50+ கடி ஜோக்ஸ் விடுகதைகள் தமிழ் | Mokka Jokes in Tamil

Updated On

மொக்க ஜோக்ஸ் விடுகதை | Mokka Jokes Questions and Answers

உங்கள் மனதை மகிழவைக்கவும், உங்களை சிரிக்க வைக்கவும் சிறப்பான தமிழ் ஜோக்ஸ் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் படித்து மகிழுங்கள் மற்றும் உங்களின் நண்பர்கள், அன்பானவர்களுக்கு பகிர்ந்து அவர்களையும் சிரிக்க வையுங்கள்.

கடி ஜோக்ஸ் தமிழ் | Kadi Jokes in Tamil

அமைச்சர்: அவையில் போரைப்பற்றி பேசும்போது தான் மன்னர் வீரமா இருப்பார்..

ஒருவர்: போர்க்களத்தில்?

அமைச்சர்: ஓரமாக இருப்பார்.

 

விவேக்: ஒருவன் ஊதுபத்தி ஸ்டாண்டை முழுங்கிட்டான் ஆனா அவனுக்கு ஒன்னும் ஆகல…

வடிவேல்: ஏன்?

விவேக்: ஏன்னா அவன் சாப்பிட்டது வாழைப்பழத்தை…

 

ஒருவர் மாட்டுக்கு பாதம் பருப்பு கொடுத்தாராம் ஏன்?

ஏன்னா.. அப்பத்தானே மாடு பாதாம் பால் கொடுக்கும்..!!

கடி ஜோக்ஸ் அறுவை | New Kadi Jokes in Tamil

மனைவி: என்னங்க.. நான் புக்கை பார்த்து மைசூர்பாகு செஞ்சுருக்கேன்.

கணவன்: அந்த புக்ல மைசூர் பாகை எப்படி உடைக்கறதுனு போட்ருக்கா?

 

குடுக்கற தெய்வம் கூரையை பிச்சுக்கிட்டு கொடுக்கும்னு சொல்லுவாங்க…

நா கீழ் வீட்ல இருக்கேன். அப்ப எனக்கு கொடுக்கறதை எல்லாம் மேல் வீட்டுக்காரனே எடுத்துக்கறானோ??

 

நீதிபதி: கூண்டில் ஏறாமல் எதற்கு நடந்து கொண்டே சாட்சி சொல்கிறாய்?

குற்றவாளி: நீங்க தான் சார் நடந்ததை நடந்தபடி சொல்லச் சொன்னிங்க!

தமிழ் ஜோக்ஸ் | Jokes in Tamil

ஆசிரியர்: ராமு, பசிபிக் பெருங்கடலின் ஆழம் எவ்வளவு என்று சொல்

ராமு: 12784 மீட்டர், 55 சென்டி மீட்டர், 40 மில்லி மீட்டர். சார்…

 

ஆசிரியர்: இவ்வளவு துல்லியமா சொல்ரியே, நீ அளந்து பார்த்தியா?

ராமு: நாங்க சொல்றத சொல்வோம், சரியா தப்பான்னு நீங்க தான் அளந்து பார்க்கணும் சார்.

 

தலைவர்: என்னப்பா… மேடையில ஓடா வந்து விழுகுது??

தொண்டர்: மக்களிடம் ஓட்டை அள்ளி வீசுங்கன்னு சொன்னத தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க ..

 

நோயாளி: என்ன செலவானாலும் பரவாயில்லை எப்படியாவது என்னைக் காப்பாத்துங்க டாக்டர்!

மருத்துவர்: சபாஷ்…. டாக்டரை புரிஞ்சுக்கற இப்படிப்பட்ட பேஷண்ட் தான் எனக்கு வேணும்.

தமிழ் மொக்க ஜோக்ஸ் | Mokka Jokes in Tamil

உருளைக்கிழங்கு நிறைய சாப்பிட்டால் கால் வலிக்கும்னு சொல்றாங்க அது நடக்குது,

ஆனா வெண்டைக்காய் நிறைய சாப்பிட்டால் மூளை வளரும்னு சொல்றாங்க அதுமட்டும் நடக்கவே மாட்டிங்குது.

 

மகள்: என் மாமியார் இரயிலில் இருந்து கீழ விழுந்துட்டாங்கப்பா..!!

அப்பா: உடனே செயினை பிடிச்சு இழுக்கலையா?

மகள்: இழுத்தேன்ப்பா. But, செயின் மட்டும் தான் வந்துச்சு..!!

அப்பா: மாமியார்?

மகள்: விழுந்துட்டாங்கப்பா!!.

 

மனைவி: ஊர்ல இருந்து உங்க மாமனார் வர்றதா கடிதம் வந்துருக்குனு சொல்றியே.. உங்க அப்பான்னு சொல்லக்கூடாதா??

கணவன்: உங்க சொந்தக்காரங்களை தானே உனக்கு பிடிக்கும்..!! அதனால தான்

தமிழ் கடி ஜோக்ஸ் | Tamil Kadi Jokes

பயணி ஒருவர்: சார் உங்க ஊர்ல பப்பாளி சீப்பா கிடைக்குமா?

மற்றொருவர்: எங்க ஊர்ல இல்ல, நீங்க எந்த ஊர் போனாலும் சீப்பா கிடைக்காது. சிங்கிளாதான் கிடைக்கும்.

 

யாருக்காகவும் எதற்க்காகவும் இந்த மூன்று விஷயங்களை விட்டுக்கொடுக்காதீர்கள்..

காலை சாப்பாடு

மதிய சாப்பாடு

இரவு சாப்பாடு.

 

மகன்: அப்பா உங்களால இருட்டில் எழுதமுடியுமா?

அப்பா: ஓ முடியுமே.

மகன்: அப்படினா என்னோட ரேங்க் கார்டுல இப்ப கையெழுத்து போடுங்க..

Funny Jokes in Tamil

கணக்கு ஆசிரியர்: அறிவ பெருக்குங்கடா.. அப்ப தான் வாழ்க்கைல முன்னேற முடியும்.

மாணவன் : சார் அறிவ பெருக்க சொல்றிங்க அத எத்தனையால பெருக்கனுன்னு சொல்லவே மாட்றிங்களே.

 

கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாள்….., பொண்ணுக்கு அலங்காரம் பண்ணிய பியூட்டி பார்லர் அக்காவை தேடிப்போய் பரிசு கொடுத்தார் மாப்பிள்ளை. Apple iPhone 7 Box-யை அவர் கையில் கொடுத்தார்.

பார்லர் அக்காவுக்கு ஒரே சந்தோசம், அதை பிரித்து பார்த்தல் உள்ளே Nokia 1100.

அக்கா பேந்த பேந்த முழிக்க, மாப்பிள்ளை எரிச்சலோடு சொன்னார்…

“இப்படி தானே இருந்து இருக்கும் எனக்கும்”.

 

நோயாளி: பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய எவ்வளவு செலவாகும் டாக்டர்??

டாக்டர்: 5 லட்சம் ரூபாய் ஆகும்ங்க..!

நோயாளி: ஒருவேளை நாங்களே பிளாஸ்டிக் கொண்டுவந்துட்ட எவ்வளவு குறைப்பீங்க…??

Tamil Jokes SMS

காதலி: எனக்கு வேறு ஒருவரோடு நிச்சயம் ஆகிருச்சு…

காதலன்: எனக்கு முன்பே தெரியும்.

காதலி: எப்படி?

காதலன்: நேத்து நைட் குடுகுடுப்பைகாரன் வந்து நல்ல காலம் பொறக்குதுனு சொன்னான்.

 

எலிய என்ன பண்ண யானை ஆகலாம்?

எலிக்கு ஒரு பண்ட் (Pant) போட்ட எலிபெண்ட்(elephant) ஆகிடும்.

கடி ஜோக்ஸ் விடுகதைகள் தமிழ் | Kadi Jokes in Tamil with Answers New

டாக்டர்: நீங்க இன்னும் 2 மாசத்துக்கு மீன் முட்டை எல்லாம் சாப்பிடக்கூடாது.

நோயாளி: நல்லவேளை சார், கோழி முட்டை சாப்பிடக்கூடாது என்று சொல்லாமல் இருந்திங்களே…!

 

நபர்1: எப்படியோ கஷ்டப்பட்டு வீடு கட்டிட்டேன் . ஆனா பயமா இருக்கு.

நபர் 2: அதுதான் வீட்டை கட்டி முடித்து விட்டீர்களே பிறகு ஏன் பயம்?

நபர் 1: இந்த இடம் யாரு இடம்னே தெரியலை..!!

 

டேய் பூனை காதுல ஏன் பால ஊத்துற?

எங்க டீச்சர் தான் சொன்னாங்க பூனை வாயில்லாத ஜீவன்னு அதனால காதுல பால ஊத்துறேன்.

கடி ஜோக்ஸ் விடுகதைகள் தமிழ் | Mokka jokes questions and answers

நோயாளி: டாக்டர் பஸ்ல போகும்போது ஒரே தூக்கமா வருது.

டாக்டர்: சரி அப்படியே சாய்ந்து தூங்க வேண்டியது தானே?

நோயாளி: நான் படுத்துட்டா அப்பறம் பஸ் யார் ஓட்டுவது?

 

கணவன்: ஏம்மா ஒரு செருப்ப செலக்ட் பன்றதுக்கு, என் செருப்பு தேயுற அளவுக்கு நடக்க வைக்கறியே?

மனைவி: செருப்பையாவுது நல்லதா செலக்ட் பண்ணிக்கலாமேன்னு தான்..

 

ஓய்வெடுக்கும் சிகரம் எது?

எவரெஸ்ட்

 

இனி ஜென்மத்துக்கும் போகக்கூடாதுனு நினைச்சாலும் ரோஷம் கெட்டுப்போற இடம்…

ஒன்னு மாமியார் வீடு,

இன்னொன்னு facebook, Instagram

Husband Wife Jokes Tamil | New Kadi Jokes

ரோட்டுல போற நிறைய பேர் ஒருத்தர் கிட்ட மட்டும் அடிக்கடி time கேக்குறாங்க ஏன்?

ஏன்னா அவர் தான் வாட்ச்மேன்

 

மனைவி: என்னங்க.. டிராபிக் போலீஸ் எல்லார் வண்டியும் பிடிச்சாங்க, நம்ம வண்டிய மட்டும் விட்டுட்டாங்க..?

கணவன்: அதுவாம்மா.. அந்த போலீஸ் அதிகாரி சொன்னாரு, நீ ஏற்கனவே பிரட்சனைய கூட கூட்டிட்டு வர, உன் கூட எதுக்கு பிரச்சனை அப்படின்னு சொல்லி விட்டுட்டாரு..

 

“உங்கப்பா, உங்க தாத்தாவை விட எப்படிடா பெரியவங்க?”

“எங்கப்பா சாகும் போது வயது – 60.

எங்க தாத்தா சாகும் போது வயது – 40.”

 

நண்பன் 1: “எந்த விஷயத்திலும் கால தாமதம் செய்யக் கூடாது, சட்டென முடிவு எடுக்கணும்னு என் பையன் கிட்ட சொன்னது தப்பாப் போச்சு?”

நண்பர் 2: ஏன்? என்னாச்சு?

நண்பர் 1: நேற்றுதான் ஒரு பெண்ணை பார்த்தான், ஆனால் இன்றோ அவன் அவளை திருமணம் செய்து கூட்டிட்டு வந்துவிட்டான்.

Latest Kadi Jokes

“அந்த கண் டாக்டர் போலியானவர்ன்னு எப்படி கண்டுபிடிச்ச?

லாங்ஸைட், ஷார்ட்ஸைட்  தெரியும். ஆனால் அவர் வெப்சைட் என்றாரே”

 

பக்கத்து வீட்டுக்காரர்: ” ஏங்க, வீட்டு ஓனரை காலி பண்ணிட்டீங்க?”

குடியிருப்பவர்: “பின்னே என்னங்க, எப்பொழுது வந்தாலும் காலி பண்ணுங்க, காலி பண்ணுங்கன்னு சொல்லிட்டே இருந்தார்ங்க, அதான் காலி பண்ணிட்டேன்.”

 

மெகா சீரியல்களை கண்டால் ஏன் தலைவருக்கு பிடிக்கவில்லை?

பெண்களை அழ  வைத்து பார்க்க அவருக்கு சுத்தமாக பிடிக்காதாம்.

 

டாக்டர்: “இருமலுக்கு கொடுத்த மருந்தை ஏங்க இருமும் போது சாப்பிடவில்லை?”

நோயாளி: “எவ்வளவோ ட்ரை பண்ணியும் இருமும் போது குடிக்க முடியலை டாக்டர்.”

ஆசிரியர் & பையன் மொக்க ஜோக்ஸ் | Tamil Mokka Jokes

ஆசிரியை: “Dear students, ஆக்சிஜனை 1773ம் ஆண்டு கண்டுபிடித்தார்கள். ஆக்சிஜனை சுவாசிக்காவிட்டால் நாம் உயிர் வாழ முடியாது.”

குறும்பு மாணவன்: ” மிஸ் அப்போ இதற்க்கு முன்னால் மக்கள் எதை சுவாசித்தார்கள்?”

 

ஆசிரியர்: மாணவர்களே, எறும்பு பெருசா? யானை பெருசா?

மாணவன்: அப்படி எல்லாம் சும்மா சொல்லமுடியாது சார், பிறந்த தேதி தெரியணும்!!..

 

ஆசிரியர்: பாக்டீரியா படம் வரையச் சொன்னேனே?

இதுல படம் இல்லையே.

மாணவன்: நீங்கதானே சொன்னிங்க சார்,  பாக்டீரியா கன்னுக்குத் தெரியாது என்று.

மொக்க ஜோக்ஸ் இன் தமிழ் | Mokka Jokes in Tamil

அம்மா: ஏன்டா படிக்காமல் விளையாடுகிறாய்? இந்த வயசிலும் உன் அப்பா படிக்கிறார் பார்.

மகன்: என் வயதில் அவருக்கு படிப்பு வந்துருக்காதும்மா. நானும் அவர் வயது நன்றாகவே படிப்பேன்.

 

தொண்டர் 1: ஜாமினில் வெளி வந்த அமைச்சரை ஏன் உடனே கைது செய்தாங்க?

தொண்டர் 2: ஜெயிலில் கூட கைதிகளிடம் பண மோசடி செய்தாராம்.திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore