கல்வி பற்றிய பழமொழிகள் | Kalvi Patriya Palamoligal in Tamil

Updated On

கல்வி அறிவு பற்றிய பழமொழிகள் | kalvi Arivu Patriya Palamoligal in Tamil

தமிழ் பழமொழிகள் படங்களுடன்

கல்வி என்றால் என்ன? (What is Education?)

கல்வி(Education ) என்பது ஒரு மனிதனின் அறிவு மட்டுமல்ல, அவரின் ஒழுக்கம், உடல், மனது மற்றும் சமுதாய மதிப்பு, இவை அனைத்தையும் உயர்த்தும் ஒரு சமூக அமைப்பாகும். கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம். அறிவு, திறமை போன்றவற்றையும் தந்து ஒரு புதிய சமூகத்தை உருவாக்கி பண்பாடு, நடத்தை, போன்றவற்றையும் தந்து மனிதனை ஒரு முழுமையான ஆற்றல் உள்ள ஒரு மனிதனாக மாற்றுகிறது.

Proverbs About Education In Tamil | கல்வி பற்றிய பழமொழிகள் பத்து

கல்வி குறித்து வழங்கப்படும் பத்து பழமொழிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

  1. கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
  2. அரைக் கல்வி முழு மொட்டை.
  3. அறிவில்லாத ஆர்வம் சுடரில்லாத நெருப்பு.
  4. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.
  5. கல்லாதவரே கண்ணில்லாதவர்
  6. தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர்.
  7. சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி
  8. கற்கையில் கல்வி கசப்பு: கற்றபின் அதுவே இனிப்பு.
  9. கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.
  10. கல்வி உள்ள வாலிபன் கன கிழவனே
  11. கல்வி ஒன்றே அழியாச் செல்வம்
  12. அறிவுடையாரை அரசனும் விரும்புவான்
  13. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.

அறிவின் பெருமையை விளக்கும் பழமொழிகள்

 பழமொழிகள் படத்துடன்

அறிவு பழமொழிகள் | Arivu Palamoligal

  1. ஐயமே அறிவின் திறவுகோல்.
  2. நம்மை அறிவதே நமக்கு அறிவாகும்.
  3. அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
  4. அறிவு தன் விலை அறியும்.
  5. அறிய அறியக் கெடுவார் உண்டா?
  6. அரைகுறை அறிவு ஆபத்தில் முடியும்.
  7. அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.
  8. அறிவில்லாத ஆர்வம் சுடரில்லாத நெருப்பு.
  9. அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
  10. அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.


திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore