கட்டாயம் பின்பற்ற வேண்டிய பத்து ஆன்மிகப் பழக்கங்கள்

Updated On

பத்து ஆன்மிகப் பழக்கங்கள்

நாம் எந்த மாதிரியான ஆன்மீக பழக்கங்களை பின்பற்றினால் வீட்டில் செல்வம் மற்றும் ஆரோக்கியம் பெருகும் என்று தெரிந்துகொள்வோம்.

அனைவரும்  பின்பற்றவேண்டிய பத்து ஆன்மிகப் பழக்கங்கள்

நாம் தினந்தோறும் பின்பற்ற வேண்டிய ஆன்மீக பழக்கங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.

  1. நாம் எந்த ஒரு சுபகாரியம் தொடங்குவதற்கு முன் கணபதியை வணங்க வேண்டும். அதற்க்கு அடுத்தபடியாக குலதெய்வத்தை வழிபட வேண்டும்.
  2. அதே போல தினந்தோறும் வீட்டில் காலை, மாலை இரண்டு வேளையும் தீபம் ஏற்ற வேண்டும். வீட்டு வாசலில் சாணம் தெளித்து கோலமிட வேண்டும். சாணம் கிடைக்காதவர்கள் மஞ்சள் நீர் தெளித்து கோலமிடலாம்.
  3. வீட்டில் தீபம் ஏற்றும் போது முன்வாசல் திறந்திருக்க வேண்டும். விளக்கில் எண்ணெய் ஊற்றிய பிறகே திரியை போடவேண்டும்.
  4. வெள்ளிக்கிழமையன்று ஆண், பெண் இருவருமே முடி வெட்டுவதை தவிர்க்க வேண்டும்.
  5. நாம் தினந்தோறும் காலை வேளையில் சூரியனை வணங்க வேண்டும். தூங்க செல்வதற்கு முன் கடவுளை வணங்கி நன்றி தெரிவித்த பின்னர் உறங்க வேண்டும்.
  6. விளக்குகளை தானாக அணையும் வரை விடக்கூடாது, வாயால் ஊதியும் அணைக்கக்கூடாது, புஷ்பத்தினால் தான் அணைக்கவேண்டும்.
  7. சுமங்கலி பெண்கள் தினமும் துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மூன்று முறை வலம் வந்தால் வீட்டில் செல்வம் மற்றும் ஆரோக்கியம் பெருகும்.
  8. வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணிக்கு முன்னரே வீட்டை பெருக்கி,சுத்தம் செய்ய வேண்டும். பொழுது சாயும் மாலை நேரத்தில் வீட்டை சுத்தம் செய்யக்கூடாது,
  9. சுமங்கலி பெண்கள் வளையல் மற்றும் பொட்டு இல்லாமல் சாப்பாடு பரிமாறக்கூடாது.
  10. வீட்டில் மூன்று நாட்களுக்கு மேல் குப்பைகள் மற்றும் அழுக்கு துணிகளை சேர்த்துவைக்க கூடாது.


திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore