தமிழ் மெய் எழுத்துக்கள் | Tamil Mei Eluthukkal

தமிழில் உயிர் எழுத்துக்கள் எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவு மெய் எழுத்துக்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தமிழ் மொழிக்கு உயிர் எழுத்துக்களும் மெய் எழுத்துக்களும் அடிப்படையான எழுத்துக்கள். க் முதல் ன் வரை உள்ள 18 எழுத்துக்களும் மெய் எழுத்துக்கள் ஆகும்.
மெய் எழுத்துக்களை ஒலிப்பது சற்று கடினம். மெய்யெழுத்துக்களில் சில எழுத்துக்கள் ஒரே ஒலி வருவது போல இருக்கும். ஆனால் அவற்றின் ஒலி மாறுபாடு இருக்கும், உச்சரிக்கும் போது கவனமாக உச்சரிக்க வேண்டும். மெய்யெழுத்துக்கள் உயிர் எழுத்துக்களுடன் சேர்ந்தே இயங்கும். மெய்யெழுத்துக்களை ஒற்றெழுத்துக்கள் என்றும் புள்ளிய எழுத்துக்கள் என்றும் கூறுவர்.
மெய் எழுத்துக்கள் வார்த்தைகள் | Tamil Mei Eluthukkal with Examples
Tamil Mei Eluthukkal Words | மெய் எழுத்துக்கள் சொற்கள்
| எழுத்து | வார்த்தை | 
| க் | காக்கை | 
| ங் | சிங்கம் | 
| ச் | பூச்சி | 
| ஞ் | இஞ்சி | 
| ட் | பட்டம் | 
| ண் | வண்டு | 
| த் | நத்தை | 
| ந் | பந்து | 
| ப் | கப்பல் | 
| ம் | மரம் | 
| ய் | நாய் | 
| ர் | மலர் | 
| ல் | பால் | 
| வ் | வௌவ்வால் | 
| ழ் | குமிழ் | 
| ள் | பள்ளம் | 
| ற் | சிற்பம் | 
| ன் | அன்பு | 
மேலும் அறிய: தமிழ் கடி ஜோக்ஸ் 2022
மெய் எழுத்துக்கள் வகைகள் | Tamil Letters
உயிர் எழுத்துக்களில் இருக்கும் குறில் நெடில் வேறுபாடு மெய் எழுத்துக்களில் இருக்காது.
மெய்யெழுத்துக்கள் மூன்று வகைப்படும். அவை
- வல்லினம்
- மெல்லினம்
- இடையினம்
வல்லினம்
மெய் எழுத்துக்களில் வன்மையாக ஒலிக்கும் எழுத்துக்களை வல்லின எழுத்துக்கள் என்று கூறுவர்.
க், ச், ட், த், ப், ற்
இந்த ஆறு மெய் எழுத்துக்களும் வல்லின எழுத்துகள் ஆகும்
மெல்லினம்
மெய் எழுத்துக்களில் மென்மையாக ஒலிக்கும் எழுத்துக்களை மெல்லின எழுத்துக்கள் என்று கூறுவர்.
ங், ஞ், ண், ந், ம், ன்
ஆகிய ஆறு மெய்யெழுத்துக்களும் மென்மையாக ஒலிப்பதால் மெல்லின எழுத்துகள் ஆகும்.
இடையினம்
மெய் எழுத்துக்களில் வன்மைக்கும் மென்மைக்கும் இடையில் ஒலிக்கும் எழுத்துக்களை இடையின எழுத்துக்கள் என்று கூறுவர்.
ய், ர், ல், வ், ழ், ள்
ஆகிய ஆறு மெய் எழுத்துக்களும் வன்மைக்கும் மென்மைக்கும் இடையில் ஒலிப்பதால் இடையின எழுத்துகள் ஆகும்
மேலும் அறிய: இந்த விடுகதைக்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா???

 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
							 
							 
							 
							 
							 
							