விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 2023 | Happy Ganesh Chaturthi Wishes 2023
விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை வழிபட்டு எல்லா வளமும் நலமும் பெற்று மகிழிச்சியுடன் வாழ வாழ்த்துவது உங்கள் திருத்தமிழ் நாட்காட்டி. இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
இந்து மக்களின் மிக முக்கியமான முழு முதல் கடவுள் விநாயகர் ஆவார். விநாயகரின் பிறந்தநாளை, விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம்.
விநாயகர் சதுர்த்தி 2023 தேதி
விநாயகர் சதுர்த்தி ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி அன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஆவணி மாதம் 2ம் நாள் செவ்வாய்க்கிழமை (September 19) அன்று கொண்டாடப்படுகிறது.
இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாப்படும் ஒரு விழாவாக கருதப்படுகிறது. இந்த நாளில், நண்பர்கள், சகோதர்கள் என்று அனைவரும் ஒன்றிணைந்து களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வாங்கி வந்து, வீடு அல்லது பொதுவான ஒரு இடத்தில் வைத்து அதற்கு வழிபாடு செய்வது வழக்கம். இதில், விநாயகருக்கு பிடித்தமான அருகம்புல், கொழுக்கட்டை, சுண்டல் போன்றவற்றை படைப்பதும் வழக்கம்.
மேலும் அறிய: விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் 2023 Part- 1
விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கவிதைகள் | Happy Vinayagar Chaturthi Status Images and Vinayagar Chaturthi Quotes in Tamil
விநாயகர் அருளால்
உங்கள் வாழ்வில்
சந்தோசம் மலரட்டும்…
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் | Vinayagar Chaturthi Status in tamil
விநாயகர் சதுர்த்தி தமிழ் கவிதைகள் | Vinayagar Chaturthi Quotes in Tamil
tamil விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் | Vinayagar Chaturthi Status Images in Tamil
wishes விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் | Vinayagar Sathurthi in tamil
Happy Vinayagar Chaturthi Status in Tamil
விநாயகரே நினதருளால்
எல்லாம் சித்தமாகட்டும்
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்..!
அனைவருக்கும்
இனிய விநாயகர் சதுர்த்தி
வாழ்த்துக்கள்..!
விநாயகர் சதுர்த்தி வாழ்த்து புகைப்படம், வாழ்த்து அட்டை
விநாயகர் அருளால்
உங்கள் வாழ்வில் சந்தோஷம் மலரட்டும்.
மலர்ந்த சந்தோஷம் அவர் அருளால் தொடரட்டும்…!
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்…!
வினைதீர்க்கும் நாயகனே..
விக்னம் அழிப்பவனே..
விஜயம் கொடுப்பவனே..
உன்னை அடிபணிந்து வணங்குகின்றோம்.!
அனைவருக்கும் இனிய
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
Vinayagar chaturthi wishes image
உங்கள் வாழ்விற்குத் தேவையான
வளங்களையும், நம்பிக்கையையும்
வழங்குவதற்கான ஆரம்பமாக
இந்த விநாயகர் சதுர்த்தி இருக்கட்டும்.
இனிய
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்..!
Ganesh chaturthi tamil 2023
உமையவளின் புதல்வனே
வேலனுக்கு முன்னவனே
நான்முகக் கடவுளே
யானைமுகத்தோனே
தருவாய் தருவாய்
கவசம் கவசம் !
இனிய பிள்ளையார் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்
Happy Ganesh Chaturthi
கணபதி என்றிட கலங்கும் வல்வினை
கணபதி என்றிட காலனும் கைதொழும்
கணபதி என்றிட கருமம் ஆதலால்
கணபதி என்றிட கவலை தீருமே.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்…!
உங்களுக்கும்
உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும்
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் | happy ganesh chaturthi in tamil
உங்களுக்கும் உங்கள்
நட்புகளுக்கும் உறவினர்களுக்கும்
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்…!
உங்கள் வளமான வாழ்க்கைக்காக
நான் அந்த பிள்ளையாரிடம்
பிரார்த்தனை செய்கிறேன்.
வாழ்க்கையின் எல்லா மகிழ்ச்சிகளையும்
நீங்கள் காணட்டும்,
உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகட்டும்.
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்…!
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் மோதகம் கொழுக்கட்டை ரெசிபி!
விநாயகர் துதி /கணேசர் துதி
கணபதி போற்றி:
1. ஓம் அத்தி முகனே போற்றி
2. ஓம் அம்பிகைச் செல்வா போற்றி
3. ஓம் அம்மையே அப்பா போற்றி
4. ஓம் அருமறைக் கொழுந்தே போற்றி
5. ஓம் அமரர்கள் கோனே போற்றி
6. ஓம் அடியார்க்கு இனியோய் போற்றி
7. ஓம் அங்குச பாஸா போற்றி
8. ஓம் அரு உருவானாய் போற்றி
9. ஓம் ஆறுமுகன் அண்ணா போற்றி
10. ஓம் அணுவினுக்கு அணுவே போற்றி
11. ஓம் அண்டங்கள் ஆனாய் போற்றி
12. ஓம் அவல்,பொரி,அப்பம் ,அருந்துவோய் போற்றி
13. ஓம் பிட்டும், முப்பழமும் நுகர்வாய் போற்றி
14. ஓம் ஆதி மூலமே போற்றி
15. ஓம் ஆருயிர்க்குயிரே போற்றி
16. ஓம் ஆரா அமுதா போற்றி
17. ஓம் இருள் தனைக் கடிவாய் போற்றி
18. ஓம் இடையூறு களைவாய் போற்றி
19. ஓம் இன்பத்தின் பெருக்கே போற்றி
20. ஓம் இருவினை அறுப்பாய் போற்றி
21. ஓம் ஈசனார் மகனே போற்றி
22. ஓம் ஈரேழாம் உலகா போற்றி
23. ஓம் உத்தமக் குணாளா போற்றி
24. ஓம் உலகெலாம் காப்பாய் போற்றி
25. ஓம் உண்மை நெறியாளா போற்றி
26. ஓம் உம்பர்கள் தொழுவாய் போற்றி
27. ஓம் ஊழ்வினை ஒழிப்பாய் போற்றி
28. ஓம் எங்குமே நிறைவாய் போற்றி
29. ஓம் என்றுமே திகழ்வாய் போற்றி
30. ஓம் எங்குமே அமர்ந்தாய் போற்றி
31. ஓம் எவர்க்குமே அருள்வாய் போற்றி
32. ஓம் எதையுமே முடிப்பாய் போற்றி
33. ஓம் எண்குண சீலா போற்றி
34. ஓம் எழு பிறப்பறுப்பாய் போற்றி
35. ஓம் ஏழைப் பங்காளா போற்றி
36. ஓம் ஏக நாயகனே போற்றி
37. ஓம் எழில் மிகு தேவே போற்றி
38. ஓம் ஔவையார்க் கருள்வாய் போற்றி
39. ஓம் ஐங்கர முடையாய் போற்றி
40. ஓம் ஐம்புலன் அடக்குவாய் போற்றி
41. ஓம் நான்கு நற் புயத்தாய் போற்றி
42. ஓம் நாவலர் பணிவாய் போற்றி
43. ஓம் முக்கண்கள் உடையாய் போற்றி
44. ஓம் முழு முதற் பொருளே போற்றி
45. ஓம் ஒளி மிகு தேவே போற்றி
46. ஓம் ஓங்கார மூர்த்தி போற்றி
47. ஓம் கணத்து நாயகனே போற்றி
48 . ஓம் கருணையார் மூர்த்தியே போற்றி
49. ஓம் கலைஞானக் குருவே போற்றி
50. ஓம் கயமுகனைக் காய்ந்தாய் போற்றி
எந்த ராசிக்காரர்கள் எந்த விநாயகரை வணங்க வேண்டும்??
51. ஓம் கற்பக களிறே போற்றி
52. ஓம் கண்கண்ட தேவே போற்றி
53. ஓம் கந்தனை வென்றாய் போற்றி
54. ஓம் கனிதனைப் பெற்றாய் போற்றி
55. ஓம் சங்கத்துத் தமிழே போற்றி
56. ஓம் சரவணன் தொழுவாய் போற்றி
57. ஓம் சர்வ லோகேசா போற்றி
58. ஓம் சாந்தமார் மூர்த்தி போற்றி
59. ஓம் சுருதியின் முடிவே போற்றி
60. ஓம் சொற்பதம் கடந்தாய் போற்றி
61. ஓம் நம்பிக்கு அருள்வாய் போற்றி
62. ஓம் நாதனே ,கீதா போற்றி
63. ஓம் தவசிகள் தொழுவாய் போற்றி
64. ஓம் தாயினும் நல்லாய் போற்றி
65. ஓம் தரும குணாளா போற்றி
66. ஓம் தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் போற்றி
67. ஓம் தூயவர் துணைவா போற்றி
68. ஓம் துறவிகள் பொருளே போற்றி
69. ஓம் நித்தனே ,நிமலா போற்றி
70. ஓம் நீதி சால் துரையே போற்றி
விநாயகர் சதுர்த்தி நாளில் நிலாவை பார்க்கக் கூடாது…
71. ஒம் நீல மேனியனே போற்றி
72. ஓம் நிர்மலி வேனியா போற்றி
73. ஓம் பேழை நல் வயிற்றாய் போற்றி
74. ஓம் பெரிச்சாளி வாகனா போற்றி
75. ஓம் பாரதம் வரைந்தாய் போற்றி
76. ஓம் பாவலர் பணிவாய் போற்றி
77. ஓம் பாசத்தை அறுப்பாய் போற்றி
78 . ஓம் பாவப்பிணி ஒழிப்பாய் போற்றி
79. ஓம் மும்மலம் அறுப்பாய் போற்றி
80. ஓம் முத்தியை தருவாய் போற்றி
81. ஓம் வேழ முகத்தாய் போற்றி
82. ஓம் வேட்கையை தணிவிப்பாய் போற்றி
83. ஓம் வேள்வியின் முதல்வா போற்றி
84. ஓம் வேதாந்த விமலா போற்றி
85. ஓம் ஒழுக்கமது அருள்வாய் போற்றி
86. ஓம் உடல் நலம் தருவாய் போற்றி
87. ஓம் செல்வம் தருவாய் போற்றி
88. ஓம் செறுக்கினை அழிப்பாய் போற்றி
89. ஓம் சிந்தனையை அடக்குவாய் போற்றி
90. ஓம் சினம் ,காமம் ,தவிர்ப்பாய் போற்றி
91. ஓம் கல்வியை அருள்வாய் போற்றி
92. ஓம் கரத்தலை ஒழிப்பாய் போற்றி
93. ஓம் ஒளவியம் அகற்றுவாய் போற்றி
94. ஓம் அறநெறி புகட்டுவாய் போற்றி
95. ஓம் அவாவினை அடக்குவாய் போற்றி
96. ஓம் அன்பினை வளர்ப்பாய் போற்றி
97. ஓம் ஊக்கமது அருள்வாய் போற்றி
98. ஓம் அமிர்த கணேசா போற்றி
99. ஓம் ஆக்கம் பெருக்குவாய் போற்றி
100. ஓம் வலம்புரி விநாயகா போற்றி
101. ஓம் வரமெல்லாம் தருவாய் போற்றி
102. ஓம் சித்தி விநாயகா போற்றி
101. ஓம் சிவபதம் அருள்வாய் போற்றி
104. ஓம் சுந்தர விநாயகா போற்றி
105. ஓம் சுக போகம் தருவாய் போற்றி
106. ஓம் அனைத்து ஆனாய் போற்றி
107. ஓம் ஆபத் சகாயா போற்றி
108. ஓம் அமிர்த கணேசா போற்றி….