Murungai Keerai Soup Recipe | முருங்கைக் கீரை சூப்
முருங்கைக்கீரை சூப் செய்வது மிகவும் எளிது அதுமட்டுமல்லாது குறைவான நேரத்தில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்துவிடலாம். ஒரு பிடி முருங்கை கீரை மட்டும் இருந்தால் போதும். முருங்கை கீரையை பொரியல் அல்லது அவியலாக செய்தல் குழந்தைகள் சாப்பிட மறுப்பர் ஆனால் சூப் போல செய்தல் விரும்பி சாப்பிடுவர்.
முருங்கைக்கீரை சூப் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- முருங்கை கீரை – ஒரு கைப்பிடி அளவு
- நறுக்கிய சின்ன வெங்காயம் – 10
- நறுக்கிய தக்காளி – 1
- சீரகம் – கால் டீஸ்பூன்
- வெண்ணெய் அல்லது எண்ணெய் – அரை டீஸ்பூன்
- மிளகு தூள் -1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
- பூண்டு – 5 பல்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
- ஒரு கடாயில் வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்து சீரகம் தாளித்து பிறகு வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பூண்டை இடித்து அதனுடன் சேர்க்கவும்.
- நன்றாக வதங்கியதும் அதில் முருங்கை கீரை, மஞ்சள் தூள் சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து வேக விடவும்.
- அதை நன்கு கலந்து விட்டு சுமார் 5 லிருந்து 7 நிமிடம் வரை கொதிக்க விடவும்.
- 7 நிமிடத்திற்கு பிறகு அதில் மிளகு தூளை போட்டு அதை சுமார் 2 லிருந்து 4 நிமிடம் வரை அதை கொதிக்க விடவும்.
- 4 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு சூப்பை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதை மிதமான சூட்டில் பரிமாறவும்.
- சத்தான சுவையான முருங்கை கீரை சூப் தயார். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் கொடுக்கலாம்.