பொங்கல் எந்த திசையில் பொங்கினால் என்ன நன்மை கிடைக்கும்?

Updated On

தை மாதம் என்றாலே நம் எல்லோருக்கும் பிடித்த ஒரு மாதம் என்றே சொல்லலாம், அதற்கு காரணம் தமிழர் திருநாளான தை பொங்கல் தான். பொங்கல் அன்று வெளியூரில் உள்ள சொந்தபந்தங்கள் அனைவரும் ஒன்று கூடி புதிதாக அறுவடை செய்த புத்தரிசியில் பொங்கல் வைத்து, புத்தாடை உடுத்தி பொங்கல் திருவிழாவை கொண்டாடுகிறோம்.

புதிய மண்பானை வாங்கி அதில் அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் பால் சேர்த்து பொங்கவிட்டு, அப்படி பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் என்று கூறி குலவை போடுவர். அப்போது சூரிய பகவானுக்கும், கதிரவனுக்கு நன்றி தெரிவிப்பர்.

நம் முன்னோர்கள் பொங்கல் பொங்கும் திசையை வைத்து அந்த வருடம் முழுதும் என்ன நடக்கும் என்று தீர்மானிக்கின்றனர்.

கிழக்கு –  பொங்கல் கிழக்கு திசையில் பொங்கி வழிந்தால், வீடு, மனை, வாகனங்கள் வாங்கும் பேச்சுவார்த்தைகள் நடந்தால் அது சுமூகமாக நடக்கும். ஏதேனும் பொருட்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் அதனை வாங்கி மகிழ்வீர்கள். உடை மற்றும் ஆபரணங்கள் சேரும் வாய்ப்புகள் அதிகம்.

மேற்கு – பொங்கல் மேற்கு பக்கத்தில் பொங்கி வழிந்தால், சுப நிகழ்ச்சிகள் உண்டாகும். மகன் – மகளுக்கு மகளுக்கு வரன் தேடுபவராக இருந்தால் இந்த வருடத்தில் மங்கள நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். சுப செலவுகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என்பதை குறிக்கும்.

வடக்கு – பொங்கல் வடக்கு திசையில் பொங்கி வழிந்தால் பண வரவு அதிகரிக்கும். நீங்கள் பதவி உயர்வு அடைவீர்கள். மகன் அல்லது மகளுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். பூர்வீக சொத்து சம்மந்தமாக பேச்சுகள் நிறைவாக முடியும். வெளிநாட்டு பயணங்கள் போக வாய்ப்புகள் அதிகம். கொடுத்த கடன் எந்த தடங்கலும் இன்றி கைக்கு வந்து சேரும்.

தெற்கு-தெற்கு திசையில் பொங்கல் பொங்கி வழித்தால் பிணி என்றே சொல்லலாம். அந்த வருடம் முழுவதும், மருத்துவ செலவுகள் அதிகம் இருக்கும். உடல் நிலையில் அதிக சோர்வு காணப்படும். சுப காரியங்களில் சற்று தாமதம் ஏற்படும். எனவே உடல்நிலையில் கூடுதல் கவனத்தோடு செயல்படுவது நலம்.



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore