Thiruvathirai kali kuzhambu| திருவாதிரை கூட்டு
Thiruvathirai kootu
மார்கழி மாதம் திருவாதிரை நாளில் செய்யப்படும் கூட்டு மற்றும் களி மிகவும் பிரபலமான ஒன்றாகும். திருவாதிரை விரதம் இருக்கும் அனைவரது வீட்டிலும் கூட்டு மற்றும் களி கண்டிப்பாக இருக்கும்.
மேலும் அறிய: 2021 ஆருத்ரா தரிசன நேரம் மற்றும் தேதி
திருவாதிரை கூட்டு செய்வது எப்படி?
தேவையான பொருள்கள்:
- பீர்கங்காய், வாழை, பூசணி, பரங்கி, அவரை, கத்தரிக்காய், கொத்தவரங்காய், பீன்ஸ், உருளை, கேரட், சேனைக் கிழங்கு, கருணைக் கிழங்கு, ஊற வைத்த பாசி பயிர், தட்டப்பயிர், சுண்டல், பட்டாணி (இது போன்று 18 வகை காய்கறிகள் சேர்க்கலாம்)
- துவரம் பருப்பு – 1/2 கப்
- புளி – எலுமிச்சை அளவு
- மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
- கருவேப்பிலை
- கொத்தமல்லி இலை
மசாலா அரைக்க தேவையானவை:
தனியா – 4 டேபிள்ஸ்பூன்மி
ளகாய் வற்றல் – 10
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம்
தேங்காய் – 1 மூடி
மேலும் அறிய: திருவாதிரைக் களி செய்வது எப்படி?
செய்முறை:
- காய்கறிகளை சாம்பாரில் சேர்க்கும் அளவிற்கு பெரிய துண்டுகளாக நறுக்கி எடுக்கவும்.
- துவரம்பருப்பை குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.
- மிளகாய் வற்றல், கடலைப் பருப்பு, தனியா, பெருங்காயத்தை சிறிது எண்ணையில் வறுத்து, தேங்காயுடன் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- காய்கறிகளை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிறிதளவு நீரில் வேகவைக்க வேண்டும். காய்கறிகள் வெந்ததும், புளி கரைசல் சேர்த்துக் கொதிக்க விட வேண்டும்.
- அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்க்கவும்.
கடைசியாக வேகவைத்துள்ள துவரம்பருப்பையும் சேர்த்து கிளறவும். - எண்ணையில் கடுகு, கருவேப்பிலை தாளித்து, அதில் சேர்க்கவும். கடைசியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
குறிப்பு: காய்கறிகளின் எண்ணிக்கை ஒற்றை படியில் இருக்க வேண்டும்.