முருங்கை விதைகளை சாப்பிட்டால் என்னாகும்?

Updated On

முருங்கைக்காயை பிடிக்காதாவர்கள் யாராவது இருப்பார்களா? அதுவும் அதன் விதையின் ருசி அபாரம். ருசிக்காக எல்லாருக்கும் முருங்கைக்காய் பிடிக்கிறது. அதனை சாப்பிடுகிறோம்.

அத்தோடு அதன் சத்துக்களையும் பண்புகளையும் தெரிந்து கொண்டு இன்னும் குஷியாக சாப்பிடலாம். ஏனென்றால் முருங்கை விதைகளில் அத்தனை மகத்துவம் கொண்டுள்ளது.

முருங்கை விதைகளில் அதிக அளவு வைட்டமின் சி சத்து உள்ளது. உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் கூறுகளுடன் போராடி அவற்றை வெளியில் தள்ளும் குணம், வைடமின் சி சத்துக்கு உண்டு.

முருங்கை விதையை நன்றாக காயவைத்து பொடி செய்து பாலில் கலந்து குடிக்கலாம். முருங்கை விதையில் ஆன்டி-ஆக்ஸிடண்ட், துத்தநாகம், வைட்டமின் ஏ, சி, பி காம்ப்ளக்ஸ் ஆகிய சத்துக்கள் உள்ளன. முருங்கை விதையை அதிகமாக தாது விருத்திக்குரிய லேகியங்களில் சேர்ப்பதுண்டு.

முருங்கை விதை பல வியாதிகளை நெருங்க விடாது. பல நோய்களை குணப்படுத்தும்.

  • பலரும் இந்த காலக்கட்டங்களில் தூக்கம் வராமல் அவதிப்படுகிறார்கள். அவர்கள் முருங்கை விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தூக்கம்ன்மை வியாதி குணமாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
  • மூட்டுகளின் இணைப்புகளில் வரும் வலியை போக்குகிறது. அதிக கால்சியம் இது கொண்டுள்ளதால் எலும்புகளும் பலம் பெறும். மேலும் ஆர்த்ரைடிஸ் வராமல் நம்மை காக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
  • முருங்கை விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெயில் 30 வகையான ஆன்டி ஆக்ஸிடென்டுகள் இருக்கின்றன. இவை செல்களை ஆரோக்கியமாக பாதுக்காக்கும். இதனால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமாக திகழும்.
  • ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் பண்மை பெற்றுள்ளது. அதோடு சர்கரை வியாதியையும் வரவிடாமல் தடுக்கும்.
  • செல் சிதைவை தடுக்கிறது. புதிய செல்கள் உருவாவதை பெருக்குகிறது. மற்றும் புற்று நோய் வர விடாமல் தடுக்கிறது.
  • இதயத்தில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம் இந்த முருங்கை விதைகள் தருகின்றன. . இவை இதயத்தில் படியும் கொழுப்புகளை வெளியேற்றும் பண்பை பெற்றுள்ளன.
  • முருங்கை விதைகளில் உள்ள அன்டி ஆக்சிடென்ட் பண்புகள், தலை முடியை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றன. மேலும் பல்வேறு நன்மைகளை இவை கூந்தல் வளர்ச்சிக்கு அளிக்கின்றன.
  • உடல் எடை குறைப்பில் முருங்கை விதைகள் நல்ல பலன் அளிப்பதாக சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. எனவே, தங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்புவோர், முருங்கை விதைகளை தவறாமல் எடுத்துக் கொள்ளலாம்.
  • பெண்களுக்கு சத்துக் குறைவினால் ஏற்படும் தலைவலி, கால்களில் அடிக்கடி உண்டாகும் தசைப்பிடிப்பு ஆகியவை முருங்கை விதைகள் சாப்பிட்டுவந்தால் நாளடைவில் குணமாகும்.


திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore