தனது எடையை விட 100 மடங்கு அதிக எடையை சுமக்கும் உயிரினம் எது தெரியுமா?

Updated On

எறும்புகளை பார்க்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள், அதேபோல எறும்பு இல்லாத வீடும் இருக்காது. ஒரு வீட்டில் ஒரு சிறிய எறும்புகளாவது இருக்கும். இந்த எறும்புகளை பற்றிய சுவாரஷ்யமான விசயங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

எறும்பு மிக சிறிய பூச்சி இனமாக இருந்தாலும், அதன் அளவிற்கு மிகப்பெரிய மூளை உள்ளது. அவை சுமார் 2,50,000 மூளை செல்களைக் கொண்டுள்ளது.

மனித சமுதாயத்திற்கும்  எறும்புகளுகும் பல ஒற்றுமைகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மனித சமுதாயத்தைப் போலவே எறும்புகளுக்கும் மன்னர், அமைச்சர், ராணுவ வீரர்கள், படையாட்கள் மற்றும் அடிமைகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எறும்புகள் தங்கள் உணவுகளை பண்டமாற்று முறையில் மாற்றுவதாகவும் அதற்கு சந்தைகள் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

பூச்சி இனங்களில் மிகவும் புத்திசாலித்தனம் உடையதாக எறும்பு உள்ளது. மிகசிறியது முதல் 5 சென்டிமீட்டர் வரை நீளமுடைய எறும்பு இனங்கள் உலகில் உள்ளன.

எறும்புகளை ராணி எறும்பு, வேலையாட்கள் எறும்பு, காவலாளி எறும்பு மற்றும் ஆண் எறும்பு என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

இதன் வகைகளுக்கு தகுந்தது போல எறும்புகளின் வாழ்நாட்கள் வேறுபட்டுள்ளது.

ராணி எறும்பு அதிகபட்சமாக முப்பது வருடம் உயிர் வாழும்.

வேலையாட்கள் காவலாளி எறும்புகள் மூன்று வருடம் உயிர் வாழும், ஆண் எறும்பு சில மாதங்கள் மட்டுமே உயிர் வாழ்கின்றன.

ராணி எறும்பு இல்லாத எறும்பு கூட்டமே இருக்காது, அதே போல ஒரு கூட்டத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட ராணி எறும்புகள் இருக்கும்.

ஒரு எறும்பு கூட்டத்தில் அல்லது புற்றில் சில நூறு முதல் ஏழு லட்சம் வரையிலான எறும்புகள் உயிர் வாழ்கின்றன.

ஒரு பெரிய பகுதியில் பல எறும்பு புற்றுகள் இருக்கும். பல புற்றுகள் ஒன்று சேர்ந்து பல கிலோமீட்டர் கணக்கில் தொடர்ச்சியாக இருக்கும். இதற்கு சூப்பர் காலனி என்றுபெயர்.

2009 ஆண்டின் கணக்கெடுப்பு படி 22,000 க்கும் மேற்பட்ட எறும்பு இனங்கள் உள்ளது, இதன் உணவு தானியங்கள், பங்கஸ்,தேன் என்பன ஆகும்.

எறும்புகள் இந்த உலகில் எவ்வளவு உண்டு என்று கணக்கிட முடியாது. ஆனால் 1 மனிதருக்கு 1 மில்லியன் என்ற அளவிற்கு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

எறும்புகள் விவசாயிகளாக செயல்படுகிறது, மனிதர்கள் விவசாயம் செய்வதற்கு முன்பிருந்தே எறும்புகள் பயிரிட்டு அறுவடை செய்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஸ்லேவ் மேக்கர் என்ற வகை எறும்புகள் மற்ற எதிரி எறும்புகள் வந்து கூட்டில் உள்ள எறும்பு குஞ்சுகளை திருடி செல்லாமல் கூட்டை சுற்றி காவல் செய்யும். பின்பு, இந்த குஞ்சுகள் வளர்ந்தவுடன் அவைகளை அடிமை வேலை செய்ய வைக்கும்.

சில பறவைகள் எறும்புகளை அவற்றின் இறகுகளில் வைத்து செல்கின்றன. ஏனெனில் எறும்புகள் ஒட்டுண்ணிகளைக் கொல்லும் ஃபார்மிக் அமிலத்தை வெளியிடுகின்றன.

ஒரு எறும்பு நீருக்கடியில் இரண்டு நாட்கள் வரை உயிர்வாழும். நிலநடுக்கம் ஏற்பட போவதை முன்கூட்டியே எறும்புகள் அறியும்.

எறும்புகள் மனிதனைவிட பல மடங்கு வலிமை கொண்டது எறும்புகள் அதன் எடையை விட பத்து மடங்கு முதல் 50 மடங்கு வரை அதிகமுள்ள பொருட்களைத் தூக்கிச் செல்கின்றன.

முக்கியமாக ஆசிய நெசவாளர் எரும்பு அதன் எடையை விட 100 மடங்கு அதிகம் உள்ள பொருட்களை தூக்கி செல்லும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

எறும்புகளுக்கு நுகரும் சக்தி மிகவும் அதிகம்.எறும்புகளுக்கு காதுகள் கிடையாது. ஆனால் எறும்புகள் நிலத்தின் அதிர்வை கொண்டு பொருட்களை அறிந்து கொள்கின்றன.

எறும்புகள் ஆறு நிறங்களில் உள்ளன. அவை பச்சை, சிவப்பு, பழுப்பு, ஊதா, நீலம் மற்றும் மஞ்சள்.

எறும்புகளின் உடலில் சுவாச அமைப்பு கிடையாது. ஆனால் அதற்கு பதிலாக உடலைச் சுற்றி ஆக்சிஜனை கொண்டு செல்ல உதவும் சுவாச வழிகள் உள்ளது.

எறும்புகளுக்கு இரண்டு வயிறுகள் உண்டு. ஒரு வயிற்றில் தனக்கு தேவையான உணவுகளை சேர்த்து வைத்துக் கொள்ளும். மற்றொரு வயிற்றில், பிற எறும்புகளுக்கான அல்லது சேமித்து வைக்க வேண்டிய உணவை எடுத்துச் செல்லும்.



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore