • நாளை நீங்கள் இறந்து விடுவீர்கள் என்று நினைத்து உங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள்!
  • உங்களைக் கண்டுபிடிப்பதற்கான சிறந்த வழி, மற்றவர்களுக்கு சேவை செய்வதில் உங்களை இழப்பதாகும்.
  • தவறுகளைச் செய்வதற்கான சுதந்திரத்தை உள்ளடக்காவிட்டால் சுதந்திரம் மதிப்புக்குரியது அல்ல.
  • நாளையே இறந்துவிடுவாய் என்றால் இன்றே வாழ்ந்துவிடு, வாழ்நாள் நிறைய இருக்கிறது என்றால் கற்றுக் கொண்டே இரு.
  • ஒரு நாட்டின் மகத்துவத்தை அதன் விலங்குகள் நடத்தப்படும் விதத்தை வைத்து மதிப்பிட முடியும்.
  • நீங்கள் சரியாக இருக்கும்போது, ​​நீங்கள் கோபப்பட வேண்டிய அவசியமில்லை, நீங்கள் தவறாக இருக்கும்போது, ​​உங்களுக்கு கோபப்பட உரிமை இல்லை.
  • முதலில் உன்னை உதாசீனம் செய்வார்கள், பிறகு கேலி செய்வார்கள்,அதன் பிறகு சண்டையிடுவார்கள், கடைசியில் நீ வென்றுவிடுவாய்.
  • பலம் உடல் வலிமையை சார்ந்தது அல்ல, வெல்ல முடியாத மன தைரியத்தை சார்ந்தது. மன தைரியத்தில் ஒருவர் நிலைத்து இருந்தாலே, எளிதாக வெற்றிபெற்று விடலாம்.
  • தோல்வி மனச் சோர்வைத் தருவதில்லை. மாறாக ஊக்கத்தையே தருகிறது.
  • பொறுமையும் விடாமுயற்சியும் இருந்தால் சிரமங்கள் எனும் மலையை வென்று விடலாம்.
  • உன் எதிர்காலம், உன் இன்றைய செயலை பொருத்தது.
  • தவறுகளைச் செய்வதற்கான சுதந்திரத்தை உள்ளடக்காவிட்டால் சுதந்திரம் மதிப்புக்குரியது அல்ல.
  • தியாகம் தான் வாழ்க்கை. அது இயற்கை கற்றுத் தரும் பாடம்.
  • நீங்கள் எதை செய்தாலும் உங்கள் உள்ளத்திற்கும் உலகத்திற்கும் உண்மையாகவே நடந்து கொள்ளுங்கள்.
  • அன்பு எங்கிருக்கிறதோ அங்கே கடவுள் இருக்கிறார்.
  • கடவுள் மாறாதவர். அவரைப்பற்றி மக்கள் தெரிந்து கொண்டிருக்கும் எண்ணங்களே மாறிக் கொண்டிருக்கின்றன.
  • எங்கே அன்பு இருக்கிறதோ, அங்கே வாழ்க்கை இருக்கிறது.

தேசப்பிதா மகாத்மா காந்தியின் பொன்மொழிகள்

  • ஒரு தேசத்தின் மகத்துவத்தையும் அதன் தார்மீக முன்னேற்றத்தையும் அதன் விலங்குகள் நடத்தப்படும் விதத்தை வைத்தே மதிப்பிட முடியும்.
  • உங்கள் செயல்களால் என்ன விளைவுகள் வருகின்றன என்பதை நீங்கள் ஒருபோதும் அறிய மாட்டீர்கள், ஆனால் நீங்கள் எதுவும் செய்யாவிட்டால், எந்த பலனும் இருக்காது.
  • ஒருவர் துன்பப்படும்போது நிபந்தனை ஏதுமின்றி உதவுவது தான் நட்பு.
  • எல்லா விதத்திலும் ஒத்துப் போவது நட்பல்ல. கருத்து மோதல் ஏற்படும் போதிலும் அதைத்தாங்கிக் கொள்வது தான் உண்மையான நட்பு.
  • நட்பு என்பது உடன்படிக்கையன்று. கைம்மாறு விரும்பாத ஒரு உறவேயாகும்.
  • நண்பர்களைப் பற்றி பெருமையாக நிறையப் பேசுங்கள். பிடிக்காதவர்களைப் பற்றி எந்த இடத்திலும் எதுவும் பேசாதீர்கள்.
  • உங்கள் அனுமதியின்றி மக்களால் உங்களை புண்படுத்த முடியாது.
  • மென்மையான வழியில், நீங்கள் உலகை அசைக்க முடியும்.
  • மனிதர்களை திருப்தி படுத்த அனைத்துமே உலகில் உண்டு, ஆனால் மனிதனின் பேராசையை திருப்தி படுத்த எதுவும் இல்லை உலகில்.
  • மதத்திற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்பவர்களுக்கு மதம் என்றால் என்னவென்றே தெரியாது.
  • நீங்கள் நினைப்பதும், பேசுவதும், செய்வதும் இணக்கமாக இருக்கும்போதுதான் மகிழ்ச்சி” என்றார்.

மகாத்மா காந்தி தத்துவங்கள் | Mahatma Gandhi Tamil Quotes

  • மற்றவர்களை கெட்டவர்கள் என்று சொல்வதன் மூலம் நாம் நல்லவர்களாகி விட மாட்டோம்…!
  • உலகம் எப்படி இருக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ அது போல் முதலில் நீ மாறு.
  • பலவீனமானவர்கள் ஒருபோதும் மன்னிக்க முடியாது. மன்னிப்பு என்பது பலசாலிகளின் குணம்.
  • உறுதியான மற்றும் ஒத்த எண்ணம் கொண்ட ஒரு சிறிய குழுவால் வரலாற்றின் போக்கையே மாற்ற முடியும்.
  • கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல. தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவனே உண்மையான குருடன்.
  • உங்களிடம் நகைச்சுவை உணர்வு இல்லையென்றால், நீங்கள் தற்கொலை செய்து நீண்டகாலமாகிறது என்று அர்த்தம்.
  • எப்படி சிந்திக்க வேண்டும் என்று தெரிந்தவர்களுக்கு ஆசிரியர் தேவையில்லை.
  • ஒரு கண்ணுக்கு ஒரு கண் உலகையே குருடாக்கி விடுகிறது.
  • மகிழ்ச்சி உன் எண்ணத்தில் இருக்கிறது, உன் வார்த்தையில் இருக்கிறது. நீ செய்யும் நல்லிணக்கத்தில் இருக்கிறது.
  • பலவீனமானவர்களால் ஒருபோதும் மன்னிக்க முடியாது. மன்னித்தல் என்பது வலிமையானவர்களின் பண்பாகும்.
  • மனிதனாக இருப்பது அல்ல மனிதம், மனிதாபிமானத்துடன் இருப்பதே மனிதம்.
  • கூட்டத்தில் நிற்பது எளிதானது. ஆனால் தனியாக நிற்பதற்கு தைரியம் வேண்டும்.

இந்த பொன்மொழிகள் மகாத்மா காந்தியின் ஞானம், கொள்கைகள் மற்றும் அகிம்சை, நீதி மற்றும் மனிதகுலத்தின் மேம்பாட்டிற்கான அவரது உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன. அவரது வார்த்தைகள் உலகெங்கிலும் உள்ள தனிநபர்களையும் இயக்கங்களையும் தொடர்ந்து ஊக்குவிக்கின்றன மற்றும் வழிநடத்துகின்றன.



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore