பழங்கள் மற்றும் காய் கறிகளை நமது உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். காய்கறிகள் மற்றும் பழங்கள் பல வண்ணங்களில் இருக்கிறது அதன் நிறத்திற்கு ஏற்ப பல அற்புத சுவை, மணம் மற்றும் ஊட்டச்சத்துக்களை நமக்கு தருகிறது. காய்கறிகள் பெரும்பாலும் செடி மற்றும் கொடியில் தான் கிடைக்கிறது. பழங்கள் அனைத்தும் மரங்கள் மற்றும் தாவரங்களில் இருந்து கிடைக்கிறது.
காய்கறிகளை சமைக்கும் போதும் அதிக அளவு சத்துக்கள் வீணாக்கப்படுகிறது.
நாம் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடும் முன்பு அல்லது சமைக்கும் போது அதன் மேல் தோலை நீக்கிவிட்டு சமைக்கின்றோம். இதனால் தோலில் உள்ள சத்துக்கள் மட்டுமல்லாது, தோலுக்கு அடிப்பகுதியில் உள்ள உயிர் சத்துக்களும் சேர்ந்து நீக்கப்பட்டு அதிலுள்ள சத்துக்கள் வீணாகிறது. ஒரு சில காய்கறிகளை தண்ணீரில் போட்டு சமைக்கின்றோம், அவ்வாறு சமைக்கும் நீரை உணவில் பயன்படுத்தாமல் கீழே கொட்டினால் அந்த காய்கறியில் உள்ள சத்துக்கள் அனைத்தும் அந்த நீரிலேயே வீணாகிறது.
காய்கறிகளை கழுவிய பின்பே வெட்ட வேண்டும், வெட்டியா பிறகு தண்ணீரில் போட்டு கழுவ கூடாது. அவ்வாறு கழுவினால் அதிலுள்ள சத்துக்கள் அனைத்தும் போய்விடும்.
காய்கறிகளை சமைக்கும் போது சமையல் சோடா உபயோகிப்பதை தவிர்த்தல் வேண்டும். இல்லையெனில், உணவிலுள்ள மிக அவசியமான உயிர்ச்சத்துக்களை இழக்க நேரிடும்.
இந்த கொரோன நோய்த்தொற்றினால் மக்கள் அனைவரும் கடும் அவதிகளுக்கும் மற்றும் மனா உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். இது போன்ற நேரத்தில் நமது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தல் நாம் எந்த ஒரு நோயிலிருந்தும் எளிதாக குணமடையமுடியும். ஆரோக்கியமாக இருக்க நல்ல சத்தான உணவுகளை உண்ணவேண்டும்.
தோலுடன் சாப்பிட வேண்டிய பழங்கள் மற்றும் காய்கறிகள்
கொய்யாப்பழம்
பேரிக்காய்
ஆப்பிள்
கேரட்
வெள்ளரி
கத்திரிக்காய்
திராட்சை
கிவி
காளான்
பட்டாணி
பிளம்ஸ்
உருளைக்கிழங்கு
சுரைக்காய்
தோல் உரித்து சாப்பிட வேண்டிய பழங்கள் மற்றும் காய்கறிகள்
எலுமிச்சை
ஆரஞ்சு
மாம்பழம்
தர்பூசணி
திராட்சைப்பழம்
வாழைப்பழம்
மாதுளை
பப்பாளிப்பழம்
அன்னாச்சி பழம்
முலாம்பழம்
பூண்டு
வெங்காயம்