தாய்ப்பால் கொடுக்கையில் ஏற்படும் முதுகு வலிக்கு என்ன காரணம்? எப்படி போக்குவது?

Updated On

பெண்களுக்கு முதுகு வலி ஏற்பட காரணம் மற்றும் நிவாரணம் | Tips for Back Pain Relief while Breastfeeding in Tamil

Tips to tackle back and neck pain during breastfeeding

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதனால் குழந்தைக்கும் தாய்க்குமான பிணைப்பு அதிகரிக்கிறது. ஆனால், சில சமயங்களில் இந்த இனிமையான மற்றும் மகிழ்ச்சியான அனுபவம் உங்கள் உடல்நலத்தில் சில மோசமான வலிகளை ஏற்படுத்தலாம், அதாவது முதுகுவலி அல்லது கழித்து வலியை ஏற்படுத்தலாம்.

தாய்ப்பால் கொடுக்கும் போது முதுகுவலி ஏற்படுவது சாதாரணம் என்றாலும், வலியைக் குறைக்க நீங்கள் சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால் அது மோசமாகிவிடும்.
இந்த பதிவில் முதுகுவலிக்கு என்ன காரணம் மற்றும் அதை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்று பாப்போம்.

நீங்கள் உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது அதிக நேரம் உட்கார்ந்திருக்க வேண்டும், இதனால் உங்களுக்கு கழுத்து வலி அல்லது முதுகுவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

தாய்ப்பால் கொடுக்கும் போது முதுகுவலிக்கு என்ன காரணம்? |
Back Pain Reasons in Tamil

பெண்களுக்கு முதுகு வலி ஏற்பட காரணம் தாய்ப்பால் கொடுப்பது மட்டுமல்லாமல் பல்வேறு காரணங்கள் உள்ளன, அவற்றில் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

  • உணவளிக்கும் போது தவறான தோரணையில் அமர்ந்திருப்பது முதுகுவலிக்கு வழிவகுக்கும்.
  • கர்ப்ப காலத்தில் முதுகுவலியால் நீங்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தால், பிரசவத்திற்குப் பிறகும், குறிப்பாக நீங்கள் குழந்தைக்கு உணவளிக்கும் போது கூட அது தொடரலாம்.
  • கர்ப்ப காலத்தின் போது நீங்கள் சுமக்கும் கூடுதல் எடையின் காரணமாக நீங்கள் முதுகுவலியை அனுபவிக்கலாம்.
  • கர்ப்பம் மற்றும் பிரசவத்தின் போது, ​​உங்கள் உடல் பல பிரச்சனைகளை சந்திக்கிறது மற்றும் பல பெண்களுக்கு உடல் வலி, குறிப்பாக, முதுகு வலி ஏற்படும். கர்ப்ப காலத்தில் நீங்கள் முதுகுவலியை அனுபவித்திருந்தால், பிரசவத்திற்குப் பிறகும் இந்த வலி நீடிக்ககூடும்.
  • முதுகுவலிக்கான பொதுவான காரணங்களில் ஒன்று முறையற்ற உணவு மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் போது தவறான உட்காரும் நிலை.
  • தாய்ப்பால் கொடுக்கும்போது உங்கள் குழந்தையை நீங்கள் சரியாக பிடித்து, நேராக உட்க்கார வேண்டும்.
  • சில சமயங்களில் கனமான பொருட்களைத் தூக்குவது முதுகுவலியை ஏற்படுத்தலாம், அது தாய்ப்பால் கொடுக்கும் போது மேலும் மோசமடையலாம்.
  • பிரசவத்தின் பொழுது நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையால் பெண்களுக்கு முதுகு வலி ஏற்படலாம்.
  • முன்பு நடந்த விபத்துகளின் பொழுது முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயங்கள் தாய்ப்பால் சுரப்பின் ஹார்மோன் மாற்றங்களால் முதுகு வலியை ஏற்படுத்தி விடலாம்.
  • தாய்ப்பால் கொடுக்கும்போது, தாய்மார்கள் தங்கள் குழந்தையைப் பார்க்க கழுத்தை இழுத்து குனிந்து பார்க்கிறார்கள், அல்லது பால்கொடுக்க சரியான நிலையைக் கண்டறிய குனிந்துகொள்கின்றனர். இதனால் கழுத்து வலி ஏற்படுகிறது.

முதுகு வலி நீங்க டிப்ஸ் |
Back Pain Home Remedies in Tamil

சரியான பொசிஷன்

தவறான நிலையில் அமர்ந்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது முதுகுவலிக்கு மிகவும் பொதுவான காரணமாகும், அதை நாம் அறியாமலே செய்கிறோம். பால்கொடுக்கும் போது அதிகமாக முன்னோக்கி சாய்வதைத் தவிர்க்கவும்.

குழந்தைக்கு பால் கொடுக்கும் பொழுது உங்களுக்கு வசதியாக இருக்கும் குழந்தைக்கும் வசதி அளிக்கும் ஒரு நிலையை தேர்ந்தெடுத்து, அந்த நிலையில் தாய்ப்பால் கொடுக்க முயல வேண்டும்.

தலையணைகள் பயன்படுத்தவும்

நீங்கள் வசதியாக தாய்ப்பால் ஊட்டும் நிலையில் அமர்ந்திருந்தாலும், உங்கள் முதுகைத் தாங்க சில தலையணைகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். கழுத்து வலியைத் தவிர்க்க, தலையணையை மடியில் வைத்து குழந்தையை உங்கள் மார்பகங்களுக்கு நெருக்கமாக கொண்டு வரலாம்.

சரியான நாற்காலியைப் பயன்படுத்தவும்

உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது நீங்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்தால், சரியான நாற்காலியைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். ஆழமான குஷன் நாற்காலியில் உட்காருவதைத் தவிர்க்கவும், இது உங்களை அதில் மூழ்கச் செய்யும், ஏனெனில் இது முதுகுவலியை ஏற்படுத்தக்கூடும். அதற்கு பதிலாக, நீங்கள் ஒரு உறுதியான நாற்காலியைத் தேர்ந்தெடுத்து நேரான நிலையில் உட்கார வேண்டும். சிறந்த உட்கார்ந்த நிலை உங்களுக்கு முதுகுவலியிலிருந்து நிவாரணம் அளிக்ககூடும்.

தண்ணீர் குடிக்கவும்

நீரிழப்பு உடல் வலியை மோசமாக்கும், எனவே ஒவ்வொரு நாளும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இது முதுகு வலியின் வீரியத்தை குறைக்க மிகவும் உதவும். உங்கள் குழந்தையை நீங்கள் சரியாக கவனித்துக் கொள்ள விரும்பினால், உங்களை கவனித்துக்கொள்வதும் அவசியமாகும்.

நின்று கொடுக்கலாம்

நீண்ட நேரம் உட்காருவது கண்டிப்பாக முதுகு வலியை ஏற்படுத்தும். முதுகு வலி ஏற்படும் நேரங்களில் சற்று நேரம் நின்று கொண்டு பால் கொடுக்க முயற்சிக்கலாம். நின்று கொண்டு தாய்ப்பால் கொடுக்கும் பொழுது சற்று கவனமாக குழந்தையை பிடித்துக் கொள்ளல் வேண்டும்.

நடை மற்றும் உடற்பயிற்சி

முதுகு வலி ஏற்பட்டால், நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்; நடக்கும் பொழுது முதுகு நேராக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் முதுகு வலியை ஏற்படுத்தும் உடல் எடையை குறைக்க சரியான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்வதற்கென தினந்தோறும் சற்று நேரத்தை கண்டிப்பாக ஒதுக்க வேண்டும். இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்வதன் மூலம், முதுகு வலியை எளிதில் போக்கி விடலாம்.

மசாஜ் மற்றும் ஒத்தடம்

முதுகு வலி ஏற்படும் சமயங்களில் தேங்காய் எண்ணெயை காய்ச்சி, முதுகில் நன்கு மசாஜ் செய்து கொள்ள வேண்டும். மேலும் குளிர்ந்த நீர் அலல்து சூடு தண்ணீர் கொண்டு ஒத்தடம் செய்வதும் நல்ல பலனை தரும். எனவே தினசரி ஒரு ஒத்தட முறையை பின்பற்றலாம், அல்லது நீங்கள் வசதியாக உணரும் ஒத்தட முறையை தொடர்ந்து பின்பற்றி வரலாம்.

உங்கள் குழந்தை தூங்கும் போது ஓய்வெடுங்கள்

சரியான உறக்க முறையை பின்பற்ற வேண்டும், குழந்தையை கவனிக்கிறேன் என்ற பெயரில் உங்கள் உடல் நிலையை கெடுத்துக் கொள்ள கூடாது, நீங்கள் நலமாக இருந்தால் தான் குழந்தையை நலமாக பார்த்துக் கொள்ள முடியும் என்று உணருங்கள்! ஆகையால் முடிந்த அளவு கிடைக்கும் நேரங்களில் நன்கு ஓய்வு எடுங்கள். குழந்தை உறங்கும் நேரங்களில் நீங்களும் அதனுடன் சேர்ந்து உறங்கி ஓய்வு எடுக்க முயலுங்கள்! முதுகு வலி வந்த வழியில் தானாய் போய்விடும்.Topics
back pain
திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore