நினைவாற்றலையும் கவனத்தையும் பலவீனப்படுத்தும் இந்த 5 உணவுகளைத் தவிருங்கள்
உங்கள் மூளை உங்கள் உடலில் மிக முக்கியமான உறுப்பு. இது உங்கள் இதயத் துடிப்பையும், நுரையீரல் சுவாசத்தையும், உங்கள் உடலில் உள்ள அனைத்து அமைப்புகளையும் செயல்பட வைக்கிறது.
அதனால்தான் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு மூளையை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்.
சில உணவுகள் மூளையில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன, உங்கள் நினைவாற்றல் மற்றும் மனநிலையை பாதிக்கிறது.
சர்க்கரை பானங்கள்
அதிகப்படியான சர்க்கரை உடலுக்கு தீங்கு விளைவிக்கும். உணவில் அதிகப்படியான சர்க்கரை சேர்ப்பதனால் அறிவாற்றல் மற்றும் மூளை குறைபாடுகள் ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. சர்க்கரை பானங்களை குடிக்காதவர்களுடன் ஒப்பிடும்போது. அதிக இனிப்பு பானங்களை உட்கொள்பவர்களுக்கு நினைவாற்றல் குறைவு மற்றும் ஒட்டுமொத்த மூளையின் அளவு குறைகிறது.
நீங்கள் வயதாகும்போது உங்கள் மூளையை கூர்மையாக வைத்திருக்க விரும்பினால், அதிக ஸ்வீட் பானங்களைத் தவிர்க்கவும். சோடா, இனிப்பு தேநீர் மற்றும் பிற சர்க்கரை பானங்களை அதிகம் குடிப்பவர்களுக்கு நினைவாற்றல் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.
மேலும் அறிய: நடைப்பயிற்சி செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியுமா?
பொரித்த உணவுகள்
வறுத்த உணவு வகைகளில் சுவைக்காக செயற்கை பொருட்கள், ரசாயனம், உணவுக்கு நிறமேற்ற சாயப்பொருட்கள் ஆகியவை சேர்க்கப்படுகின்றன. இதனால் குழந்தைகள், பெரியவர்களுக்கு பழக்க வழக்கத்தில் மாற்றம் ஏற்படுகிறது. மூளையில் உள்ள நரம்பு செல்களை மெதுவாக பாதித்து அழிக்கிறது. வறுப்பதற்காக பயன்படுத்தப்படும் சில எண்ணெய் வகைகள் நச்சுத்தன்மை வாய்ந்தவை. இதனால் சிறந்த எண்ணெய் வகைகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.
வறுத்த கோழி மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகள் உங்கள் மூளைக்கும் தீங்கு விளைவிக்கும். பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் நினைவகம் மற்றும் மூளை செயல்பாடு போன்றவை பாதிக்க வாய்ப்புள்ளது.
அதிக கார்போஹைட்ரேட் உணவுகள்
சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், இனிப்பு சுவை இல்லாதவை கூட உங்கள் இரத்த சர்க்கரையை அதிகரிக்கலாம். அதைத் தொடர்ந்து அடிக்கடி உணவில் சேர்க்கும் போது மனரீதியான பிரட்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்க்கு பதிலாக முழு தானிய ரொட்டிகள், பழுப்பு அரிசி மற்றும் முழு கோதுமை உணவுகளை சாப்பிடலாம்.
வெள்ளை அரிசியில் முற்றிலும் அதிகளவு கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதால் அரிசி உணவை அதிகமாக உட்கொள்ளும்போது மூளையின் செயல்பாட்டில் பிரச்சினைகளை உண்டாக்கும். மனஅழுத்தத்தில் கொண்டு போய்விடும் அபாயங்களையும் அதிகரிக்கும்.
மேலும் அறிய: 7 நாளில் உடல் எடை குறைய உணவு அட்டவணை
மது
ஆல்கஹால் அருந்துவது உங்கள் மூளையில் நீண்ட காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆல்கஹால் நேரடியாக மூளையின் தொடர்புப் பாதைகளை பாதிக்கிறது. நீங்கள் எவ்வளவு அதிகமாக குடிக்கிறீர்களோ, அவ்வளவுக்கு புதிய தகவலைச் அல்லது விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்வது பாதிக்கிறது . மது உங்களை குழப்பி அல்லது மனச்சோர்வடையச் செய்கிறது.
அதிகப்படியான மது அருந்துதல் மூளையில் உள்ள நரம்பியக்கடத்திகளில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும், அது மூளையின் செயல்திறனை குறைப்பது மட்டுமல்லாமல் மனரீதியான பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆல்கஹால் மூளை செல்களை அழித்து மூளை திசுக்களை சுருங்கச் செய்கிறது. அதிகப்படியான மது அருந்துபவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகள் உருவாகி மூளையின் செயல்பாட்டை மேலும் சேதப்படுத்தும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சர்க்கரை, சேர்க்கப்பட்ட கொழுப்புகள் மற்றும் உப்பு அதிகமாக இருக்கும். சிப்ஸ், இனிப்புகள், உடனடி நூடுல்ஸ், மைக்ரோவேவ் பாப்கார்ன், கடையில் வாங்கும் சாஸ்கள் மற்றும் ரெடிமேட் உணவுகள் போன்ற உணவுகள் அவற்றில் அடங்கும்.
இந்த உணவுகளில் பொதுவாக கலோரிகள் அதிகம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கும். அவை எடை அதிகரிப்பை ஏற்படுத்தும் உணவு வகைகளாகும், இது உங்கள் மூளை ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.
வறுத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உண்பவர்களின் சிந்தனைத் திறன் மோசமாக பாதிக்கப்படுகிறது. இது மூளைக்கு இரத்தத்தை வழங்கும் இரத்த நாளங்களை சேதப்படுத்தும் மற்றும் மூளையை காயப்படுத்தும்.
இந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவதை தவிர்த்து மனஅழுத்தம் அல்லது அல்சைமர் நோய் ஏற்படும் அபாயத்தை குறைத்து உங்கள் நினைவாற்றல் திறனை அதிகரித்துக் கொள்ளுங்கள்.