ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள் | Teachers Day Quotes in Tamil

Updated On

ஆசிரியர் தினம் கவிதைகள் தமிழ் | Teachers day wishes in tamil Quotes

திருவாளர் ராதாகிருஷ்ணன் அவர்களது பிறந்தநாள் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி கொண்டாடுகிறோம், அந்நாளையே ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அவர் ஆசிரியராக மட்டுமில்லை மாணவர்களோடு மாணவராக கலந்து நட்புடன் கல்வி போதித்தவர். சுதந்திரத்திற்கு பிறகு இந்திய நாட்டின் முதல் துணை குடியரசு தலைவரும், இரண்டாவது குடியரசு தலைவர் என்ற பெருமையும் இவருக்கே உரியது. பல சிறந்த மாணாக்கர்களை உருவாக்கி பாரத ரத்னா விருது பெற்ற நல் ஆசிரியரும் இவர்தான். ஆகையால் தான் இவருடைய பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம்.

ஆசிரியர் பற்றிய கவிதை 2023 | Teachers Day Quotes in Tamil

happy teachers day

நாம் பயணிக்கும்
வாழ்க்கைப் பாதையில்
வாழ்வியல் பாடங்களை கற்றுத்தரும்
அனைவருமே ஆசிரியர்கள் தான்…

இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!

ஆசிரியர் தினம் கவிதை | Teachers Day Wishes in Tamil Images

happy teachers day quotes

 

எண்ணையும் எழுத்தையும்
எனக்கு கற்றுத் தந்தவரே…
என்றும் எந்தன் நலம்நாடி
பக்க பலமாய் நின்றவரே…
உன்னை என்றும் மறவோம்!!

இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!

 

ஆசிரியர் தின பொன்மொழிகள் | Teachers Day Quotes in Tamil Kavithai

happy teachers day quotes tamil

இயலாமை என்னும் இருளை போக்கி
உன்னாலும் இயலும் என ஊக்கப்படுத்தி
நம் திறமையை வளர்த்து
நமக்கு கல்வியை கற்றுத் தந்தவர்கள் ஆசிரியர்கள்.

இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!

ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கவிதை | Teacher Kavithai in Tamil

தெளிவு, திறமை, தைரியம் அளித்து
அன்பு பாசம் நேசமென காட்டி
நம் வாழ்வில் ஒரு அங்கமாக, வழிகாட்டியாக இருக்கும்.
அனைத்து ஆசிரியர்களுக்கும்
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

ஆசிரியருக்கு ஆசிரியர் கவிதை | Heart Touching Teachers Day Quotes

teachers day kavithai in tamil lyrics

வாழ்வில் சிறக்க சிகரம் தொட
ஏணிப்படிகளாய் மாறி எனை ஏற்றி வைத்து
என் விடியலுக்கான விளக்கு ஒளியாய்
வழிநடத்திய ஆசிரியர்
அனைவருக்கும்…
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!

ஆசிரியர் தின கவிதைகள் 2023 | Teachers Day Quotes in Tamil Images

teachers day kavithai in tamil

 

தவறுகளை திருத்த தண்டனை கொடுத்து
திறமையை ஊக்குவிக்க பரிசுகள் கொடுத்து
சிந்தனையை தூண்டி சிற்பங்களை செதுக்கும்
சிறந்த சிற்பிகள் தான் ஆசிரியர்…

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!

ஆசிரியர் பற்றிய கவிதைகள் | Short Teacher Quotes in Tamil

 

புதர்களை கூட பக்குவப்படுத்தி
நற்பயிர்களை உருவாக்கும்
விளை நிலமே ஆசிரியர்கள்!!
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!

ஆசிரியர் தின வாழ்த்து அட்டை | Teacher Quotes in Tamil for Students

அறியாமை அகல
அறிவு சுடர் ஏற்றும்
தியாக தீபமே..

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!

Wishes ஆசிரியர் தின வாழ்த்துகள் | Inspirational Teacher Quotes in Tamil

எட்டாக்கனியை எட்டிப்பறிக்க ஏணிபோல் ஏற்றிடும்
எட்டு மணிநேர தாய்
ஆசிரியர்கள்.

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!

Quotes ஆசிரியர் தின வாழ்த்துகள் | Proud to be Teacher Quotes in Tamil

அரிதென அறிவையும் எளிதென பெற,
புத்தகமின்றிய பாடமும் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு…

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!

ஆசிரியர் Quotes | Teachers Day Quotes in Tamil

 

Tamil ஆசிரியர் கவிதை | Funny Teacher Quotes in Tamil

ஒரு ஆசிரியர் கற்றுத்தரும் பாடங்கள்,
வகுப்பறையைத் தாண்டி
வாழ்க்கை முழுக்க வழி நடத்துகின்றன.
அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்!!



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore