மகிழ்ச்சியாக இருக்க 10 வழிகள் !

Updated On

தற்போதுள்ள பரபரப்பான வாழ்க்கைமுறையில் மகிழ்ச்சி என்பதே ஒரு தேடுதலாக உள்ளது. அதற்கு காரணம் நம் வாழ்கை முறை மற்றம் மற்றும் நேரம். இப்போதுள்ள நவீன காலத்தில் மகிழ்ச்சி இல்லாமல், பலர் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர், இதற்காக பலர் மனநல மருத்துவரை அணுகுகின்றனர். பல மருத்துவர்கள் சொல்வது மகிழ்ச்சி என்பது தேடுவது இல்லை, அது நமக்குள்ளே தான் உள்ளது. நம் வாழ்க்கையை ரசித்து வாழ்ந்தாலே மகிழ்ச்சி என்பது தானாக வரும் என்று கூறுகின்றனர்.

அதற்கு சில வழிமுறைகளை இங்கே காண்போம் .

நல்ல நண்பர்களை சம்பாதியுங்கள்!

உளவியல் ஆய்வின் படி, ஒருவரின் மனதின் மகிழ்ச்சியை அவரை சுற்றியிருக்கும் விஷயங்களே முடிவு செய்கின்றன. எனவே, மிகவும் மகிழ்ச்சியான நண்பர்கள், உங்களுக்கு ஊக்கமளிக்கும் நண்பர்கள், உங்களை குறைசொல்லாத, உங்களை நம்பிக்கையை சிதைக்காத நண்பர்களுடனேயே நேரத்தை செலவிடுங்கள்..! இது உங்கள் பாசிட்டிவ் எனர்ஜியை குறைக்காமல் வைத்திருக்கும்.

கற்றுக்கொள்வதை நிறுத்தாதீர்கள்!

“வாழ்க்கையில் எப்போதும், கற்றுக்கொள்வதை நிறுத்தாதீர்கள். ஏனெனில் வாழ்க்கை உங்களுக்கு கற்றுக்கொடுப்பதை நிறுத்தாது” என்ற பிரபல வாசகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம். அது முற்றிலும் உண்மை. ஆய்வின் படி, நீங்கள் புதிய விஷயங்களை கற்றுக்கொண்டே இருப்பதன் மூலம், உங்களை மூளை எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்கும். இதனால் உங்களது துன்ப நினைவுகளை அது அசைபோடாது எப்போதும் பிசியாக இருக்கும். எனவே மனம் எப்போதும், மகிழ்ச்சியாக இருக்கும்.

எல்லோரையும் கொண்டாடுங்கள்!

உங்களைச்சுற்றி இருக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் கூர்ந்து கவனியுங்கள்.. சாலையில் நடக்கும் போது, எரிச்சலை ஏற்படுத்தும் போக்குவரத்து நெரிசலை பார்த்திருப்பீர்கள். அதே சாலையின் ஓரத்தில் பூத்துக்குலுங்கும் மலர்களை ரசித்திருக்க மாட்டீர்கள். சுள்ளென சுட்டெரிக்கும், வெயிலை வெறுத்திருப்பீர்கள்..

தடை..அதை உடை.!

எப்போதும், எந்த இடத்திலும் பிரச்சினைகளே இருக்கக்கூடாது என நினைக்காதீர்கள். எந்த பிரச்சினை வந்தாலும், அதனை தாங்கும் வலிமை வளரவேண்டும் என நினையுங்கள். நீங்கள் பிரச்சினைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள, எதிர்கொள்ள உங்கள் தன்னம்பிக்கை தானாக அதிகரிக்கும். வருங்காலத்தில் உங்கள் முன்பு எந்த பிரச்சினை வந்தாலும், “இதை எப்படி சமாளிக்கப்போகிறோம்? “ என்ற கேள்வி வரவே வராது. இந்த திறமையை வளர்த்துக்கொண்டால், பிரச்சினைகளால், உங்களுக்கு பிரச்சினை இல்லை.

நினைத்தை முடிக்கவும்!

நமக்கு பிடித்த விஷயங்களை செய்யம்போது, நமது மனம் அளவற்ற மகிழ்ச்சியுடன் இருக்கும். பல பேருக்கு, வாழ்க்கையின் மீது வெறுப்பு வர, பிடிக்காத வேலையை தினமும் செய்து கொண்டிருப்பதே காரணமாக இருக்கும். அதை வேண்டாம் என தவிர்க்கவும் நம் பொருளாதார சூழல் இடம் தராது. அதே சமயம் உங்களுக்கு பிடித்த சினிமா பார்ப்பதையே, புத்தகம் படிப்பதையோ, பயணம் செல்வதையோ யாராலும் தடுக்க முடியாதே? இவற்றை அடிக்கடி செய்யுங்கள்..மகிழ்ச்சி மெல்ல மெல்ல அதிகரிக்கும்.

அடிக்கடி சிரியுங்கள்!

அடுத்த நொடி, என்ன நடக்கும் என்பது கூட தெரியாத, நிச்சயமற்ற வாழ்க்கைதானே நாம் வாழ்வது? இதில் ஏன் இவ்வளவு சிக்கல்களை உருவாக்கிக்கொண்டு அழ வேண்டும்? எப்போதும் சிரிப்பது ஒன்றும் கஷ்டமான வேலை இல்லையே.. நகைச்சவை உணர்வு கொண்டவராக மாற்றிக்கொள்ளுங்கள்..முடியவில்லையா? ஒரு நகைச்சுவை படம் பார்க்கலாம். ஹியூமர் நிரம்பி வழியும் நண்பர்களுடன் பேசலாம்..சிரிப்பு நமக்கு கிடைத்திருக்கும் பரிசு..அதைப்பயன்படுத்துங்கள்.. அதுதான் உங்கள் கோபத்தை, விரக்தியை விரட்டும் மருந்து.. பின்பற்றி பாருங்கள்..உங்கள் துன்பத்திலும் சிரிப்பதற்கான காரணம் கிடைக்கும்..

உறவின் ஆழம் அதிகரிக்கட்டும்!

வீடு, அலுவலகம், சுற்றம் என சமூகத்தில் பல பேரிடம் நாம் இணைந்தே வாழ்கிறோம். அப்படி நாம் கொண்டுள்ள சொந்தங்களில், நெருக்கமான உறவுகளுடன் நேரம் செலவிடும் போதே, அதிக மகிழ்ச்சி அடைகிறோம்.  அப்படி நெருக்கமான மனிதர்களை அதிகம் வளர்த்துக்கொள்ளுங்கள். மற்றவர்களிடம் பேணும் உறவில், இந்த நெருக்கத்தை அதிகரிப்பதன் மூலம், உற்சாகம் அதிகமாகும்.

தியானம் நல்லது!

ஆய்வின் படி, தியானம் செய்பவர்களின்  மூளையில் , தியானம் செய்யாதவர்களின் மூளையை விட, கற்றுக்கொள்ளும் திறனும், நினைவாற்றல் திறனும் 20 சதவீதம் அதிகரிக்கிறது. எனவே தினமும் கொஞ்ச நேரம் தியானம் செய்யலாமே !

முயற்சியை கைவிடாதீர்கள்!

உங்களால் முடிக்க முடியாத சவால்கள், ஜெயிக்க முடியாத சந்தர்ப்பங்கள் வரும் போதெல்லாம், உங்கள் நம்பிக்கையின் மீது, உங்களுக்கே சந்தேகம் வரும். அப்போதெல்லாம், உங்கள் முயற்சியை மட்டும் கைவிட்டு விடாதீர்கள். தோல்வி என்பது தற்காலிகமானதே.. வீழ்வது என்பது தவறல்ல..வீழ்ந்தே கிடப்பதுதான் தவறு..எனவே இன்னொரு முறை முயற்சி செய்துபாருங்கள்.

உங்களது சிறப்பைக்கொடுங்கள்!

 ஏதேனும் ஒரு முயற்சியில் உங்களால், ஜெயிக்க முடியாமலே போகலாம். அப்போதெல்லாம் என்னால் முடியாது என ஒதுங்கிப்போகாமல், எவ்வளவுதான் நம்மால் முடியும் என சுயபரிசோதனை செய்துதான் பாருங்களேன். உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.

நன்மையே செய்வோம்!

எப்போதும் நல்ல விஷயங்களையே செய்வோம். அதுவே எப்போதும் இன்பம் தரும். நல்ல விஷயங்களை செய்யும் போது, நம்மை பாராட்ட வேறு யாரும் வேண்டாம். நமது மூளையே, நம்மை பாராட்டி , மகிழ்ச்சியாக்கி விடும். தவறு செய்யும் போது, இதனால்தான் குற்றவுணர்ச்சி நம்மை துயரம் செய்கிறது. எனவே நல்லதே செய்வோம். மகிழ்ச்சியாக இருப்போம்


திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore