பெண்களுக்கான டாப்-10 ஸ்கூட்டர்கள் | Best Two-Wheeler for Ladies 2023
யமஹா ரே இசட்ஆர் 125 (Yamaha Ray ZR 125)
பெண்கள் விரும்பி வாங்கும் வாகனங்களில் ஒன்று யமஹா ரே ZR 125. இது ஆண்களின் பைக் போன்ற தோற்றத்தை பெற்றுள்ளது. அதிக மைலேஜ் கொடுக்கும் ஸ்கூட்டர் வகையில் ஒன்றாகும். யமஹா ரே இசட்ஆர் 125 இந்தியாவில் ஆரம்ப விலை ரூ.84,000 (சாலை விலை) ஆகும். இதன் எடை 99 கிலோ மற்றும் பெட்ரோல் டேங்க் இன் கொள்ளளவு 5.2 லிட்டர் ஆகும். இது 7 விதமான நிறத்தில் கிடைக்கிறது.
இதில் 3 விதமான model உள்ளது.
1.Yamaha Ray ZR Drum
2.Yamaha Ray ZR Disc
3. Yamaha Ray ZR Street Rally
மைலெட்ஜ் – 62 கிலோ மீட்டர்
இயந்திர திறன் – 125 சி.சி
சென்னையில் சாலை விலை -ரூ. 84,100
ஹோண்டா ஆக்டிவா 6 ஜி (Honda Activa 6G)
ஹோண்டா ஆக்டிவா 6 ஜி இந்தியாவில் ஆரம்ப விலை ரூ.65,500 (ex- ஷோரூம் விலை)ஆகும். இதன் எடை 107 கிலோ மற்றும் பெட்ரோல் டேங்க் இன் கொள்ளளவு 5.3 லிட்டர் ஆகும். இது 4 வேரியன்டகள் மற்றும் 8 வண்ணங்களில் வெளியிட்டுள்ளனர்.
மைலெட்ஜ் – 50 கிலோ மீட்டர்
இயந்திர திறன் – 109.51 சி.சி
சென்னையில் சாலை விலை -ரூ. 82,230
டிவிஎஸ் என்டார்க் 125 (TVS Ntorq 125)
பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களையும் கவரும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு முழுமையான டிஜிட்டல் கருவி மற்றும் தனித்துவமான புளூடூத்-இணைப்பு அமைப்பு உள்ளது. இந்தியாவில் இதன் ஆரம்ப விலை ரூ.77,500 (சாலை விலை). இதன் எடை 118kg மற்றும் பெட்ரோல் கொள்ளளவு 5.8 லிட்டர். இதில் மணிக்கு 95 கி.மீ வேகம் வரை செல்லமுடியும். டிவிஎஸ் எண்டார்க் 125 மாடலிற்கு தகுந்தாற்போல 11 வண்ணங்களில் கிடைக்கிறது.
இதில் 4 விதமான வகைகளில் உள்ளது.
- Ntorq 125 Drum – BS6
- Ntorq 125 Disc – BS6
- Ntorq 125 Race Edition – BS6
- Ntorq 125 Super Squad Edition – Disc
மைலெட்ஜ் – 50 கிலோ மீட்டர்
இயந்திர திறன் – 125 சி.சி
சென்னையில் சாலை விலை -ரூ. 91,600 முதல் ரூ. 1,02,700.
டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 (TVS Scooty Zest 110)
அலுவலகம் மற்றும் கல்லூரி செல்லும் பெண்களுக்கு ஒரு சிறந்த வாகனம் TVS ஸ்கூட்டி ஜெஸ்ட். இந்தியாவில் இதன் ஆரம்ப விலை ரூ.60,325 ஆகும். இதன் எடை 98 கிலோ மற்றும் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 5 லிட்டர் ஆகும்.
மைலெட்ஜ் – 62 கிலோ மீட்டர்
இயந்திர திறன் – 110 சி.சி
சென்னையில் சாலை விலை -ரூ. 71,600
ஹோண்டா ஆக்டிவா 125 (Honda Activa 125)
ஹோண்டா ஆக்டிவா இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர். பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரும் உபயோகிப்பதற்கு ஏற்றதாக உள்ளதால் இதை அனைவரும் விரும்பி வாங்குகின்றனர். இந்தியாவில் இதன் ஆரம்ப விலை ரூ.87,500 (சாலை விலை). இதன் எடை 111kg மற்றும் பெட்ரோல் கொள்ளளவு 5 . 3 லிட்டர். இது நான்கு விதமான நிறத்தில் கிடைக்கிறது.
இதில் 3 விதமான model உள்ளது.
1.Activa 125 Std – Fi (BS6)
2.Activa 125 Alloy – Fi (BS6)
3.Activa 125 Dlx – Fi (BS6)
மைலெட்ஜ் – 50 கிலோ மீட்டர்
இயந்திர திறன் – 125 சி.சி
சென்னையில் சாலை விலை -ரூ. 87,200 முதல் ரூ. 95,000.
டிவிஎஸ் ஜுபிடர் (TVS Jupiter)
சென்ற ஆண்டு அதிக அளவில் விற்றுத்தீர்த்த ஸ்கூட்டர் வகையில் இதுவும் ஒன்றாகும். இந்தியாவில் இதன் ஆரம்ப விலை ரூ.72,300 (சாலை விலை). இதன் எடை 109kg மற்றும் பெட்ரோல் கொள்ளளவு 5 . 3 லிட்டர். இதில் மணிக்கு 85 கி.மீ வேகம் வரை செல்லமுடியும். இது பெண்களுக்கு தகுந்தாற்போல கண்கவரும் ஒன்பது விதமான நிறத்தில் வடிவமைத்துள்ளனர்.
இதில் 4 விதமான model உள்ளது.
1.Jupiter Standard
2.Jupiter Drum ZX
3.Jupiter Disc ZX
4.Jupiter Classic ET-Fi
மைலெட்ஜ் – 50 கிலோ மீட்டர்
இயந்திர திறன் – 109.7 சி.சி
சென்னையில் சாலை விலை -ரூ. 80,800 முதல் ரூ. 88,300.
ஹீரோ ப்ளஸுர் பிளஸ் 110 (Hero Pleasure+ 110)
ஹீரோ நிறுவனம் ஹீரோ ப்ளஸுர் வாகனத்தை மறுவடிவமைப்பு செய்து அதில் சில தனித்துவமான அம்சங்களை அறிமுகப்படுத்தி ஹீரோ ப்ளஸுர் பிளஸ் என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இதன் ஆரம்ப விலை ரூ.64,800 (சாலை விலை). ஒரு யூ.எஸ்.பி சார்ஜிங் ஸ்லாட்டுடன் வருகிறது. நவீன மொபைல் போன்கள் மற்றும் இதர சாதனங்களை சார்ஜ் செய்யப் பயன்படுகிறது. இதன் எடை 104kg மற்றும் பெட்ரோல் கொள்ளளவு 4.8 லிட்டர். இதில் மணிக்கு 85 கி.மீ வேகம் வரை செல்லமுடியும்.இது எட்டு விதமான நிறத்தில் கிடைக்கிறது.
இதில் 3 விதமான model உள்ளது.
1.Pleasure+ Sheet Metal Wheel BS6
2.Pleasure+ Cast Wheel BS6
3.Pleasure+ Platinum
மைலெட்ஜ் – 63 கிலோ மீட்டர்
இயந்திர திறன் – 110 சி.சி
சென்னையில் சாலை விலை -ரூ. 69,000 முதல் ரூ. 74,500.
ஹோண்டா டியோ BS6 (Honda Dio)
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் மடல்களில் ஒன்று ஹோண்டா டியோ. இது இளைஞர்கள் விரும்பும் வண்ணமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் ஆரம்ப விலை ரூ.72,300 (சாலை விலை). இதன் எடை 102kg மற்றும் பெட்ரோல் கொள்ளளவு 5.3 லிட்டர். இதில் மணிக்கு 83 கி.மீ வேகம் வரை செல்லமுடியும். இது எட்டு விதமான நிறத்தில் கிடைக்கிறது.
இதில் 3 விதமான model உள்ளது.
1.Dio Standard BS6
2.Dio Deluxe BS6
3.Dio Repsol Edition
மைலெட்ஜ் – 55 கிலோ மீட்டர்
இயந்திர திறன் – 109 சி.சி
சென்னையில் சாலை விலை -ரூ. 79,800 முதல் ரூ. 86,300.
Scooty for Women
யமஹா பாசினோ 125 (Yamaha Fascino 125)
யமஹா பாசினோ 125 முன்பு வந்த பாசினோவில் இருந்து வேறுபட்டு சில அழகியல் மாற்றங்களை பெற்றுள்ளது. ஒரு குரோம் சுற்றத்தை பெற்றுள்ளது இதற்கு மேலும் அழகு சேர்க்கும் வண்ணமாகவுள்ளது. இதன் எடை 99kg மற்றும் பெட்ரோல் கொள்ளளவு 5.2 லிட்டர். இதில் மணிக்கு 83 கி.மீ வேகம் வரை செல்லமுடியும். இது எட்டு விதமான நிறத்தில் கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலை ரூ.84,000 முதல் உள்ளது.
யமஹா பாசினோ 125 நான்கு வகைகளில் கிடைக்கிறது
1.Fascino 125 Standard – Drum Brake
2.Fascino 125 Dlx – Drum Brake
3.Fascino 125 Standard – Disc Brake
4. Fascino 125 Dlx – Disc Brake
வெஸ்பா யு. சி (Vespa UC)
வெஸ்பா என்பது உலகளாவிய பிராண்ட் ஆகும். பெண்களுக்கான சிறந்த வாகனத்தில் வெஸ்பா யு. சி ஒன்றாகும். இந்தியாவில் இதன் ஆரம்ப விலை ரூ.1,06,800. இதன் எடை 115kg மற்றும் பெட்ரோல் கொள்ளளவு 7.4 லிட்டர். இதில் மணிக்கு 90 கி.மீ வேகம் வரை செல்லமுடியும். இது நான்கு விதமான நிறத்தில் கிடைக்கிறது.
மைலெட்ஜ் – 40 கிலோ மீட்டர்
இயந்திர திறன் – 125 சி.சி
சென்னையில் சாலை விலை -ரூ. 1,13,000.
சுசுகி அக்சஸ் 125 (Suzuki Access 125)
தினந்தோறும் பயணம் செய்யும் பெண்களுக்கு ஏற்ற ஒரு சிறந்த வாகனமாக சுசுகி அக்சஸ் 125 இருக்கும். இந்தியாவில் இதன் ஆரம்ப விலை ரூ.78,000. இதன் எடை 104kg மற்றும் பெட்ரோல் கொள்ளளவு 5 லிட்டர். இதில் மணிக்கு 90 கி.மீ வேகம் வரை செல்லமுடியும். இது நான்கு விதமான நிறத்தில் கிடைக்கிறது. சுசுகி அக்சஸ் 125, மாடலிற்கு தகுந்தாற்போல 11 வண்ணங்களில் கிடைக்கிறது.
சுசுகி அக்சஸ் 125 ஏழு வகைகளில் கிடைக்கிறது
1.Access 125 Steel Wheel – Drum – CBS -Fi
2.Access 125 Alloy Wheel – Drum -CBS Fi
3.Access 125 Disc – CBS – Fi
4.Access 125 Drum Cast – SE – Fi
5.Access 125 SE – Disc CBS – Fi
6.Access 125 Drum Alloy – Bluetooth
7.Access 125 Disc Alloy – Bluetooth
மைலெட்ஜ் – 50 கிலோ மீட்டர்
இயந்திர திறன் – 125 சி.சி
சென்னையில் சாலை விலை -ரூ. 81,800.
தற்போது பெண்களுக்கான புதிய வாகனங்கள் புதிய மாடல்களில் வந்துகொண்டே இருக்கின்றன. வாகனத்தை வாங்குவதற்கு முன்பு நன்கு ஆராய்ந்து பின்பு வாங்குவது நல்லது.
குறிப்பு: மேற்கண்ட வாகனங்களின் விலையானது இடம் மற்றும் டீலரை பொறுத்து மாறுபடும்.