இன்றைய சந்திர கிரகணம் எப்போது தொடங்கி, எப்போது முடிகிறது?

Updated On

சந்திர கிரகணம் இன்று எத்தனை மணிக்கு நிகழப்போகிறது, சந்திர கிரகணம் என்றால் என்ன, யாரெல்லாம் சந்திர கிரகணத்தை பார்க்க முடியும் என்று இந்த பதிவில் பார்ப்போம்.

சந்திர கிரகணம் என்றால் என்ன?

பூமி, சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும்போது, ​​சந்திரன் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மூடப்பட்டிருக்கும். இதன் விளைவாக சந்திர கிரகணம் நிகழ்கிறது. இது  முழு நிலவன, பௌரணமி அன்று மட்டுமே நிகழும்.

சந்திர கிரகணம் 2022 எப்போது | Lunar Eclipse 2022 Timing in India

இன்று நிகழவிருக்கும் சந்திர கிரகணம் இந்த ஆண்டின் கடைசி கிரகணம் மட்டுமல்லாமல், அடுத்த மூன்று ஆண்டுகளின் கடைசி சந்திர கிரகணமாகும். இதனால் இன்றைய சந்திர கிரகணம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.

இன்றைய சந்திர கிரகணம் சில இடங்களில் முழு கிரகணமாகவும், சில இடங்களில் பகுதி கிரகணமாகவும் இருக்கும்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் முழு சந்திர கிரகணம் தெரியும். இந்தியாவைத் தவிர, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் இது தெரியும்.

சந்திர கிரகணம் நேரம் | Chandra Grahan 2022 in Tamil nadu Date and Time

நவம்பர் 8 செவ்வாய் கிழமையான இன்று, இந்திய நேரப்படி மாலை 5.39 மணிக்கு தொடங்கி 6.18 மணிக்கு முடிவடையும்.

இந்தியாவின் அனைத்து இடங்களிலும் சந்திர கிரகணத்தை பார்க்க முடியாது. கொல்கத்தா மற்றும் கவுகாத்தி உள்ளிட்ட நாட்டின் கிழக்குப் பகுதிகளில் நிலவு உதயத்தின் போது , ​​கிரகணம் நடந்து கொண்டிருக்கும்.

டெல்லி , மும்பை , சென்னை மற்றும் பெங்களூரு போன்ற மற்ற நகரங்களில், சந்திரன் உதிக்கும் நேரத்தில் கிரகணம் மொத்தமாக முடிந்திருக்கும்.

முழு சந்திர கிரகணத்தை வடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா மற்றும் ஆசியா, ஓசியானியா ஆகிய பகுதிகளில் காணலாம்.



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore