பாகற்காய் பயன்கள்
அய்யே! கசப்பு… என்று முகஞ்சுளிக்கும் பாகற்காயில்தான் எத்தனை நன்மைகள்…?
* பாகல்… வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும்; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
* சர்க்கரை வியாதிக்கு சிறந்த மருந்து முற்றிய பாகற்காய்.
* பாகல் பழம், பெண்களின் மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தும் வல்லமை வாய்ந்தது.
* பாகற்காய் மட்டுமல்ல இலைகூட மருத்துவத் தன்மை உடையதே! ஒரு அவுன்ஸ் பாகல் இலையை இடித்து பெற்ற சாறுடன், வறுத்துப் பொடித்த சீரகத் தூளை கலந்து காலை, மாலை உட்கொண்டால் விஷக்காய்ச்சல் ஓடியே போகும்.
* பாகல் இலைச்சாற்றுடன் காசிக்கட்டியை இழைத்து சிரங்கின் மேல் பற்று போல போட்டு வந்தால் சிரங்கு உதிர்ந்துவிடும். ரத்தம் சுத்தமாகும்.
* பாகல் இலைச்சாறு ஒரு அவுன்சும், ½ அவுன்ஸ் நல்லெண்ணெயும் கலந்து அருந்தினால் காலரா கட்டுப்படும்.
* பாகல் இலைச்சாறை கொதிக்க வைத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்தலாம்.
* பாகல் இலைச்சாறுடன் சம அளவு பசுமோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காசநோய்கூட காணாமல் போகும்.
மருத்துவப் பயன்கள்
100 கிராம் பாகற்காயில், 25 மில்லி கிராம் கலோரி, 20 மி.கி. கால்சியம், 70 மி.கி. பாஸ்பரஸ், 1.6 சதவீதம் புரதம், 0.2 சதவீதம் கொழுப்பு, 1.8 மி.கி. இரும்புச் சத்து, 0.8 சதவீதம் தாதுக்கள், 88 மி.கி. பி காம்ப்ளெக்ஸ், 0.8 சதவீதம் நார்ச்சத்து, 4.2 சதவீதம் கார்போஹைட்ரேட் சத்துகள் உள்ளன.
வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா கரோட்டின், பிளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, துத்தநாகம், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற சத்துக்களும் உள்ளன.
பாகற்காயில் உள்ள மோர்மோர்சிடின் மற்றும் சரடின் என இரண்டு ஆன்டி ஹைபர் கிளைசீமிக் பொருட்கள், தசைகளுக்கு தேவைப்படும் சர்க்கரையைக் கொண்டு செல்லும் முக்கிய வேலையை செய்கின்றன.
அதுமட்டுமல்லாது, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ரத்த சுத்திகரிப்பானாகவும் செயல்படுகிறது.
மூன்று நாட்களுக்கு ஒரு முறை பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
மேலும் செரிமான அமிலமான காஸ்ட்ரிக் ஆசிட் அதிகமாக சுரப்பதால் பசி அதிகரிக்கும்.
பாகற்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள், விஷத்தன்மையுள்ள அழுத்தத்தால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்.