வாழைப்பழத் தோலைப் பயன்படுத்தி முகப்பரு பிரச்சனைகளை எளிதில் எவ்வாறு சரி செய்யலாம் என்பது குறித்து இங்கு காண்போம்.
வாழைப்பழத் தோலுடன் பால் சேர்த்து சருமத்திற்கு அழகு சேர்க்கலாம். மேலும் சரும வறட்சி, எண்ணெய் பசைத்தன்மை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.
முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விட்டு, பின்னர் பாலை முகத்தின் அனைத்து பகுதியிலும் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். உலர்ந்த பின்னர் பருத்தி துணியால் முகத்தை துடைக்க வேண்டும். அதன் பின்னர், வாழைப்பழத்தோலின் உள்பகுதியை எடுத்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.
வாழைப்பழத் தோலை, தேனுடன் கலந்து பயன்படுத்துவதன் மூலம் முகப்பருக்களை போக்க முடியும். மேலும் இதன்மூலம் சருமத்தில் ஈரப்பத தன்மையை தக்க வைத்தல், சரும வறட்சியை தடுத்தல் ஆகியவற்றை செய்யலாம்.
அத்துடன், முகப்பருவால் ஏற்படும் வீக்கம் இதன்மூலம் தடுக்கப்படும். வாழைப்பழத் தோலை கூழ் போல் செய்து, அதனுடன் தேன் சேர்த்து குழைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
அதனைத் தொடர்ந்து, 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். தினமும் இதனை ஒருமுறை செய்ய வேண்டும். இதனால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
வாழைப்பழத் தோல் மற்றும் கற்றாழை இலை ஜெல் இரண்டையும் ஒன்று சேர்த்து, பசைபோல் குழைத்து முகத்தில் தடவி, அரை மணி கழித்து நீரில் கழுவ வேண்டும். இதன்மூலம் முகப்பரு பிரச்சனைகள் தீரும்.
வாழைப்பழத் தோலை கூழ் செய்து, அதனுடன் மஞ்சள் தூள் கலந்து முகத்தில் பூசி வர, முகப்பரு பிரச்சனையால் ஏற்படும் வீக்கம் குறையும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இதனை செய்ய வேண்டும். மசாஜ் செய்தவுடன் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
முகப்பொலிவு பெற வாழைப்பழத் தோலை கூழ் செய்து, Rose water-வுடன் கலந்து முகத்தில் பூச வேண்டும்.