ஜாதகத்தில் லக்னம், நட்சத்திரம், ராசி இந்த மூன்றும் முக்கியமாக குறிக்கப்பட்டிருக்கும். லக்கினம் என்பது ஒரு ஜாதகத்தில் இடம் பெறும் ராசிக் கட்டத்தில் ‘ல’ என்றோ, அல்லது ‘லக்’ என்றோ, அல்லது ‘லக்னம்’ என்றோ குறிப்பிட்டிருக்கும் ராசியே முதல் வீடாகும். சித்திரையில் சூரியன் மேஷ ராசியில் உதயமாகிறது. 2 மணி நேரத்திற்கு இது நீடிக்கும். பின்பு அடுத்த ராசியான ரிஷபத்திற்கு சென்று விடும். இது ஒரு சுழற்சி முறை. ஒரு குழந்தை பிறக்கும் போது சூரியன் எந்த ராசியில் இருக்கிறதோ அந்த ராசியை லக்னமாக குறிப்பிடுகிறார்கள். லக்னம் தான் முதல் கட்டம். லக்னம் என்பது மாற்ற முடியாத விஷயமாகும்.
எந்த லக்கினத்தில் இருந்தால் என்ன பலன் என்பதை பொதுவாக பார்க்கலாம்
1.மேஷ லக்கினம்
யோககாரகர்கள்: குரு, சூரியன்
யோகமில்லாதவர்கள்: புதன், சுக்கிரன், சனி,
குரு தீய கிரகங்களுடன் கூட்டாக இருந்தால் இந்த லக்கினக்காரர்
களுக்குத் தீய பலன்களையே கொடுப்பார். அவர் இந்த லக்கினக்காரர்
களுக்கு 12ஆம் இடத்து அதிபதியும் ஆவார். அதை மனதில் கொள்க!
சனியுடன் குரு சேரந்தால் அது விதிவிலக்கு. இருவரும் 9, 11ஆம்
இடத்திற்கு உரியவர்கள் ஆகவே தீமைகளில் இருந்து விலக்கு
அதையும் மனதில் கொள்க!
மாரக அதிபதி: சுக்கிரன்
2. ரிஷப லக்கினம்
யோககாரகர்கள்: சூரியன், சனி
யோகமில்லாதவர்கள்: குரு, சந்திரன்
நல்ல பலன்களைக் கொடுப்பவர்:புதன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: சூரியன், சனி ஒன்று சேர்ந்து,
கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு
அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: குரு, சந்திரன்
3.மிதுன லக்கினம்
யோககாரகர்கள்: சுக்கிரன்
யோகமில்லாதவர்கள்: சூரியன், செவ்வாய், குரு
நல்ல பலன்களைக் கொடுப்பவர்: சனி, குரு
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்:சனியுடன் குரு ஒன்று சேர்ந்து,
கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு
அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: சந்திரன், சனி
4.கடக லக்கினம்
யோககாரகர்கள்: குரு, செவ்வாய், சந்திரன்
யோகமில்லாதவர்கள்: சுக்கிரன், பதன்
நல்ல பலன்களைக் கொடுப்பவர்: குரு, செவ்வாய், சந்திரன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: செவ்வாய் கேந்திர திரிகோணங்களில்
இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு ராஜ யோகம்
மாரக அதிபதி: சனி
5.சிம்ம லக்கினம்
யோககாரகர்கள்: சூரியன், குரு, செவ்வாய்
யோகமில்லாதவர்கள்: புதன், சுக்கிரன், சனி
நல்ல பலன்களைக் கொடுப்பவர்: சந்திரன் சேர்க்கையை வைத்து நல்ல பலன்களைக் கொடுப்பார்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்: செவ்வாய் லக்கினத்தில்
இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு ராஜ யோகம்
மாரக அதிபதி: சனி
6. கன்னி லக்கினம்:
யோககாரகர்கள்: சுக்கிரன்
யோகமில்லாதவர்கள்: செவ்வாய், சந்திரன், குரு
மாரக அதிபதி: செவ்வாய்
7. துலா லக்கினம்
யோககாரகர்கள்: சனி, புதன்
யோகமில்லாதவர்கள்: சூரியன், செவ்வாய், குரு
நல்ல பலன்களைக் கொடுப்பவர்: சுக்கிரன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: புதனும், சந்திரனும் ஒன்று சேர்ந்து,
கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு
அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: செவ்வாய்
9. விருச்சிக லக்கினம்
யோககாரகர்கள்: குரு, சந்திரன்
யோகமில்லாதவர்கள்: புதன், சுக்கிரன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: சூரியன் மற்றும் சந்திரன் இருவரும்
சேர்ந்து, கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு
அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: குரு
9. தனுசு லக்கினம்:
யோககாரகர்கள்: புதன், செவ்வாய், சூரியன்
யோகமில்லாதவன்: சுக்கிரன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: புதனும், சூரியனும் ஒன்று சேர்ந்து,
கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு
அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: சனீஷ்வரன்.
10. மகர லக்கினம்:
யோககாரகர்கள்: புதன், சுக்கிரன்
யோகமில்லாதவர்கள்: சந்திரன், குரு, செவ்வாய்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: சனியும், சுக்கிரனும் சேர்ந்தால் அது
இந்த லக்கினக்காரர்களுக்கு ராஜயோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: செவ்வாய்
குரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்
11. கும்ப லக்கினம்
யோககாரகர்கள்: சுக்கிரன்
யோகமில்லாதவர்கள்: சந்திரன், குரு, செவ்வாய்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: சனியும், சுக்கிரனும் சேர்ந்தால் அது
இந்த லக்கினக்காரர்களுக்கு ராஜயோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: குரு, செவ்வாய்
12. மீன லக்கினம்.
யோககாரகர்கள்: செவ்வாய், குரு
யோகமில்லாதவர்கள்: சனி, சுக்கிரன், சூரியன், புதன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: குரு மற்றும் செவ்வாயின் சேர்க்கை
மாரக அதிபதி: சனி, புதன்