சர்க்கரை பொங்கல் குக்கரில் செய்வது எப்படி | Sakkarai Pongal Recipe in Tamil

Updated On

சக்கரை பொங்கல் செய்முறை | How to make Sweet Pongal in Tamil

பொங்கல் பண்டிகை ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் 13 முதல் 16 வரை கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தன்று புதிதாக அறுவடை செய்த தானியங்களை சமைத்து இறைவனைக்கு படைத்து வழிபடுவர். மார்கழி மாதம் அறுவடை செய்யும் பயிர்களில் முக்கியமானது நெல் மற்றும் கரும்பு. இதை முதன்மையாக வைத்து சர்க்கரை பொங்கல் செய்வர்.

நெல்லிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பச்சரிசி மற்றும் கரும்பில் இருந்து தயாரிக்கப்பட்ட வெல்லம் ஆகியவற்றை சேர்த்து சர்க்கரை பொங்கல் செய்யப்படுகிறது.

தமிழர் திருநாளன்று மக்கள் பச்சரிசி மற்றும் வெல்லம் சேர்த்து சர்க்கரை பொங்கல் செய்து உறவினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து உண்ணுவது வழக்கம்.

சர்க்கரை பொங்கல் குக்கரில் எப்படி செய்வது மற்றும் சக்கரை பொங்கல் அளவு மற்றும் செய்முறை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

கோவில் சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி | Sweet Pongal Recipe Temple Style

sweet pongal recipe in tamil

சர்க்கரை பொங்கல் தேவையான பொருட்கள் | Sweet Pongal Recipe Ingredients

  • பச்சரிசி – 1 கப்
  • பாசி பருப்பு – 1/4 கப்
  • வெல்லம் –  1 1/2 கப்
  • பால் –  2 கப்
  • முந்திரி – 10 to 15
  • உலர் திராட்சை –  10 to 15
  • ஏலக்காய் தூள் – 1/2 மேஜைக்கரண்டி
  • நெய்  – தேவையான அளவு

சர்க்கரை பொங்கல் செய்முறை | Sakkarai Pongal Recipe

ஒரு பாத்திரத்தில் பாசி பருப்பு சேர்த்து மிதமான தீயில் லேசான வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும்.

பச்சரிசி மற்றும் பருப்பை தண்ணீர் சேர்த்து நன்றாக கழுவி 10 நிமிடம் ஊற வைக்கவும்.

வெல்லத்தை தூள் செய்து, ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடித்து எடுத்துக்கொள்ளவும்.

ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பு சேர்த்து இரண்டரை கப் அளவு தண்ணீர் மற்றும் 2 கப் அளவு பால் சேர்த்து மூடி போட்டு மூன்று விசில் வரும் வரை வேக விடவும்.

விசில் அடங்கியதும், மூடியை திறந்து ஒரு கரண்டி வைத்து மசித்து விடவும்.

பின்பு மற்றொரு கடாயில் நெய் சேர்த்து முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வடித்தெடுத்த பாகை ஒரு கம்பி பதம் வரும் வரை காய்ச்சி எடுக்கவும்.

பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து அரிசி கலவையுடன் வெல்லப்பாகை சேர்த்து நன்றாக கலந்து விடவும். அடுப்பு மிதமான தீயில் இருப்பது அவசியம்.

பின்னர் முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் அனைத்தும் சேர்த்து நன்றாக கிளறி எடுக்கவும்.

விருப்பப்பட்டால் அதிகமான நெய் சேர்த்து நன்றாக கிளறி எடுக்கவும்.

இப்போது சூடான சுவையான சர்க்கரை பொங்கல் தயார்.



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore