வீட்டில் செல்வம் பெருக என்ன செய்ய வேண்டும்
செல்வம் என்பது மிகவும் முக்கியமான மற்றும் தேவையான ஒன்றாகும். செல்வத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவ்வாறு செல்வம் பெருக வேண்டுமானால், கீழ் வரும் வழிமுறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும்.
பணக்கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருக, செல்வங்களுக்கெல்லாம் அதிபதியான லட்சுமி தேவியை தினந்தோறும் வழிபட வேண்டும்.
செல்வம் பெருக வழிமுறைகள் | Selvam Peruga Tips in Tamil
- செல்வம் என்றாலே லட்சுமி தான். அவ்வாறு மகாலட்சுமியின் அருளை பெற வில்வத்தால் பூஜை செய்ய வேண்டும்.
- குபேரனை வழிபடுவதன் மூலமும் செல்வத்தை பெற முடியும். குபேர நேரத்தில் குபேரனை வழிபடுவது நல்ல பலனைத்தரும்.
- குபேரனுக்கு தாமரை திரி போட்டு விளக்கேற்றிவழிபட்டால் பணம் வரும்.
- வீட்டில் மாலை நேரத்தில் விளக்கேற்றும் போது இரண்டு திரிகள் போட்டு விளக்கேற்ற வேண்டும். அவ்வாறு செய்தால் செல்வம் பெருகும்.
- காலை நேரத்தில் வீட்டில் கோலம் போடும் போது, அதிகாலை நேரத்தில் தான் போடவேண்டும். பொழுதுவிடிந்து கோலம் போடக்கூடாது.
- அதிகாலை நேரத்தில் வீட்டில் சுப்ரபாதம் பாடினால் மகாலட்சுமி அருள் கிடைக்கும்.
- மகாலஷ்மியின் படத்திற்க்கு காலை மற்றும் மாலை நேரத்தில் நல்லெண்ணெய் அல்லது நெய் தீபம் ஏற்றி வந்தால் செல்வம் பெருகும்.
- மாலை நேரத்தில் வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், உப்பு, ஊசி, நூல் இவைகளை மற்றவர்களுக்கு கொடுக்க கூடாது.
- வீட்டில் வடகிழக்கு மூலையில் தான் குடிநீரை வைக்க வேண்டும், அவ்வாறு செய்வதனால் பணம் பற்றாக்குறை மற்றும் உணவு பற்றாக்குறை நீங்கும்.
- நாம் குளித்தவுடன் முதுகை முதலில் துவட்டினால் தரித்திரம் நீங்கும்.
- தொழில் செய்பவர்கள் தங்களது முதல் லாபத்தை செலவு செய்து வாங்கும் பொருள் உப்பு மற்றும் மல்லிகை பூவாக இருந்தால் தொழில் லாபம் பெருகும்.
- ஐப்பசி மாத வளர்பிறையில் மகாலட்சுமியை வழிபடசெல்வம் பெருகும்.
- சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளையிலும் லஷ்மி மந்திரம் கூறியபடி
தெளித்திடசெல்வம் சேரும்.
மேலும் அறிய: எண் ஜோதிடம் பிறந்த தேதி பலன்கள் | Date of Birth Astrology in Tamil
செல்வம் சேர மந்திரம்
எத்ருஸா த்ராகீயஸ்யா தரதஸித-நீலோத்பல-ருசா
தலியாம்ஸம் தீ நம ஸ்நபய க்ருபயா மாமபி ஸிவே
அநே நாயம் தந்யோ பவதி நசதே ஹாநி-ரியதா
வநே வா ஹர்ம்யே வா ஸமகர-நிபாதோ
பணம் தரும் அகத்தியர் மந்திரம்
சித்தியாம் இலக்குமியின் மந்திர பீஜமப்பா
சிறப்பாக இடாயி இடாயி டாகினி டிடிடி றீங்
கென்று பத்தியாய் லட்சமுரு ஓது ஓது
சகலசெல்வமும் கூடிவரும் தரணியிலேபகராதே
மேலும் அறிய: Tomorrow Rasi Palan In Tamil – நாளைய ராசி பலன்