கடல் நீர் ஏன் உப்பாக உள்ளது? Why Sea Water Salty?

Updated On

மழை நீர் தானே கடலுக்கு செல்கிறது, மழை நீரில் உப்பு இல்லை ஆனால் கடல் நீரில் மட்டும் எப்படி இவ்வளவு அதிகமான உப்பு உள்ளது, என்பது பெரும்பலர்களுக்கு உள்ள சந்தேகம் தான்.

கடல் எப்படி உருவாகிறது ?

லட்சக்கணக்கான வருடங்களுக்கு முன்பு பூமி உருவானபோது மழை பொழிய ஆரம்பித்தது இந்த மழை நீரானது இப்பொழுது பொழியம் மழை நீரைப் போலவே சுவையாகவும் தூய்மையாகவும் இருந்தது. அந்த மழைநீர் பூமியில் உள்ள சிறிய மற்றும் பெரிய பள்ளங்களுக்கு சென்றடைந்தது. சிறிய பள்ளங்கள் என்பது ஆறு அல்லது ஏரி ஆகும். பெரிய பள்ளங்கள் என்பது கடல் ஆகும்.

கடலில் உப்பு எப்படி உருவாகிறது ?

அவ்வாறு மழை நீர் செல்லும் வழியில் பாறைகள் மற்றும் மணலில் அடித்துக்கொண்டு சென்றது அவ்வாறு செல்லும் போது சில வேதியல் மாற்றங்கள் நடக்கிறது. அதனால் அந்த மழை நீரில் சிறிது உப்பு சுவை சேர்க்கிறது. கடல் நீர் ஆவியாகும் போது நீர் மட்டுமே ஆவியாகிறது அதில் இருக்கும் உப்பு தன்மை அப்படியே தங்கிவிடுகிறது. இவ்வாறு லட்சக்கணக்கான வருடங்கள் நடந்ததால் கடல் நீரில் அதிக அளவில் உப்பு உள்ளது.

கடல் நீர் ஏன் உப்பாக உள்ளது அறிவியல்பூர்வமாக விளக்கம் ?

  • நிலத்தில் விழும் மழை நீரில், வளி மண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடில் (Carbon dioxide) சிறிதளவு கலக்கிறது. இதனால் மழை நீர், சிறிதளவு கார்பானிக் அமிலத் (Carbonic Acid) தன்மையை அடைகிறது.
  • சிறிதளவு அமிலத் தன்மை உடைய மழை நீர் பாறைகளின் மீது கடந்து வரும் போது, பாறைகளை அரிக்கிறது. இந்நிகழ்வின் போது ஏற்படும் வேதி மாற்றத்தால் (Chemical Reaction), மின்னூட்டம் பெற்ற அணுத்துகள்கள் அதாவது அயனிகள் (Electrically charged atomic particles or Ions) உருவாகின்றன. இந்த அயனிகள் மழை வெள்ளத்தில், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு, இறுதியில் கடலில் கலக்கின்றன. இந்த அயனிகளில் ஒரு பகுதியை கடலில் உள்ள உயிரினங்கள் பயன்படுத்திக் கொண்டாலும், பெரும்பான்மையான பகுதி கடலிலேயே தங்கி விடுகிறது.
  • இந்த அயனிகளில் 90% (90 விழுக்காடு) சோடியம் மற்றும் குளோரைடு ஆகியவற்றை உள்ளடக்கியது. சோடியம் மற்றும் குளோரைடு உப்புத் தன்மை உடையது.

பல கோடி ஆண்டுகளாக, இவ்வாறு ஆறுகளில் இருந்து கடலுக்கு அடித்து வரப்படும் அயனிகள், கடலிலேயே தங்கி விடுவதால், கடல் நீர் உப்பாக இருக்கிறது. மேலும், கடல் நீர் ஆவியாகும் போதும், கடலில் உள்ள உப்பு வெளியேறாமல் கடலில் தங்கி விடுகிறது.



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore